முகப்பு »  இருதயம் »  ஒருநாளுக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்!!

ஒருநாளுக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்!!

நாள் ஒன்றிற்கு 300 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உடலில் சேரும்போது, இருதய நோய்க்கான வாய்ப்பு 17 சதவிகிதமாக இருக்கிறது. 

ஒருநாளுக்கு எத்தனை முட்டை சாப்பிடலாம்!!

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் நாள் ஒன்றிற்கு 2 முட்டைக்கு மேல் சாப்பிடுபவர்களுக்கு இருதய நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  இந்த பரிசோதனை அமெரிக்காவில் மொத்தம் முப்பதாயிரம் பேரிடம் நடத்தப்பட்டது.  முப்பத்தியோரு வருடங்களாக அவர்களுடைய உணவு பழக்கம், வாழ்வியல் முறை மற்றும் உடல் ஆரோக்கியம் பொருத்து இந்த சோதனை நடத்தப்பட்டது.  அதில் நாள் ஒன்றிற்கு இரண்டுக்கும் அதிகமான முட்டை சாப்பிடுபவர்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறதென தகவல் வெளியாகியுள்ளது.   

முட்டையில் 200 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் இருப்பதால் இருக்கிறது.  நாள் ஒன்றிற்கு 300 மில்லிகிராம் கொலஸ்ட்ரால் உடலில் சேரும்போது, இருதய நோய்க்கான வாய்ப்பு 17 சதவிகிதமாக இருக்கிறது.  மேலும் 18 சதவிகிதம் இறப்பிற்கான அபாயமும் இருக்கிறது.  நாள் ஒன்றிற்கு ஒரு முட்டை என்ற வீதம் எடுத்துக் கொள்ளலாம். அதற்கும் மேல் எடுத்து கொண்டால் நிச்சயம் உடல் உபாதைகளை சந்திக்க வேண்டும்.  


கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------