முகப்பு »  இருதயம் »  தமணிகளை வலுவாக்கும் 5 உணவுகள்!!

தமணிகளை வலுவாக்கும் 5 உணவுகள்!!

மஞ்சளில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் தமணிகளின் சுவரை சேதமடையாமல் பாதுகாக்கிறது. 

தமணிகளை வலுவாக்கும் 5 உணவுகள்!!

சிறப்பம்சங்கள்

  1. ஒழுங்கற்ற உணவு பழக்கத்தால் கூட இருதய நோய்கள் ஏற்படும்.
  2. இரத்த ஓட்டம் சீராக இருக்க தமணிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
  3. நட்ஸ், சிட்ரஸ் பழங்கள், மீன் ஆகியவை இருதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

உடலில் தமணிகள் ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தத்தை இருதயத்திற்கு எடுத்து செல்கிறது.  உடல் முழுக்க இரத்தத்தை சீராக எடுத்து செல்ல தமணிகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.  தமணிகளில் அடைப்பு ஏற்பட்டால் இரத்த ஓட்டம் சீராக இருக்காது.  இதனால் மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் இருதய நோய்கள் ஏற்படும்.   நம் வாழ்வியல் முறையில் இருக்கக்கூடிய ஒழுங்கற்ற தன்மையும் இதற்கு முக்கிய காரணமாக இருக்கும்.  மேலும் கொலஸ்ட்ரால், புகைப்பழக்கம், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், மன அழுத்தம் மற்றும் மரபு பிரச்னை கூட தமணிகளில் அடைப்பு ஏற்பட காரணமாக இருக்கலாம்.  தமணிகளில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க முதலில் உணவு பழக்கத்தை சரி செய்ய வேண்டும்.  தமணிகளின் ஆரோக்கியத்தை காக்க இந்த ஐந்து உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.  

நட்ஸ்: 

நட்ஸில் ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது.  பாதாம், முந்திரி ஆகியவற்றை தினசரி சாப்பிட்டு வரலாம்.  இதில் மக்னீஷியம், இருப்பதால் தமணிகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.  மேலும் உடலுக்கு ஆற்றலை கொடுத்து ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.  


ஆலிவ்: 

சமையலுக்கு ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  இதில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கிறடு.  இதனை கொண்டு சாலட் தயாரிக்கலாம்.  இருதய நோய்களின் அபாயத்தை ஆலிவ் எண்ணெய் தடுக்கிறது.  

மஞ்சள்: 

மஞ்சளில் இயற்கையாகவே மருத்துவ குணங்கள் ஏராளமாக இருக்கிறது.  பலவிதமான உடல் உபாதைகளுக்கு மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது.  மஞ்சளில் ஆண்டி-இன்ஃப்ளமேட்ரி தன்மை இருப்பதால் தமணிகளின் சுவரை சேதமடையாமல் பாதுகாக்கிறது.  மேலும் தமணிகளில் கொழுப்பு தேக்கத்தை குறைக்கிறது.  தினமும் உணவில் மஞ்சளை சேர்த்து கொள்ளலாம்.  

சிட்ரஸ்: 

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருக்கிறது.  இதனால் இருதயம் மற்றும் தமணிகளின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.  எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை, கிவி போன்ற பழங்களில் வைட்டமின் சி உள்ளதால் தினமும் இவற்றை சாப்பிடலாம்.  

ut3lqe8 

மீன்கள்:

தமணிகள் ஆரோக்கியமாக இருக்க கொழுப்பு நிறைந்த மீன்களை சாப்பிட்டு வரலாம்.  ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருக்க கூடிய மீன்கள் அடிக்கடி உணவில் சேர்த்து கொண்டால் இருதய ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com