முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை குறைக்கும் பட்டர்நட். நீரழவு,இதய நோய்களில் இருந்தும் காக்கிறது.

உடல் எடை குறைக்கும் பட்டர்நட். நீரழவு,இதய நோய்களில் இருந்தும் காக்கிறது.

பட்டர்நட் சாப்பிட்டால் அடுத்து சில மணி நேரத்துக்கு பசியே எடுக்காது

உடல் எடை குறைக்கும் பட்டர்நட். நீரழவு,இதய நோய்களில் இருந்தும் காக்கிறது.

பட்டர்நட் சாப்பிட்டால் அடுத்து சில மணி நேரத்துக்கு பசியே எடுக்காது. இதனால் அதிகம் சாப்பிட வாய்ப்பு கிடைக்காது. ஒல்லியாக இருக்கவே முடியும். அதில் அதிகளவு புரதமும், நல்ல கொழுப்பும் உள்ளது. நட்ஸ்களில் இருந்து தயாரிக்கப்படுவதிலேயே பட்டாணிகளில் இருந்து தயாரிக்கபடும் வெண்ணெய்யே மிகவும் பிரபலம் வாய்ந்தது. இதனை சான்ட்விச்களில் அதிகம் பயன்படுத்துவர். காலை உணவாக இதனை எடுத்து கொள்ளும் பட்சத்தில் உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது.

4mdql48g

நட்பட்டரில் புரதம், கொழுப்பு மட்மில்லாமல் நார்சத்து, வைட்டமின்கள், பைட்டோ கெமிக்கல், மினரல்கள் உள்ளது. இது ஹார்ட் அட்டாக் வராமலும் தடுக்கும். அமெரிக்காவில் ஹார்ட் அசோசியேஷன் இதய நோயாளிகளை தங்கள் உணவில் பட்டர்நட் நிச்சயம் இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கிறது. இதில் நார்சத்தும் அதிகம் இருப்பதால் உணவு செரிமானத்துக்கும் நல்லது. இதில் போட்டாசீயம் இருப்பது கல்லீரலை சிறப்பாக இயக்க உதவும்.


a19a6e2g

அதிகம் சாப்பிடாமல் இருந்தாலே அதிகம் எடைப்போடாது. பட்டர்நட் உட்கொண்டால் பசி எடுக்காது. அது தரும் சக்தியே போதுமானதாக இருக்கும். இதனால் அதிகம் சாப்பிட முடியாது. இது ரத்தத்தில் சர்க்கரை அதிகப்படுத்தாது. நீரழவு டைப் 2 உள்ளவர்களுக்கு மிகவும் நன்மைபயக்கும். ஓலிக் அமிலமும் உள்ளது. உடல் எடை குறைப்புக்கு ஊட்டசத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் டையட்டில் பெருபாலும் இது இருக்கும். உடற்பயிற்சி செய்வதற்கு சக்தியும் அதிகளவு கொடுக்கும். அலர்ஜிகள் இல்லாதவர்கள் பட்டாணி தாண்டி மற்ற பட்டர்நட் உட்கொள்ளலாம். ஒவ்வொரு வகை பட்டர்நட்டிலும் நன்மைகள் அதிகம் இருக்கவே செய்கின்றன. ஒருமுறை மருத்துவரை சந்தித்து அவர் பரிந்துரைக்கும் வகை பட்டர்நட்டை எடுத்துக் கொள்வது சிறப்பு.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------