முகப்பு »  குழந்தை »  குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்…. இதை படிங்க!!

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்…. இதை படிங்க!!

சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், உடல் பருமனான குழந்தைகளை பள்ளியிலோ அல்லது குடும்பத்திலோ அல்லது நண்பர்களோ கிண்டல் செய்யும்போது, அது அந்த குழந்தையின் உடல் எடையை 33 சதவிகிதம் மேலும் அதிகரிக்க செய்கிறதாம்.

குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க இதுவும் ஒரு காரணம்…. இதை படிங்க!!

தற்போதைய குழந்தைகள் எல்லோருமே உடல் பருமனாகவும், அபார வளர்ச்சியடைந்தும் இருக்கிறார்கள்.  காரணம், அவர்களின் உணவு பழக்கம் மற்றும் வாழ்வியல் முறை.  குழந்தைகள் வெளியே சென்று ஓடியாடி விளையாட விரும்புவதேயில்லை.  எப்போது கையில் அலைபேசி மற்றும் வீடியோ கேம்ஸ் போன்றவற்றையே பயன்படுத்தி வருகிறார்கள்.  இதன் விளைவாக, கண்ணில் பார்வை குறைபாடு, உடல் பருமன் போன்ற உடல் உபாதைகள் ஏற்படுகிறது.  சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வில், உடல் பருமனான குழந்தைகளை பள்ளியிலோ அல்லது குடும்பத்திலோ அல்லது நண்பர்களோ கிண்டல் செய்யும்போது, அது அந்த குழந்தையின் உடல் எடையை 33 சதவிகிதம் மேலும் அதிகரிக்க செய்கிறதாம்.  தோற்றத்தை குறித்த கேலி, கிண்டல் பேச்சுகளை சவாலாக எடுத்துக் கொண்டு உடல் எடை குறைக்க முயற்சி செய்வார்கள் என்ற தவறான புரிதல் இங்கு பெரும்பாலானோர்க்கு இருக்கிறது.  முதலில் இதனை மாற்ற வேண்டும் என்று குழந்தைகள் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.  

இந்த ஆய்வு, 11.8 வயதில் உள்ள 100 குழந்தைகளிடம் நடத்தப்பட்டது.  இதில் கலந்து கொண்ட குழந்தைகள் அனைவருமே உடல் பருமனானவர்கள்.  உடல் தோற்றம் குறித்து விமர்சிக்கப்பட்ட குழந்தைகள் வருடத்திற்கு .20 கிலோகிராம் அதிகரிக்கிறதாம்.  மேலும் தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை போன்றவை அதிகரிக்கிறது.  அதுமட்டுமல்லாமல், மன அழுத்தம் காரணமாக உடலில் கார்டிசால் என்னும் ஹார்மோன் அதிகபடியாக சுரக்க செய்து உடல் பருமனை அதிகரிக்க செய்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.  


கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------