முகப்பு »  இருதயம் »  முட்டை கொழுப்பு சத்தினை அதிகரிக்கிறதா? இதோ ஆய்வு கூறும் பதில் இதுதான்

முட்டை கொழுப்பு சத்தினை அதிகரிக்கிறதா? இதோ ஆய்வு கூறும் பதில் இதுதான்

அமெரிக்காவில் வயது வந்தோர் அன்றாடம் 300 மி.கி கொழுப்புச் சத்தினை பெறுகின்றனர். வாரத்திற்கு 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடுகின்றனர்.

முட்டை கொழுப்பு சத்தினை அதிகரிக்கிறதா? இதோ ஆய்வு கூறும் பதில் இதுதான்

ஒரு பெரிய முட்டையின் மஞ்சள் கருவில் 186 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது.

நீங்கள் சீஸ் ஆம்லேட் லவ்ரா..? அப்படியென்றால் அதிக முட்டைகள் மற்றும் கொழுப்புச் சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்வதை மீண்டும் யோசிக்கவும். இதய நோய் மற்றும் இறப்பிற்கான ஆபத்தை அதிகப்படுத்தலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். முட்டையின் மஞ்சள் கரு அதிக கொழுப்பு உள்ள உணவுகளில் ஒன்று . 

ஒரு பெரிய முட்டையின் மஞ்சள் கருவில் 186 மில்லி கிராம் கொழுப்பு உள்ளது. இந்த ஆய்வின் ஆசிரியர் நொரினோ ஆலன்,  முட்டைக்கருவில் அதிகளவு கொழுப்புச் சத்துள்ளது எனத் தெரிவித்துள்ளார். ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக மக்கள் குறைந்த அளவு கொழுப்புச் சத்துள்ள உணவினை எடுத்துக் கொள்ள வேண்டும். குறைவான கொழுப்புகளை உட்கொள்ளும் மக்கள் இதய நோயினால் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். 

இந்த ஆய்வு ஜேஏஎம்ஏ பத்திரிக்கையில் வெளியிடப்பட்டது. 29,615 வயது வந்தோர்களை ஆய்வில் ஈடுபடுத்தியது. ஒரு நாளைக்கு 300 மி.லி உணவுக் கொழுப்பு சாப்பிடுவதால் 17 சதவீதம் அதிகமான இதய நோய் அபாயமும் 18 சதவீதம் உயிரிழிப்புக்கான அபாயத்திற்கான ஆபத்து அதிகரித்துள்ளது. 


வாரம் 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடுவதால் 6 சதவிகிதம் அதிகமான இதய நோய் மற்றும் 8 சதவிகிதம்  இறப்புக்கான ஆபத்து உள்ளது. 2015 க்கு முன் 300 மி.கி. கொழுப்புக்கும் குறைவாக சாப்பிட வேண்டும் என்று பரிந்துரைத்தது. சமீபத்திய உணவுமுறை வழிகாட்டுதல்கள் உணவுக் கொழுப்புக்கான தினசரி வரம்பை தவிர்க்கின்றன. 

ஆரோக்கியமான உணவின் ஒரு பகுதியாக முட்டையை சேர்த்துக் கொள்ளலாம். அமெரிக்காவில் வயது வந்தோர் அன்றாடம் 300 மி.கி கொழுப்புச் சத்தினை பெறுகின்றனர். வாரத்திற்கு 3 அல்லது 4 முட்டைகள் சாப்பிடுகின்றனர். இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, உயர் கொழுப்பு பால் பொருட்கள் (வெண்ணெய் அல்லது விப்ட் க்ரீம்) அதிக கொலுப்பு நிறைந்த பொருட்களாக உள்ளன. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com