முகப்பு »  தாய்ப்பாலூட்டல் »  தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்!!

தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்!!

தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்க்கும் சேய்க்குமான உணர்வுப்பூர்வமான பந்தம் அதிகரிக்கும்.

தாய்மார்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில குறிப்புகள்!!

சிறப்பம்சங்கள்

  1. தாய்ப்பாலில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கிறது.
  2. குழந்தை பிறந்த ஒருமணி நேரத்தில் தாய்ப்பால் கொடுப்பது அவசியம்.
  3. குழந்தையின் ஆரோக்கியம் தாய்ப்பாலை பொருத்தே அமையும்.

பிரசவத்திற்கு பிறகு தாய்மார்கள் குழந்தைக்கு மிகவும் பொறுமையாக பால் கொடுப்பது அவசியம்.  தன் குழந்தைக்கு ஊட்டச்சத்து மிகுந்த தாய்பாலை கொடுக்கவே தாய்மார்கள் விரும்புவார்கள்.  பால் கொடுக்கும் தாய்மார்கள் பின்பற்ற வேண்டிய குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.  

breastfeeding


* குழந்தை பிறந்து ஒருமணி நேரத்திலேயே பால் கொடுக்க துவங்கலாம்.   முதல்முறையாக சுரக்கக்கூடிய பாலில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருக்கும்.   அதில் மிகவும் குறைவான அளவே பச்சிளங்குழந்தைக்கு  தேவையானது.  

* அடிக்கடி குழந்தைக்கு பால் கொடுக்கும்போது தான் பால் சுரப்பு அதிகரிக்கும்.  நல்ல ஆரோக்கியமான உணவுகளும், நீண்ட நேர உறக்கமும் நிச்சயம் தேவை.  இவை முறையாக இருக்கும்போது தான் உடலில் இருக்கக்கூடிய கலோரிகள் எல்லாம் பாலாக மாற்றமடையும்.  

* குழந்தைக்கு பால் கொடுக்கும்போது, மார்பு காம்புகளை முழுமையாக குழந்தையின் வாயில் செலுத்த வேண்டும்.  முளைக்காம்பை மட்டுமே குழந்தை வாயில் பற்றிக் கொண்டிருந்தால் அதற்கு தேவையான பால் கிடைக்காததோடு மார்பகங்களில் வலி ஏற்படும்.  

* இரண்டு மார்பகங்களிலும் மாற்றி மாற்றி பால் கொடுப்பது நல்லது.  குழந்தைக்கு ஏற்றவாறு மாற்றி கொள்ளலாம்.  

* முதல் குழந்தை பிறந்த பின் தாய்ப்பால் கொடுப்பது குறித்து நிறைய சந்தேகங்கள் எழலாம்.  தாய்ப்பால் ஊட்டுவது என்பது ஒரு கலை.  தாய்மார்களுக்கு பொறுமை மிகவும் அவசியமானது.  நாள் போக்கில் தாய்ப்பால் கொடுப்பது பரிட்சையமாகிவிடும்.  

* குழந்தை பிறந்த முதல் வாரத்தில், குழந்தைக்கு அதிகபடியான பசி இருக்கும்.  அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக பால் சுரப்பையும் அதிகரித்து கொள்ள நீங்கள் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  

* தாய்ப்பால் கொடுக்கும்போது கட்டாயமாக அணுபவம் வாய்ந்தவர்களை கூடவே வைத்து கொள்வது அவசியம்.  அவர்களின் உதவியோடும் ஆலோசனையோடும் குழந்தைக்கு பால் கொடுக்கலாம். 

* குழந்தைகளை எப்படி லாவகமாக கைப்பற்றுவது, எப்படி பால் கொடுப்பது, பால் கொடுத்தப்பின் குழந்தையை எப்படி பராமரிப்பது என்பது குறித்து  ஆலோசனை பெறுவது நல்லது.  

* தாய்ப்பால் கொடுக்கும்போது தாய்க்கும் சேய்க்குமான உணர்வுப்பூர்வமான பந்தம் அதிகரிக்கும்.  மேலும் குழந்தைக்கு எந்த நேரத்தில் எது தேவை என்பதும், குழந்தையின் ஒவ்வொரு அசைவின் தேவைகளையும் எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.  
 (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com