முகப்பு »  நீரிழிவு »  விழாக்கால நாட்களில் சுகரை கண்ட்ரோலாக வைத்துக் கொள்ள உங்களுக்கான ப்ளானிங் இதோ....

விழாக்கால நாட்களில் சுகரை கண்ட்ரோலாக வைத்துக் கொள்ள உங்களுக்கான ப்ளானிங் இதோ....

சர்க்கரை நோயாளிகள் இந்த விழா நாட்களில் உணவு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

விழாக்கால நாட்களில் சுகரை கண்ட்ரோலாக வைத்துக் கொள்ள உங்களுக்கான ப்ளானிங் இதோ....

சிறப்பம்சங்கள்

  1. Planning is key to managing blood sugar levels during the festive season
  2. Skipping meals can negatively impact blood sugar levels
  3. It's not just what you eat but how much you eat that matters

பொங்கல் விடுமுறை  அடுத்தடுத்து வரப்போகும் நிலையில் சர்க்கரை நோயாளிகள் இந்த விழா நாட்களில் உணவு முறைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பலரின் வீட்டில் விதவிதமான உணவுகளும் அக்கம்பக்கதார் கொடுக்கும் விதவிதமான இனிப்பு வகைகள் என வீடே உணவுப் பொருட்களால் நிறைந்திருக்கும். விழாக்காலங்களில் உங்களின் குடும்பத்தாரோடு மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்டு, விருப்பப்படி சில உணவுகளை சாப்பிட்டு பொங்கலை கொண்டாடலாம். எதையும் ப்ளான் பண்ணாமல் செய்ய முடியாது அல்லவா.... உங்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்றவகையில் விழாக்கால கொண்டாட்டத்திற்கான சில திட்டமிடலாக மருத்துவர் பூர்வி வர்மாவின் ஆலோசனைகளை உங்களுக்குத் தொகுத்து தருகிறது Doctor NDTV தமிழ்.

குறைவான கலோரி:

வெளியிடங்களில் ஏதேனும் நிகழ்விற்கு நீங்கள் சென்று அந்த இடங்களில் சாப்பிட நேர்ந்தால், அங்குள்ள உணவுகளில் குறைவான கலோரி உடைய உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். நீங்கள் சாப்பிடும் உணவுகள் உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகப்படுத்தி விடக் கூடாது என்பதில் கவனமாக இருங்கள். உங்களின் நண்பர்களின் வீட்டிற்கு சென்றால் அங்கு மெனுவை கேட்டு உங்களின் ஆரோக்கியத்திற்கு ஏற்ற சில உணவு செய்யச் சொல்லி சாப்பிடுங்கள்.


உணவை தவிர்க்க வேண்டாம்

சர்க்கரை நோயாளிகள் உணவை சாப்பிடாமல் தவிர்க்கும் போது கூடுதல் விளைவுகளை எதிர் கொள்ள நேரிடலாம். உணவை சிறு சிறு பகுதியாக பிரித்து சாப்பிடுவது இரத்தின் அளவை சரியாக வைத்துக் கொள்ள உதவுகிறது.

அதிகமான நீர் குடியுங்கள்

உங்களின் உடலை நீர்ச்சத்து குறைந்து விடாமல் கவனித்துக் கொள்ளுங்கள். தேசிய சுகாதார மற்றும் ஊட்டச்சத்து தேர்வு நடத்திய சர்வேயில், நன்றாக தண்ணீர் குடித்து வந்தால் குறைவான சர்க்கரை, உப்பு, கொழுப்பு கொண்ட உணவுமுறைக்கு மாறுவதற்கு நிகரானது என்று கண்டுபிடித்துள்ளனர். சுகர் கலந்த குளிர்பானங்களை தவிர்த்துவிட்டு தண்ணீரை அதிகளவில் குடிப்பது நல்லது.

தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள்

கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகள் உடலுக்கு சிறந்த ஊட்டச்சத்தினை வழங்கக் கூடியவை. கொழுப்பு மற்றும் புரதங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கின்றன. ரிஃபைண்ட், பிராசஸ் செய்யப்பட்ட உணவுகளை தவிர்த்து விடுங்கள். நார்ச்சத்து மிக்க உணவுகளையும் காய்கறிகளையும் அதிகம் சாப்பிடுங்கள்.

பொறுமையாக சாப்பிடுங்கள்

உணவினை பொறுமையாக மென்று அரைத்து சாப்பிடும் போது எச்சிலோடு கலந்து சாப்பிடுவதால்  உணவு எளிதில் ஜீரணமடைந்து விடுகின்றன. பொறுமையாக சாப்பிடும் போது கூடுதலாக தண்ணீர் குடிப்பதால், உணவின் அளவும் குறைந்து விடுகிறது.


டெஸர்ட் டைம்

விழா என்றால் இனிப்பு பண்டங்கள் இல்லாமல் இருக்குமா. இனிப்பு சாப்பிடுங்கள் உணவில் ஒரு பகுதியை குறைத்து விட்டு இனிப்பு பலகாரங்களை சாப்பிடுங்கள். இனிப்பையும் அளவாக சாப்பிட்டு முடித்துக் கொள்ளுங்கள்.

நடை

விடுமுறை நாட்களில் கொண்டாட்டங்கள் இருந்தாலும். உணவுக்குப் பின் குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நடைப் பயிற்சி செய்யுங்கள். 

உடற்பயிற்சிக்கு திரும்புங்கள்

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com


Sources:

1) https://www.ncbi.nlm.nih.gov
2) https://ndb.nal.usda.gov/ndb/foods/show/3635?manu=&fgcd=&ds=
3) http://www.diabetes.org/food-and-fitness/food/what-can-i-eat/understanding-carbohydrates/glycemic-index-and-diabetes.html
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

-------------------------------- விளம்பரம் -----------------------------------