முகப்பு »  இருதயம் »  ஹார்ட் அட்டாக்கை முன் கூட்டியே தெரிந்துக் கொள்ள உதவும் அறிகுறிகள்!

ஹார்ட் அட்டாக்கை முன் கூட்டியே தெரிந்துக் கொள்ள உதவும் அறிகுறிகள்!

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் ஹார்ட் அட்டாக் வரும், ஆனால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது

ஹார்ட் அட்டாக்கை முன் கூட்டியே தெரிந்துக் கொள்ள உதவும் அறிகுறிகள்!

முன்பெல்லாம் வயதானவர்களுக்கு மட்டும் தான் ஹார்ட் அட்டாக் வரும், ஆனால் இப்போது அந்த நிலை தலைகீழாக மாறிவிட்டது. இதயத்தில் வலி, தசைப்பிடிப்பு, அழுத்தம், இறுக்கம், இதயத்தில் ஊசி குத்துவது போல் தோன்றுவது இதையெல்லாம் தான் பெரும்பாலான இதய நோயாளிகள் அறிவர்.

இவற்றைத் தவிர மேலும் சில அறிகுறிகள் ஹார்ட் அட்டாக்கை உணர்ந்துக் கொள்ள உதவும். அவை,

வலது, இடது அல்லது இரு கைகளிலும், தோள்பட்டையிலும் ஏற்படும் திடீர் வலி


இடது மார்பு மற்றும் தாடையின் வலி

தாங்க முடியாத வலி

வேர்வையுடன் கூடிய வலி

மயக்கம், வாந்தியுடன் கூடிய வலி

அழுத்தத்துடன் கூடிய வலி

அஜீரணத்துடன் கூடிய வலி

அதோடு இதயத்திலிருந்து வர வாய்ப்பு குறைவான வலியை கீழ்கண்ட அறிகுறிகளில் தெரிந்துக் கொள்ளலாம். அவை

சுவாசித்தலோடு கூடிய வலி

சில நொடிகளில் மறைந்து போகும் கூர்மையான வலி

நம்முடைய பொஸிஷன் மாறும் போது மாறக்கூடிய வலியின் தீவிரமும், தன்மையும்.

ஆக, மேற்கூறிய அறிகுறிகளில் ஹார்ட் அட்டாக்கை உணர்ந்துக் கொள்ளக் கூடிய வலி வந்தால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

இந்த கட்டுரை பயனுள்ளதாக இருந்ததா ஆம் or இல்லை

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------