முகப்பு »  குழந்தை »  கோடை வெப்பத்திலிருந்து உங்கள் குழந்தைகளின் சருமத்தை பாதுகாத்திடுங்கள்!!!

கோடை வெப்பத்திலிருந்து உங்கள் குழந்தைகளின் சருமத்தை பாதுகாத்திடுங்கள்!!!

பிஞ்சு குழந்தைகளால் கோடை வெப்பத்தால் ஏற்படும் கொப்புளங்கள், வியர்குரு ஆகியவற்றை தாங்கி கொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள். 

கோடை வெப்பத்திலிருந்து உங்கள் குழந்தைகளின் சருமத்தை பாதுகாத்திடுங்கள்!!!

குழந்தைகளில் ஆரோக்கியம் குறித்து ஒவ்வொரு பெற்றோரும் கவலைப்பட்டு கொண்டுதான் இருப்பார்கள்.  சளி, காய்ச்சல் தொந்தரவு தான் அடிக்கடி குழந்தைகளை பாடாய்படுத்திக் கொண்டு இருக்கும்.  அதுபோக கோடை காலத்தில் சரும பிரச்னைகள் படையெடுக்க ஆரம்பித்துவிடும்.  பிஞ்சு குழந்தைகளால் கோடை வெப்பத்தால் ஏற்படும் கொப்புளங்கள், வியர்குரு ஆகியவற்றை தாங்கி கொள்ள முடியாமல் சிரமப்படுவார்கள். 

அதனால் கோடை காலத்தில் குழந்தைகளின் சருமத்தின் மீது அதிகபடியான அக்கறை செலுத்த வேண்டும்.  சருமத்தை ஈரப்பதத்துடனும், பாதிப்புகளிலிருந்தும் குழந்தைகளை பாதுகாக்க சில வழிமுறைகள் உள்ளது. 


  • கேலமனைன், வேம்பு, வெட்டிவேர், தர்பூசணி, எலுமிச்சை எண்ணெய், யாஷதா பாஷ்மா, கற்றாலை, பாதாம் எண்ணெய் ஆகியவை உங்கள் குழந்தைகளில் சருமத்திற்கு உகந்த இயற்கை பொருட்கள்.  இவற்றை பயன்படுத்தி தயாரிக்கப்படும் சோப், லோஷன், பௌடர் போன்றவற்றை பயன்படுத்தலாம். 
  • குழந்தைகளை குளிக்க வைக்கும்போது, தர்பூசணி, வேம்பு மற்றும் எலுமிச்சை எண்ணெய் சேர்க்கப்பட்ட சோப் அல்லது வாஷ் பயன்படுத்துங்கள்.  இது சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.  ரேஷஸ் மற்றும் அரிப்பு போன்றவற்றை சரிசெய்யும்.
  • கோடை வெப்பத்தால் குழந்தைகளுக்கு உடலில் ஆங்காங்கே சிறு கொப்புளங்கள் மற்றும் தடுப்புகள், சருமம் சிவந்து போதல் போன்ற பிரச்னைகள் இருக்கும்.  அதனை சரிசெய்ய குழந்தைகளுக்கு உகந்த ஆடைகளையே அணிய செய்யலாம்.  குளித்து முடித்த பிறகு சரும பிரச்னைகளை சரிசெய்யும் பௌடர்களை போட்டுவிடலாம்.  இது வியர்வையினால் உண்டாகும் சரும பாதிப்புகளை போக்கிவிடும்.
  • குழந்தைகளுக்கு நிறைய நீராகாரம் கொடுக்க வேண்டும்.  பழச்சாறுகளையும் கொடுக்கலாம் அல்லது கீரைகள், பழங்கள் கொடுக்கலாம்.  இதன்மூலம் உடல் சூடு தணியும். (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com