முகப்பு »  மருந்துகள் »  நெஞ்செரிச்சலை போக்கும் மாத்திரைகள் உயிரை பறிக்குமா??

நெஞ்செரிச்சலை போக்கும் மாத்திரைகள் உயிரை பறிக்குமா??

நெஞ்செரிச்சலை போக்க அடிக்கடி மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால் அது உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 

நெஞ்செரிச்சலை போக்கும் மாத்திரைகள் உயிரை பறிக்குமா??

உணவு பழக்கம் காரணமாக நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.  நெஞ்செரிச்சலை போக்க அடிக்கடி மாத்திரை சாப்பிடுகிறீர்கள் என்றால் அது உங்கள் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அல்சர், நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஆகிய பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு இறப்பு அதிவிரைவில் நெருங்கி விடுவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.  இந்த உடல் உபாதைகளை போக்க கொடுக்கப்படும் மாத்திரை மருந்துகளே இறப்பிற்கான சதவிகிதத்தை அதிகரிக்கிறது.  அதேபோல தொடர்ச்சியாக Proton pump inhibitors என்ற மருந்தை பயன்படுத்துவதால் இருதய நோய்கள், சிறுநீரக பிரச்சனை மற்றும் வயிற்றில் புற்றுநோய் ஆகியவை ஏற்படும்.  இந்த மருந்து Prevacid, Prilosec, Nexium, Protonix போன்ற பிராண்ட் பெயர்களில் விற்கப்படுகிறது.  இதே மருந்துகள் தான் நெஞ்செரிச்சலையும் தற்காலிகமாக சரி செய்கிறது.  


இந்த மருந்துகளை குறைவாக எடுத்து கொண்டால் அல்லது தொடர்ச்சியாக பல மாதங்கள் வரை எடுத்து கொண்டாலும் இறப்பிற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.  ஜூலை 2002 முதல் ஜூன் 2004 வரை 65 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்கள் 157625 பேருக்கு Proton pump கொடுக்கப்பட்டது.  பின் 56842 பேருக்கு புதிதாக H2 blocker என்ற மருந்து கொடுக்கப்பட்டது.  தொடர்ச்சியாக 10 வருடங்கள் 214467 பேரை கண்காணித்து வந்ததில், H2 Blocker பயன்படுத்தியவர்களை காட்டிலும் proton pump பயன்படுத்தியவர்களுக்கு 17 சதவிகிதம் இறப்பு விகிதம் உயர்ந்துள்ளது.  


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

ப்ரோட்டான் பம்ப் பயன்படுத்தியவர்களுள், ஆயிரத்துள் 15 பேருக்கு இருதய நோய்கள், 4 பேருக்கு சிறுநீரக நோய், 2 பேருக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.  இயற்கையான வழியில் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளை சரி செய்யலாம்.  தொடர்ச்சியாக மாத்திரை மருந்துகளை சாப்பிட்டு வந்தால் உடல் உறுப்புகளில் பக்க விளைவுகள் ஏற்படும்.  

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------