முகப்பு »  நலவாழ்வு »  பால் குடித்தால் எடை குறையுமா..!! என்ன சொல்ரீங்க..?

பால் குடித்தால் எடை குறையுமா..!! என்ன சொல்ரீங்க..?

எடை இழப்பு : எடை இழப்புக்கு உறுதியளிக்கும் பல்வேறு டயட்டுகள் உள்ளன. பால் டயட் என்பது புதிய எடை இழப்பு உணவாகும். இந்த டயட், பால் மட்டுமே குடிப்பதன் மூலமாக உடல் எடையை குறைக்க உதவும். பால் உணவு மற்றும் அதன் குறைபாடுகள் பற்றி அனைத்தையும் அறிய இங்கே படியுங்கள்.

பால் குடித்தால் எடை குறையுமா..!! என்ன சொல்ரீங்க..?

பால் மட்டுமே குடிப்பதன் மூலமாக உடல் எடையை குறைக்க உதவும்.

சிறப்பம்சங்கள்

  1. எலும்புகளின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் கால்சியத்தின் சிறந்த ஆதாரம் பால்.
  2. பால் டயட் உங்களை பாலை மட்டுமே குடிக்க வைக்கிறது
  3. உங்கள் எடை இழப்பு உணவில் சில மாற்றங்களைச் செய்யலாம்

ஒவ்வொரு நாளும் ஒரு புதிய எடை இழப்பு டயட்டைப் பற்றி நீங்கள் கேட்கிறீர்கள். தேர்வு செய்ய பல வகையான உணவுத் திட்டங்கள் உள்ளன. இங்கு மற்றொரு எடை இழப்பு டயட் குறிப்பிடப்பட்டுள்ளது. நீங்கள் ஒரு பால் பிரியராக இருந்தால், நீங்கள் இந்த டயட்டை மிகவும் விரும்புவீர்கள். எடை இழப்புக்கான புதிய பால் டயட் இது. பால் டயட் மூலம் எடை குறைக்க நாள் முழுவதும் பால் குடிக்கவேண்டியுள்ளது. பாலில் கொழுப்பு உள்ளது மற்றும் எடையை அதிகரிக்கச் செய்யும் என்று பெரும்பாலான மக்கள் நம்புகிறார்கள், ஆனால் இந்த எடை இழப்பு பால் டயடானது, வெறும் பாலுடன் உடல் எடையை குறைக்க உதவும். பால் பல்வேறு ஊட்டச்சத்துக்களால் நிறைந்தது, இது மிகவும் ஆரோக்கியமானதாகும். எலும்புகளின் ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும் கால்சியத்தின் சிறந்த ஆதாரம் பால். எடை இழப்பு உட்பட பால் குடிப்பதால் பல அத்தியாவசிய சுகாதார நன்மைகளும் உள்ளன. இந்த எடை இழப்பு உணவைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

எடை இழப்புக்கான பால் டயட் என்றால் என்ன.?

எடை இழப்புக்கு கொழுப்பு நீக்கப்பாட்ட பாலை உட்கொள்வது அவசியம். ஆனால் இந்த மில்க் டயட் ஊட்டச்சத்து நிபுணர்களிடையே ஒரு விவாதத்தைத் தூண்டியுள்ளது. பாலில் பல முக்கிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால், இந்த உணவு முறையினால் தேவைக்கு அதிகமாக ஊட்டச்சத்துக்களைப் பெறக்கூடும். ஆனால், பால் மட்டுமே உட்கொள்வது ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும் என்று பலர் கூறுகின்றனர். பால் மட்டுமே குடிப்பதால் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் இழக்க நேரிடும். இந்த உணவு செரிமான பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.


g8l683og

கொழுப்பு நீக்கப்பட்ட பால் உடல் எடையைக் குறைக்க உதவும்.
Photo Credit: iStock

Also read: Does Milk Cause Weight Gain Or Is It Bad For Digestion? Expert Nutritionist Tells Us All

தலைமை டயட்டீசியன் திருமதி பவித்ரா என். ராஜ் கூறுவதாவது, "பால் டயட் என்பது கொழுப்பு நீக்கப்பட்டப் பாலை (ஒரு நாளைக்கு 2 லிட்டர் வரை) ஒரு மாதத்திற்கு மட்டுமே குடிப்பதாகும். ஆய்வுகளின் படி, அதிகப்படியான கால்சியம் உட்கொள்வது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது, ஏனெனில் இது உடலில் உள்ள கொழுப்பை அகற்ற உதவுகிறது. குறிப்பாக, வயிற்று கொழுப்பை நீக்க உதவும். ஒரு நபர் பால் டயட்டில் இருந்தால், அந்த நபருக்கு கால்சியம் மற்றும் பால் புரதம் மட்டுமே கிடைக்கும். உடலில் மெக்னீசியம், இரும்பு, நியாசின், ஃபோலேட் மற்றும் வைட்டமின் சி மற்றும் டி போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருக்கும். நார்ச்சத்தும் முற்றிலுமாக குறைந்திருக்கும். "

1gnbdtn

எடை இழப்பு: பால் நுகர்வு உண்மையில் உடல் எடையை குறைக்க உதவுமா?
Photo Credit: iStock

இந்த சிக்கல்களை சமாளிக்க பலரும் இந்த டயட்டில் சிறிய மாற்றங்களை பரிந்துரைத்துள்ளனர். இது ஒரு நபர் ஊட்டச்சத்து குறைபாடுகளை சமாளிக்க உதவும். இந்த மாற்றங்கள் நார்ச்சத்துக்களை உட்கொள்ளவும் உதவும். நீங்கள் பால் டயட்டைப் பின்பற்ற திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், உங்கள் உணவு நிபுணரிடம் இந்த டயட்டில் மாற்றங்களைச் செய்து தருமாறு கேட்க வேண்டும். இதனால், நீங்கள் மற்ற ஊட்டச்சத்துக்களை போதுமான அளவு உட்கொள்வீர்கள். மற்ற உணவுகள் மற்றும் பானங்களுடன் ஒப்பிடும்போது பால் நுகர்வு அதிகமாக இருக்கும்.

Also read: Weight Loss: Try These High Protein Breakfast Options Which Can Help You Lose Weight

பால் டயட்டில் உள்ள குறைபாடுகள் என்ன.?

திருமதி பவித்ரா, பால் உணவு முறையுடன் தொடர்புடைய சிக்கல்களை மேலும் விளக்குகிறார். இதனால் மக்கள் குழப்பமின்றி இந்த டயட்டில் ஈடுபடலாம்.

1. லாக்டோஸ் சகிப்புத்தன்மை - பசும்பாலில் உள்ள லாக்டோஸ் ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதன் விளைவாக குமட்டல், பிடிப்புகள், வாயு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

2. இதய ஆரோக்கியம் - பாலின் கொழுப்பு எச்.டி.எல் (நல்ல) கொழுப்பின் அளவை உயர்த்தும்.

3. முகப்பரு - பால் கொழுப்பு காரணமாக முகப்பரு வரக்கூடும்.

Also read: Dairy: Is It Good Or Bad For You?

(Ms. Pavithra N Raj, Chief Dietician, Columbia Asia Referral Hospital Yeshwanthpur)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------