முகப்பு »  புற்றுநோய் »  சோயா உணவுகளால் உண்டாகும் நன்மைகள்!!

சோயா உணவுகளால் உண்டாகும் நன்மைகள்!!

சோயா உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் எலும்பு முறிவுகள் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்க முடியும். 

சோயா உணவுகளால் உண்டாகும் நன்மைகள்!!

சோயா உணவுகளை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் எலும்பு முறிவுகள் மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் உருவாகாமல் தடுக்க முடியும்.  இது குறிப்பாக மாதவிடாய் முடியும் காலத்திலும் மார்பக புற்றுநோய் உண்டாகி பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எலும்பு பிரச்சனைகளும் உருவாவதாக தகவல் வெளியாகியுள்ளது.  சோயா உணவுகளை அதிகம் பயன்படுத்தியவர்களுக்கு 77 சதவிகிதம் எலும்பு சார்ந்த பிரச்சனைகள் வராமல் தடுக்கப்படுகிறது.  குறிப்பாக இளம்வயது பெண்களிடம் உண்டாகும் இந்த நோய் குறித்து ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.   உடற்பயிற்சி மற்றும் சோயா உணவுகளை தொடர்ச்சியாக பின்பற்றியவர்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு குறைவாக உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.  

20 முதல் 75 வயது வரையுள்ள பெண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு பின் குணமாகியுள்ளனர்.  மொத்தம் 5042 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  சோயா உணவுகளில் ஐசோஃப்ளேவோன்ஸ் இருப்பதால் எலும்பு அடர்த்தி அதிகரிக்கிறது.  மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல சிகிச்சைகள் கொடுக்கப்படும்.  இதனால் மெனோபாஸ் முன்கூட்டியே வந்துவிடும்.  மேலும் எலும்பு அடர்த்தி குறைந்து ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சனை ஏற்படும்.  எட்டு பெண்களுள் ஒரு பெண்ணிற்கு மார்பக புற்றுநோய் உருவாகிறது.  புற்றுநோய்களிலே மிக எளிதில் தாக்கக்கூடியது மார்பக புற்றுநோய்தான்.  


சோயா நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் புற்றுநோயால் உண்டாகும் மற்ற உடல் உபாதைகளை தடுக்க முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.  சோயா பால், சோயா நட்ஸ், டோஃபு, டெம்பே, எடாமாம் போன்றவற்றை சாப்பிடலாம். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com