முகப்பு »  குழந்தை பராமரிப்பு »  குழந்தைகளுக்கு டிவி பார்க்கும் பழக்கம் உள்ளதா...? ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்

குழந்தைகளுக்கு டிவி பார்க்கும் பழக்கம் உள்ளதா...? ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்

4 வயதில் படுக்கையறையில் இருந்து டிவி பார்க்கும் பழக்கமும் நரம்பியல் வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருப்பதை நிரூபித்துள்ளது.

குழந்தைகளுக்கு டிவி பார்க்கும் பழக்கம் உள்ளதா...? ஆய்வு கூறும் அதிர்ச்சி தகவல்

அதிக நேரம் டீவி பார்ப்பதால் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, குறைவாக சாப்பிடுவது வழக்கமாகிறது.

குழந்தைகள் அதிக நேரம் தொலைக்காட்சியை பார்க்கும் போது குழந்தைகளின் வளர்ச்சி பாதிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது. 

குழந்தைகளின் வளர்ச்சிக் காலத்தில் ஆரம்ப கட்டங்கள் எவ்வளவு முக்கியத்துவம் ஆனது என்பதை பற்றி பலரும்  எடுத்துக் கூறி வருகின்றனர்.  அதிக நேரம் டீவி பார்ப்பதால்  குழந்தைகளின் மூளை வளர்ச்சி, குறைவாக சாப்பிடுவது மற்றும் டீன் ஏஜ்ஜில் சமூக உணர்வுகளை புரிந்து கொள்வதிலும் சிக்கல் இருப்பதை பார்க்க முடிகிறது. 

பெற்றோர்கள் தங்களின் ஓய்வு நேரத்தை எப்படி தங்களின் செலவழிக்கிறார்கள் என்பதுதான் குழந்தைகளின் நீண்ட கால மன நல வளர்ச்சிக்கு உதவுகிறது. குழந்தைகளின் செயல்களை செம்மைப் படுத்துகிறது. குறிப்பாக டிவியை தனியாக பெட் ரூம்களின் பார்க்கும் பழக்கமுள்ள குழந்தைகளுக்கு கூடுதலாக அவர்களின் வளர்ச்சி பாதிப்படைகிறது என்று ஆய்வின் விஞ்ஞானி லிண்டா பகானி தெரிவித்துள்ளார். இந்த ஆய்வின் ஹைப்போதிஸிஸ் டெஸ்டில், 4 வயதில் படுக்கையறையில் இருந்து டிவி பார்க்கும் பழக்கமும் நரம்பியல் வளர்ச்சிக்கும் நேரடி தொடர்பு இருப்பதை நிரூபித்துள்ளது.


குழந்தைகள் பதின்ம வயதை அடையும் போது உடலளவிலும் மனதளவிலும் சமூக உணர்வுகளை புரிந்து கொள்வதில் பிரச்னைகள் ஏற்படுகிறது. இந்த ஆய்வு 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் டிவி பார்ப்பது அவர்களின் ஒட்டுமொத்த வளர்ச்சி பாதிப்பதுடன் உளவியல் ரீதியான பாதிப்புகளையும் அதிகரிக்கிறது.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

ஆராய்ச்சியாளர்கள் பெற்றோர்களின் வழி நடத்தல் இல்லாமல் குழந்தைகள் தனியாக டிவி பார்ப்பதை தவிர்க்க வேண்டும். அப்படியில்லையென்றால் குழந்தைகளின் நீண்ட கால வளர்ச்சி பாதிக்கப்படும் என்பதை இந்த ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------