முகப்பு »  நலவாழ்வு »  இரத்த அழுத்தமா? பீட்ரூட் ஜூஸ் குடிங்க!

இரத்த அழுத்தமா? பீட்ரூட் ஜூஸ் குடிங்க!

உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை பீட்ரூட்டிற்கு உண்டு

இரத்த அழுத்தமா? பீட்ரூட் ஜூஸ் குடிங்க!

குளிர்காலத்தில் உங்கள் உடல் ஆரோக்கியத்தின் மீது அக்கறை செலுத்துவது மிகவும் அவசியமானது. குளிர்காலத்தில் நீங்கள் நிறைய பீட்ரூட் சேர்த்து கொள்ளலாம். அதில் ஆண்டிஆக்ஸிடண்ட், ஃபோட்டோகெமிக்கல்ஸ் நிறைந்திருக்கிறது. பீட்டாசையனின் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதே பீட்ரூட்டின் சிவப்பு நிறத்திற்கு காரணம். கல்லீரல் ஆரோக்கியம், சீரான இரத்த ஓட்டம் மற்றும் இரத்தத்தை சுத்திகரிப்பதில் பீட்ரூட்டிற்கு முக்கிய பங்கு உண்டு. மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை பீட்ரூட்டிற்கு உண்டு.

பீட்ரூட்டின் நன்மைகள்

தினசரி பீட்ரூட் சாறு அருந்தி வந்தால் இரத்த அழுத்தம் குறையும். 54 முதல் 80 வயது வரை உள்ளவர்களுக்கு இரத்த அழுத்த மாத்திரைகளுக்கு பதிலாக தினசரி பீட்ரூட் சாறு கொடுத்து பரிசோதித்தனர். அதில் இதயத்தில் இருந்து கால், கை, வயிறு மற்றும் சிறுநீரகம் வரை இரத்தத்தை கடத்தி செல்லும் தமணிகளின் இறுக்கத்தை குறைத்ததோடு, உடலில் இரத்த அழுத்தமும் சீராக இருப்பது தெரியவந்தது. பீட்ரூட்டில் நைட்ரிக் ஆக்ஸைடு, வைட்டமின் பி, ஆண்டிஆக்ஸிடண்ட் மற்றும் இரும்பு சத்து நிறைந்திருக்கிறது. இவை இரத்த அழுத்தத்தை குறைத்து, நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக்கும். மேலும் இருதய துடிப்பை சீராக்கி, இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கிறது.


பீட்ரூட்டை அரைத்து சாறு எடுத்து பருகி வரலாம். ஒரு மணி நேரத்தில் உங்கள் இரத்த அழுத்தமானது சீராகிவிடும். தொடர்ச்சியாக இந்த குடித்து வந்தால், இருதய நோய்கள் நெருங்காது. பீட்ரூட்டை சாலடாகவும் செய்து சாப்பிடலாம். குறிப்பாக கேரட்டுடன் சேர்த்து சாப்பிட நல்ல பலன் கிடைக்கும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------