முகப்பு »  குழந்தை »  உங்கள் குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? பேபி வியரிங் முயற்சி செய்யுங்கள்

உங்கள் குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? பேபி வியரிங் முயற்சி செய்யுங்கள்

குழந்தைகளை தோள் தொட்டிலில் தூக்கி கொள்வதினால், இரவு நேரங்களில் குழந்தைகள் அழுவது 51% குறைந்துள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது

உங்கள் குழந்தை அழுது கொண்டே இருக்கிறதா? பேபி வியரிங் முயற்சி செய்யுங்கள்

சிறப்பம்சங்கள்

  1. இரவு நேரங்களில் குழந்தைகள் அழுவது 51% குறைந்துள்ளது
  2. உடல் எடைக்கு ஏற்ப, தோள் தொட்டில்களின் அளவை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம்
  3. முக்கியமாக, தரமான தோள் தொட்டில்களை தேர்ந்தெடுக்க வேண்டும்
உங்கள் கைக்குழந்தை தொடர்ந்து அழுகிறதா? குழந்தைகளை கையில் தூக்கி
வைத்தால், அழுகை நிறுத்திவிடும் என்பது நாம் அறிந்தது. ஆனால், நாம் போகும்
இடமெல்லாம் குழந்தையை கையில் வைத்திருக்க கடினமாக இருக்கும்.
குழந்தைகளை எளிதாக தூக்கி கொள்ள வசதியாக, பேபி வியரிங் எனப்படும் தோள்
தொட்டில் பயன்படுத்தலாம். குழந்தைகளை தோள் தொட்டிலில் தூக்கி
கொள்வதினால், இரவு நேரங்களில் குழந்தைகள் அழுவது 51% குறைந்துள்ளது என்று
ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோள் தொட்டிலில் குழந்தைகளை மாட்டிக்கொள்வதினால், எளிதாக பயணங்கள்
மேற் கொள்ளலாம். குறிப்பாக, குழந்தைகளின் அழுகை குறைந்துள்ளதாக ஆய்வில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக, தரமான தோள் தொட்டில்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
இல்லையெனில், முதுகு, தோள் பகுதிகளில் வலி ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.
குழந்தைகளை தோளில் சுமப்பவர்களின் உடல் எடைக்கு ஏற்ப, சரியான தோள்
தொட்டில்களை பயன்படுத்த வேண்டும்.

தோள் தொட்டிலில், குழந்தைகளை தூக்கி செல்வதன் மூலம், குழந்தைகளின்
அருகிலேயே இருக்க முடியும். மேலும், தோள் தொட்டில்களை நெஞ்சிற்கு முன்பாக,
இடுப்பு பகுதியில், முதுகு பகுதியில் கட்டி கொள்ளலாம்.

மற்றுமொரு சிறப்பாக, குழந்தைகளின் உடல் எடைக்கு ஏற்ப, தோள் தொட்டில்களின்
அளவை அட்ஜஸ்ட் செய்து கொள்ளலாம். பெரும்பாலான பெற்றோர்கள் தோள்
தொட்டில்கள் பயன்படுத்துவதை வசதியாக கருதுகின்றனர். பெற்றோரின் அருகில் இருப்பதாலும், தோள் தொட்டிலில் வசதியாக இருப்பதனாலும்,
பெரும்பாலான குழந்தைகள் அழுவதில்லை என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும், 3 மணி நேரம் தோள் தொட்டில் பயன்படுத்துவதனால், குழந்தைகளின்
குறைவாக அழுகின்றனர். தோள் தொட்டில் பயன்படுத்துவதால், குழந்தைகளுக்கும்
பெற்றோர்களுக்குமான அன்பு, இணைப்பு அதிகமாகிறது

(इस खबर को एनडीटीवी टीम ने संपादित नहीं किया है. यह सिंडीकेट फीड से सीधे प्रकाशित की गई है।)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com