முகப்பு »  Women's Health »  மதவிடாய் காலங்களில் உடற்பயிர்ச்சி செய்யலாமா.!! Work out-ஐ எப்படி மாற்றிக்கொள்ளலாம்.?

மதவிடாய் காலங்களில் உடற்பயிர்ச்சி செய்யலாமா.!! Work out-ஐ எப்படி மாற்றிக்கொள்ளலாம்.?

மதவிடாய் காலங்களில் உடற்பயிற்சி செய்தல் : மதவிடாய் காலகட்டத்தில் உடற்பயிற்சி செய்வது தவறோ பாதுகாப்பற்றதோ இல்லை. உடற்பயிற்சி செய்வதும், செய்யாததும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இதற்கு பொதுவாக எந்தவொரு விதிமுறையும் கிடையாது.

மதவிடாய் காலங்களில் உடற்பயிர்ச்சி செய்யலாமா.!! Work out-ஐ எப்படி மாற்றிக்கொள்ளலாம்.?

உங்கள் மதவிடாய் நேரத்தில் உடற்பயிற்சி செய்வதும், செய்யாததும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது.

சிறப்பம்சங்கள்

  1. மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்ய எந்த நிர்ப்பந்தமும் இல்லை
  2. மாதவிடாய் காலத்தில் குறைந்த தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகளை தேர்வு செய்யலாம்
  3. Periods-ல் LISS உடற்பயிற்சிகளும் பொருத்தமானதாக இருக்கலாம்

மதவிடாய் நேரத்தில் நீங்கள் உடற்பயிற்சி செய்யலாமா.? இது உலகளவில் கேட்கப்படும் ஒரு கேள்வி, அதற்கு சரியான பதில் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. ஒருபுறம், உடற்பயிர்ச்சி செய்ய நேரம் இருந்தபோதிலும், work out-ஐ இழந்ததற்காக நீங்கள் கொஞ்சம் குற்ற உணர்ச்சியை உணரலாம். ஆனால் மறுபுறம், நன்றாக உடற்பயிற்சி செய்வதற்கு உடல் ரீதியாக இயலாது என்றும் நீங்கள் நினைப்பீர்கள். உடற்பயிற்சி மற்றும் உணவு முறை என்று வரும்போது, ​​உங்கள் உடல் சொல்வதைக் கேட்டு நடப்பது மிக முக்கியம். நீங்கள் உங்கள் Periods-ல் இருக்கும்போது உடற்பயிற்சி செய்வது சாத்தியமா என்பதை அறிய தொடர்ந்து படிக்கவும்.

Periods-ல் உடற்பயிற்சி செய்தல் பாதுகாப்பானதா..?

முதலில், மதவிடாய் காலக்கட்டத்தில் உடற்பயிற்சிசெய்தல் தவறில்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். மதவிடாய் நேரத்தில் உடற்பயிற்சி செய்வதும், செய்யாததும் நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பொறுத்தது. இதற்கு பொதுவாக எந்தவொரு விதிமுறையும் கிடையாது. பிரபல உடற்பயிற்சியாளர் Kayla Itsines, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தலைப்பில் மேலும் விரிவான தகவல்களை கூறியுள்ளார். "இந்த கேள்விக்கு, பெரும்பாலான பெண்கள் அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு பதிலை தேடுகிறார்கள், ஆனால் வாழ்க்கையில் ஒரு விஷயங்கள் அனைவருக்கும் பொருந்தாது" என்று அவர் தனது சமீபத்திய post ஒன்றில் கூறியுள்ளார்.


tdsimj8o

You can skip exercising if you don't feel fit during your period
Photo Credit: iStock

Also read: 10 Reasons For Delayed Periods

எனவே, மதவிடாய் காலக்கட்டத்தில் உங்கள் ஆற்றலுக்கு ஏற்ற work out செய்வது நல்லது. Kayla குறிப்பிடுவது போல, சில பெண்கள் தங்கள் மதவிடாய் காலங்களில் குறைந்த இரத்த அழுத்தத்தைக் கொண்டிருக்கக்கூடும். இது அவர்களுக்கு மயக்கம் மற்றும் குமட்டல் ஏற்படுத்தக்கூடும், அப்படி இருந்தால் அவர்கள் அந்நேரத்தில் உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும். அந்த நிலையில், ஒரு மாற்று உடற்பயிற்சிகள் செய்வதன்மூலம் தீவிரத்தை குறைக்க முடியும்.

Kayla, தனது மதவிடாய் காலத்தில் என்ன செய்கிறார் என்பதைப் பற்றி இணையதள பக்கத்தில் எழுதியதாவது, "எனது மதவிடாய் காலகட்டத்தில், நன்றாக உணரமுடியாத 2 நாட்களை தெரிந்து, அது வொர்க்அவுட் நாளாக இருந்தால், நான் நன்றாகும் வரை ஓய்வெடுத்து காத்திருப்பேன்” என்று கூறியுள்ளார்.

Also read: 6 Ways To Deal With Excruciating Pain During Periods

periods-ல் செய்யக்கூடிய உடற்பயிற்சி :

நீங்கள் பலவீனமாக அல்லது மயக்கமாக உணரவில்லை என்றால், மேலும் உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் இருந்தால், குறைந்த தீவிரம் கொண்ட பயிற்சிகளை நீங்கள் முயற்சி செய்யலாம். உங்கள் வொர்க்அவுட்டை ஒரு LISS session-ஆக மாற்றலாம். (Low-intensity steady state cardio) LISS உடற்பயிற்சியானது, 45-65% இதய துடிப்புடன் செயல்படும் நீண்ட, நிலையான cardio பயிர்ச்சியாகும். LISS உடற்பயிற்சிள் பொதுவாக 30-60 நிமிடங்கள் நீடித்ததாக இருக்க வேண்டும். ஆனால், மதவிடாய் காலகட்டங்களில், உங்களுக்கு ஏற்றவாறு கால அளவை நீட்டித்துக் கொள்ளலாம்.

1fhfoaco

Going for a long, slow-paced walk can make up for exercising during your period
Photo Credit: iStock

Also read: 5 Simple And Effective Home Remedies To Ease Period Pain

எனவே, நீங்கள் டிரெட்மில்லில் சுமார் 30 முதல் 45 நிமிடங்களுக்கு நிலையான வேகத்தில் நடக்கலாம். அவ்வளவுதான்- உங்கள் பயிற்சி முடிந்தது. LISS பயிர்ச்சியின் ஒரு பகுதியாக, நீங்கள் தீவிரம் குறைந்த நிலையான வேகத்தில் Cycling, மெதுவான Jogging, மெதுவாக படிக்கட்டு எறுதல் போன்ற பிற உடற்பயிற்சிகளும் செய்யலாம். இந்த வகையான வொர்க் அவுட்டை  நீண்ட நேரம் மேற்கொள்வது எளிது. இந்த வொர்க்அவுட்டை முடித்து, அந்த கலைப்பில் இருந்து மீள உங்களுக்கு சிறிய நேரமே போதுமானது. இது பாதுகாப்பானதாகவும், எளிமையானதாகவும் மற்றும் மூட்டுகளுக்கு தொல்லையற்றதாகவும் இருக்கும்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

இப்படிச் செய்வதால் நீங்கள் உடற்பயிற்சியின் அழுத்தத்தை உணராமல் இருப்பதோடு, உங்களை இலகுவாகவும், ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் உணர வைக்கும்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------