முகப்பு »  நீரிழிவு »  நீரிழிவு நோயாளிகளே உஷார்

நீரிழிவு நோயாளிகளே உஷார்

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA), நீரிழிவு நோயாளிகள் மற்றும் டாக்டர்களைச் சமீபத்தில் எச்சரித்துள்ளது

நீரிழிவு நோயாளிகளே உஷார்

அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA), நீரிழிவு நோயாளிகள் மற்றும் டாக்டர்களைச் சமீபத்தில் எச்சரித்துள்ளது. அதன்படி, நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் தன்மையைக் கொண்ட சில மருந்துகளை ஒருவர் தொடர்ந்து பயன்படுத்தும்போது, சில சந்தர்ப்பங்களில் அவை அவர்களின் பிறப்புறுப்பில் சதையைத் தின்னக்கூடிய கிருமி தொற்றை ஏற்படுத்தும் எனத் தெரிய வந்துள்ளது. Fourier’s Gangrene எனப் பெயரிடப்பட்டிருக்கும் இது, மார்ச் 2013 – மே 2018 வரையிலான காலகட்டத்தில் இந்த மருந்துகளை உட்கொண்ட 12 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 7 ஆண்கள் மற்றும் 5 பெண்கள் அடக்கம். இவர்கள் அனைவருமே மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் ஒருவர் இறந்துவிட்டதாக அமெரிக்காவின் Food And Drug Admininstration அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கிருமி தொற்றைப் பற்றி நாம் மேலும் தெரிந்துக் கொண்டு எச்சரிக்கையாக இருப்பதே சிறந்தது.

பிரச்சனைக்குரிய அந்த மருந்துகள் என்ன?

Johnson & Johnson's Invokana, AstraZeneca Plc's Farxiga, Eli Lilly & Co.'s Jardiance ஆகிய நீரிழிவு மருந்துகள், இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. SGLT2 Inhibitors (நோய் தடுப்பான்) என அழைக்கப்படும் இந்த 3 மருந்துகளும், முறையே 2013 - 2013 - 2016 ஆகிய ஆண்டுகளில் இதற்கான ஒப்புதலைப் பெற்றுவிட்டன! சிறுநீரகத்தின் உதவியுடன் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவைக் குறைக்கும் பணியைச் செய்யும் இவை, உடலில் அதிகப்படியாக இருக்கும் சர்க்கரையை சிறுநீரின் மூலம் வெளியே அனுப்பிவிடுகின்றன! ஆனால் சிறுநீர் பாதையில் நோய் தொற்று ஏற்படுவதே, இந்த மருந்தைத் தொடர்ந்து பயன்படுத்துவதில் ஏற்படும் பக்க விளைவுகள் ஆகும்.


ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

கடந்த 30 ஆண்டுகளாக, நீரிழிவு மருந்துகள் பற்றிய ஆய்வை மேற்கொண்ட FDA, இதுவரை 6 ஆண் நோயாளிகள் Fourier’s Gangrene நிலையால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளது. உலகளவில் நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால், வருகின்ற 2020 ஆண்டுக்குள்ளாக இவ்வகை மருந்துகளின் விற்பனை, 7.1 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தகம் நடைபெறும் என BloomBerg Intelligence-ன் ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. இதன்படி பார்த்தால், கடந்த ஆண்டில் நீரிழிவு நோயால் தோராயமாகப் பாதிக்கப்பட்ட 1.7 மில்லியன் மக்கள், முன்னே சொன்ன 3 மருந்துகளில் ஏதாவது ஒன்றைத் தொடர்ந்து உட்கொள்ளுமாறு டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர்! இதனால் எந்த மருந்து யாரைப் பாதிக்கும் என்பதைக் கண்டுபிடிப்பது மிகவும் சிரமம்.

வேறு மருந்துகள் ஏதேனும் இதே பாதிப்பைத் தருகின்றனவா?

நீரிழிவு நோய்க்கான மருந்தாகச் சமீபத்தில் ஒப்புதல் பெற்ற Merck & Co.'s Steglujan, Fourier’s Gangrene நிலை பாதிப்பைத் தரும் எனத் தெரியவந்துள்ளது. இப்படியே தொடர்வது நல்லதல்ல என்பதால், இப்படிப்பட்ட மருந்துகளைத் தயாரிப்பவர்கள் தமது தயாரிப்புகளைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது ஏற்படும் பக்கவிளைவுகள் பற்றித் தெளிவாக எடுத்துரைப்பது அவசியமாகிறது (சிகரெட் மற்றும் பான் பாக்கெட்டில் இருப்பதுபோல).

மருந்து நிறுவனங்களின் விளக்கம் என்ன?

முன்னே சொன்ன 3 மருந்துகளில் ஒன்றான Plc's Farxiga-வைத் தயாரித்திருக்கும் AstraZeneca நிறுவனம், FDA அமைப்புடன் சேர்ந்து அந்த மருந்திற்கான லேபிளில் பக்கவிளைவுகள் பற்றி அச்சிட உள்ளதாகச் சொல்லியுள்ளது. மேலும் இந்த மருந்தைத் தயாரிக்கும்போது, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி பணிகளின்போது Fourier’s Gangrene நிலை யாருக்கும் ஏற்படவில்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளது. மற்ற 3 மருந்துகளைத் தயாரித்திருக்கும் நிறுவனங்களிடம் விளக்கம் கேட்பதற்காக அவர்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, அவர்கள் பதிலளிக்கவில்லை என்பதை இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.

நோயாளிகளுக்கான தீர்வு என்ன?

இத்தகைய நீரிழிவு மருந்துகளைத் தொடர்ந்து உட்கொள்ளும் நீரிழிவு நோயாளிகள், தமது பிறப்புறுப்பில் வீக்கம் - சிவந்து போதல், திடீரென மென்மையாவது ஆகியவை நடந்தாலோ அல்லது லேசான ஜூரம் ஏற்பட்டாலோ, உடனடியாக மருத்துவரைச் சென்று பார்ப்பது நலம் என FDA கூறியுள்ளது. காலப்போக்கில் இவை மேலும் தீவிரமடையும் என்பதால், நோயாளிகள் காலம் தாழ்த்தாமல் செயல்பட வேண்டும் என அறிவுறுத்துகிறோம்!

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------