முகப்பு »  செய்தி »  உங்கள் உணவில் இந்த ஜூஸ்களைச் சேர்த்து உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்!

உங்கள் உணவில் இந்த ஜூஸ்களைச் சேர்த்து உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்!

சில ஜூஸ்கள் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். உயர் ரத்த அழுத்தத்தைத் திறம்பட எதிர்த்துப் போராட உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில காய்கறி ஜூஸ்கள் இங்கே.

உங்கள் உணவில் இந்த ஜூஸ்களைச் சேர்த்து உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துங்கள்!

உயர் ரத்த அழுத்தம்: உங்கள் ரத்த அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்த இந்த ஆரோக்கியமான பழச்சாறுகளை முயற்சிக்கவும்.

சிறப்பம்சங்கள்

  1. உயர் ரத்த அழுத்தத்தை சிகிச்சையளிக்காமல் விடக்கூடாது
  2. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த பொட்டாசியம் உதவும்
  3. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவு உதவும்

உயர் ரத்த அழுத்தம் கட்டுப்பாடில்லாமல் இருந்தால், இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும். உயர் ரத்த அழுத்தம் மோசமான உணவு, வாழ்க்கை முறை, அதிகரித்த மன அழுத்தம் மற்றும் பலவற்றின் விளைவாக இருக்கலாம். உணவு மற்றும் வாழ்க்கை முறைகளில் ஆரோக்கியமான மாற்றங்கள் உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை நிர்வகிப்பதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. சில உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துக்களைச் சேர்ப்பது ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. காய்கறி ஜூஸ்கள் ஊட்டச்சத்துக்களின் சக்தியாகும். நீங்கள் ஒரு சில காய்கறிகளை ஜூஸ் செய்யலாம் அல்லது அதிகபட்ச நன்மைகளுக்காக வெவ்வேறு காய்கறிகளின் கலவையை உருவாக்கலாம். சில ஜூஸ்கள் உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் நன்மை பயக்கும். உயர் ரத்த அழுத்தத்தைத் திறம்பட எதிர்த்துப் போராட உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில காய்கறி ஜூஸ்கள் இங்கே.

1. கீரைகள் ஜூஸ்

கீரைகள் சுகாதார நன்மைகளைக் கொண்டுள்ளது. தேர்வு செய்யப் பல வகையான கீரைகள் உள்ளன. இந்த ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை உங்கள் அன்றாட உணவில் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. நீங்கள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகிறீர்கள் என்றால், கீரை, காலே, லெட்ட்யூஸ் அல்லது பெருஞ்சீரக கீரை போன்ற பச்சை இலை காய்கறிகளில் ஜூஸ் தயாரிக்கலாம். சுவையை அதிகரிக்கச் சாற்றில் சிறிது நெல்லிக்காய் சேர்க்கவும்.


8imukvlg

2. செலரி கீரை ஜூஸ் (Celery)

செலரி பல ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் கே, ஏ, பி 2, பி 6, சி, ஃபோலேட், பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் உணவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. உயர் ரத்த அழுத்தத்திற்கு செலரி ஜூஸின் நன்மைகளையும் ஆய்வுகள் எடுத்துரைத்துள்ளன. உயர் ரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட ஆரோக்கியமான ஜூஸ் தயாரிக்க நீங்கள் கீரையை செலரியுடன் சேர்க்கலாம்.

3. தக்காளி ஜூஸ்

ஒவ்வொரு இந்திய உணவிலும் தக்காளி ஒரு முக்கியமான பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. தக்காளி சாறு ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது இதய ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். அதிகபட்ச நன்மைகளுக்கு உப்பு இல்லாமல் தக்காளி சாறு குடிக்கவும். வீட்டில் ஃபிரஷ் தக்காளி சாறு தயாரிக்கவும். பேக் செய்த ஜூஸில் உப்பு அல்லது சர்க்கரை சேர்க்கப்பட்டிருக்கும்.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

4. பீட் ரூட் ஜூஸ்

பீட்ஸில் நைட்ரிக் ஆக்சைடு உள்ளது, இது கட்டுப்படுத்தப்பட்ட ரத்த அழுத்தத்திற்கு உதவுகிறது. நீங்கள் ஃபிர்ஷ் பீட்ரூட் மூலம் ஜூஸ் தயாரிக்கலாம். இது ரத்த ஓட்டத்தையும் மேம்படுத்தும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------