முகப்பு »  புற்றுநோய் »  புற்று நோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு

புற்று நோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு

அமெரிக்க இந்தியர் அதித்தி தாஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்

புற்று நோய் உயிரணுக்களின் வளர்ச்சியை தடுக்கும் ஒமேகா-3 கொழுப்பு

சிறப்பம்சங்கள்

  1. மீன் மற்றும் நட்ஸ் இந்த ஒமேகா 3 கொண்டது
  2. உடலில் உள்ள EDPக்கள், வலி நிவாரணியாக செயல்பட கூடியது
  3. இரத்த குழாய்களில் புற்று நோய் உயிரணுக்கள் கலப்பதை EDPக்கள் தடுத்துள்ளன
ஒமேகா-3 கொழுப்பு அமிங்கள் கொண்ட உணவு பொருட்களை சாப்பிடுவதனால், இருதய பாதிப்புகள், மூட்டு வலி பிரச்சனைகள் ஏற்படாது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
இலியோனிஸ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த அமெரிக்க இந்தியர் அதித்தி தாஸ் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டுள்ளார்.  ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களில் இருக்க கூடிய EDP எனப்படும் எண்டாகானாபினாய்டு எபோசைட்ஸ்,  புற்று நோய் உயிரணுக்கள் வளராமல் கட்டுக்குள் வைக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது
 
“உடலில் உள்ள EDPக்கள், வலி நிவாரணியாகவும், வீக்கம் குறைக்க கூடிய தன்மையையும் பெற்றுள்ளது. தற்போது புற்று நோய் எதிர்ப்பு சக்தியையும் பெற்றுள்ளது” என்று அதித்தி தாஸ் தெரிவித்துள்ளார்
 
எலும்பு புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள எலியின் மீது சோதனை நடத்தப்பட்டது. அதில், EDPக்கள் செலுத்திய பின்பு, புற்று நோய் உயிரணுக்கள் வளர்ச்சி குறைவதை கண்டறிந்துள்ளனர். மேலும், புற்று நோய் உயிரணுக்களை அழிக்கும் தன்மை கொண்டுள்ளது என்று ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன
 
கீமோதெராபி சிகிச்சை அளவு EDPக்கள் செயல்படவில்லை இருந்தாலும், குறைந்த அளவில் புற்று நோய் உயிரணுக்களை அழித்துள்ளது. உடலில் உள்ள இரத்த குழாய்களில் புற்று நோய் உயிரணுக்கள் கலப்பதை EDPக்கள் தடுத்துள்ளன.  இதனால், EDPக்கள் நிறைந்த ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவு பொருட்களை சரியான அளவு எடுத்து கொள்ள வேண்டும் என்று அதித்தி தாஸ் தெரிவித்தார். மீன், நட்ஸ் போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன.

 

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------