முகப்பு »  செய்தி »  உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளைச் சாப்பிடலாம்!

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளைச் சாப்பிடலாம்!

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து என நன்கு அறியப்படுகிறது. இந்த நுண்ணூட்டச்சத்து உடலில் சோடியத்தின் விளைவைக் குறைக்க உதவுகிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் நிறைந்த இந்த உணவுகளைச் சாப்பிடலாம்!

உயர் ரத்த அழுத்த உணவுகள்: வாழைப்பழம் பொட்டாசியம் நிறைந்த ஒரு பழம்.

சிறப்பம்சங்கள்

  1. பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்
  2. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது
  3. உங்கள் ரத்த அழுத்த எண்களைக் கட்டுப்படுத்த தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள

உயர் ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையால் கட்டுப்படுத்தலாம். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் ஒரு முக்கியமான ஊட்டச்சத்து என நன்கு அறியப்படுகிறது. இந்த நுண்ணூட்டச்சத்து உடலில் சோடியத்தின் விளைவைக் குறைக்க உதவுகிறது. இது ரத்த நாளங்களிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது, இதன் விளைவாக ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தப்படுகிறது. பொட்டாசியம் நிறைந்த உணவுகள் கவலை மற்றும் மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும். உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், உங்கள் உணவில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டியது அவசியம். பொட்டாசியம் நிறைந்த சில உணவுகள் இங்கே.

உயர் ரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட பொட்டாசியம் நிறைந்த உணவுகள்:

1. வாழைப்பழம்

வாழைப்பழம் என்பது ஆண்டு முழுவதும் நீங்கள் எளிதாகப் பெறக்கூடிய ஒரு பொதுவான பழமாகும். இது பொட்டாசியத்தின் நல்ல மூலமாகும். வாழைப்பழம் செரிமானத்தையும் ஊக்குவிக்கிறது மற்றும் வைட்டமின் சி உள்ளது. இது ஒரு ஆரோக்கியமான ஸ்னாக், இது பசி வேதனையை எதிர்த்துப் போராட உதவும். வாழைப்பழத்தில் நார்ச்சத்துகளும் உள்ளன, அவை உங்களை அதிக நேரம் முழுமையாக வைத்திருக்கும்.

f130plo

2. கீரைகள்

கீரைகள் உங்கள் உணவில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் உணவில் போதுமான ஊட்டச்சத்துக்களைச் சேர்க்கக் கீரைகளைத் தவறாமல் உட்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. கீரைகள் பொட்டாசியம் நிறைந்துள்ளது, குறிப்பாக ஸ்பினாஷில். சாலடுகள் முதல் ஜூஸ் வரை, நீங்கள் தயாரிக்கும் வெவ்வேறு உணவுகளில் கீரைகளைச் சேர்க்கலாம்.

3. தயிர்

தயிர் கால்சியம் மற்றும் பொட்டாசியம் நிறைந்த உணவாகும். இது உங்கள் குடல் ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமான பாக்டீரியாக்களைக் கொண்டுள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்குத் தயிர் ஒரு ஆரோக்கியமான ஸ்னாக். இயற்கை தயிர் தேர்வு செய்து, நீங்கள் இனிப்பு தயிர் தவிர்க்க வேண்டும்.

st86m09o


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

4.தர்ப்பூசணி

தர்பூசணி ஒரு சிவப்பு நிற கோடைக்கால பழமாகும். இதில் உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பொட்டாசியம் உள்ளது. தர்பூசணியில் லைகோபீன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், அமினோ அமிலம், ஆண்டிஆக்ஸிடண்ட்ஸ் மற்றும் சோடியம் மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளன.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------