முகப்பு »  புற்றுநோய் »  இந்த டீதான் மார்பக புற்றுநோயைத் தடுக்கக் கூடியது..!

இந்த டீதான் மார்பக புற்றுநோயைத் தடுக்கக் கூடியது..!

ஒலாங் டீ, க்ரீன் டீயைக் காட்டிலும் புற்றுநோய் செல்களின் பெருக்கம் மற்றும் முன்னேற்றத்தை வலுவாக தடுக்கிறது.

இந்த டீதான்  மார்பக புற்றுநோயைத் தடுக்கக் கூடியது..!

ஒலாங் டீ மார்பக புற்று நோயைத் தடுப்பதோடு அதில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன

நீங்கள் ஒரு டீ லவ்வராக இருந்தால் இந்த நியூஸ் நிச்சயமாக மகிழ்ச்சியைக் கொடுக்கும் ஒலாங் டீ மார்பக புற்று நோயைத் தடுப்பதோடு அதில் பல ஆரோக்கியமான நன்மைகள் உள்ளன. ஒலாங் டீ என்பது சீன தேநீர் வகை, இது இதயத்திற்கும் மூளைக்கும் மிகவும் நல்லது. சர்க்கரை நோயினைத் தடுக்கிறது. 

பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்படும் ஒலாங் டீயை ஆய்வக சோதனைக்கு உட்படுத்தினர். இது மார்பக புற்றுநோய்களின் வளர்ச்சியை நிறுத்தியது. கேன்சர் செல்களின் டிஎன்ஏவை வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை தடுக்கிறது. 

க்ரீன் டீயிலும் இதே போன்ற நன்மைகள் உள்ளன என்று காட்டப்பட்டது. ப்ளாக் மற்றுக் டார்க் டீ வகை இந்த கேன்சர் செல்களில் சிறிதளவு விளைவை மட்டுமே ஏற்படுத்தியது.  ஆராய்சியின் முடிவில் ஒலாங் டீ, க்ரீன் டீயைக் காட்டிலும் புற்றுநோய் செல்களின் பெருக்கம் மற்றும் முன்னேற்றத்தை வலுவாக தடுக்கிறது என்று மிசோரியில் உள்ள செயிண்ட் லூயிஸ் பல்கலைக்கழகத்து ஆராய்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் ஆராய்சியாளர்கள் சீனா முழுவதும் புற்று நோய் பாதிப்பினால் இறந்தவர்களின் எண்ணிக்கையை பகுப்பாய்வு செய்தது. இதில் கண்டுபிடிக்கப்பட்ட முடிவுகளைஆண்டிகேன்சர் ரிசர்ஜ் பத்திரிக்கையில் வெளியிட்டது. அதிகளவு ஒலாங் டீ யை  குடிப்பதனால் நோய்கள் குறைந்துள்ளது என்பதை வெளிக்காட்டியது. ஃபிஜியன் மாகாணத்தில் மார்பக புற்று நோய் தேசிய அளவில் 35 சதவீதம் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தது 


ஃபிஜியனில் உள்ள ஒலாங் தேயிலையை பயன்படுத்துவோரில்  இறப்பு விகிதம் குறைவாக இருந்தது. இது தேசிய சராசரியை விட 68 சதவிதம் குறைவு. ஒலாங் டீயை அதிகளவில்  அருந்துபவர்களுக்கு குறைவான நோயே உருவாகிறது. மேலும் இது மார்பக புற்று நோய்க்கு எதிரான பண்புகளை கொண்டுள்ளது என்று கூறுகின்றனர்.  

நோய்த்தடுப்பு மற்றும் ஆரம்பக் கட்டத்தில்  நோயைக்கண்டறிதல் ஆகியவற்றால் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்றும் தெரிவித்தது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------