முகப்பு »  நலவாழ்வு »  தீபாவளி முடிந்து உடலை Detox செய்ய வேண்டுமா.? முதலில் சில கட்டுக்கதைளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

தீபாவளி முடிந்து உடலை Detox செய்ய வேண்டுமா.? முதலில் சில கட்டுக்கதைளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

டிடாக்ஸ் என்பது முற்றிலும் உடல் எடையை குறைப்பது தொடர்பான செயல் என்று நீங்கள் நினைத்தால், இந்த சில உன்மைகள் உங்களை ஆச்சரியப்படுத்தலாம்.

தீபாவளி முடிந்து உடலை Detox செய்ய வேண்டுமா.? முதலில் சில கட்டுக்கதைளைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..

Post Diwali detox: Hydrate yourself and exercise regularly to detox the right way

சிறப்பம்சங்கள்

  1. Detox உடலுக்கு புத்துயிர் அளித்து, செரிமானத்தை மீட்டுத்தரும்
  2. மீண்டும் இயல்பான தூக்கத்தை தர detox உதவும்
  3. Detox என்பது எடை இழப்பை மட்டும் குறிக்காது.

ஒரு வழியாக தீபாவளி பண்டிகை முடிந்தது. இதோடு அடுத்த பண்டிகை என்றால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாக்கள் தான். தீபாவளி கொண்டாட்டங்களில் உங்களில் பலர் மிட்டாய்கள், சாக்லேட்டுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள் ஆகியவற்றை உண்டு மகிழ்ந்திருக்கலாம். இவைகளை சாப்பிட்டதில் தவறு எதுவும் இல்லை. விழாக்கள் எந்த கவலையும் இல்லாமல், முழு உற்சாகத்துடன் கொண்டாடப்பட வேண்டும். உங்களுக்கு இந்த நேரத்தில் ஒரு டிடாக்ஸ் தேவைப்படும். இது விரைவாக வாழ்க்கையை அதே பாதையில் கொண்டு செல்ல உங்களுக்கு உதவும். லேசான உணவுகளை எடுத்துக்கொண்டு உடற்பயிற்சி செய்வது மற்றும் சரியான ஊட்டச்சத்துக்களை பெறுவது, தீபாவளிக்கு பின் உடலை டிடாக்ஸ் செய்வதற்கான சரியான வழியாகும்.

Detox : உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவது அல்லது தேவையற்றதை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துவதாகும்.

தீபாவளிக்குப் பிறகு டிடாக்ஸ் : முக்கியமான கட்டுக்கதைகளை (Myths) தெளிவுபடுத்துதல்


டிடாக்ஸைப் பற்றி பேசினாலே பட்டினி கிடப்பது அல்லது திரவ உணவுகளை மட்டும் எடுத்துக்கொள்வது என்று பலர் நினைக்கிறார்கள். அப்படி செய்தால், இது ஊட்டச்சத்து குறைபாடு, சோர்வு, மந்த நிலை மற்றும் மனநிலை மாற்றங்களை மட்டுமே உங்களுக்கு கொடுக்கும்.

Also read: Know The Best Time To Drink Water To Lose Weight


தீபாவளிக்குப் பிறகு உங்கள் வழக்கமான உணவுப் பழக்கத்தை மீண்டும் தொடங்குவது, அனைத்து உணவுக் குழுக்களையும் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வது, சீரான உணவு மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது போன்றவற்றை தொடருங்கள்.

ஊட்டச்சத்து நிபுணர் Nmami Agarwal தனது இன்ஸ்டாகிராம் பதிவில், போதைப்பொருள் பற்றிய கட்டுக்கதைகளைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். அவரைப் பொறுத்தவரை, Detox உங்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பது மட்டுமல்லாமல், இது உங்கள் எடையை நிர்வகிக்கவும், சரியான வளர்சிதை மாற்ற செயல்பாட்டில் குறுக்கிடும் உங்கள் உடலில் இருந்து நச்சுகளை அகற்றவும் உதவுகிறது.

கட்டுக்கதை 1 : டிடாக்ஸ் செய்ய உணவை தவிர்ப்பது மற்றும் பட்டினி கிடப்பது அவசியம்..?

டிடாக்ஸ் முற்றிலும் நீங்கள் சாப்பிடுவதைப் பொறுத்தது. சரியான டிடாக்ஸைப் பெறுவதற்கு நீங்கள் சரியான வகையான உணவை சரியான விகிதத்திலும், சரியான இடைவெளியிலும் சாப்பிட வேண்டும் என்று Nmami கூறுகிறார். அதிக பழங்கள், காய்கறிகளை உண்ணுங்கள் மற்றும் வயிற்றில் லேசான ஆரோக்கியமான உணவைக் கொண்டிருங்கள். பருப்பு சாதம் அல்லது கிச்சடி போன்ற இலகுவான மற்றும் சத்தான உணவுகள் தீபாவளிக்கு பிந்தைய டிடாக்ஸுக்கு சரியான தேர்வாகும்.

h7gv6q2o

Going on a detox does not mean that you need to starve yourself for losing weight
Photo Credit: iStock

Also read: Proteins For Weight Loss: 5 Myths That You Must Stop Believing

கட்டுக்கதை 2 : டிடாக்ஸ் என்பது சுலபமான தீர்வாகாது..!

ஒரு முறை, டிடாக்ஸ் செய்வதால் உங்கள் உடல் மண்டலத்தை சுத்தப்படுத்த உதவும். ஆனால், இலக்கை அடைந்தவுடன், நீங்கள் ஒரு நல்ல உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை வாழ்வதில் கவனம் செலுத்த வேண்டும். அடிக்கடி டிடாக்ஸில்  ஈடுபடு தேவை இல்லை.

கட்டுக்கதை 3 : கார்போஹைடரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை முற்றிலும் தவிர்ப்பது detox-க்கு முக்கியம்

விரைவான எடை இழப்பையே இப்போது மக்கள் பொதுவாக விரும்புகிறனர். இருப்பினும், விரைவான எடை இழப்பு உங்கள் வளர்சிதை மாற்றத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தும் மற்றும் எடை விரைவாகத் திரும்பும். கார்போஹைடரேட்டுகள் மற்றும் கொழுப்புகள் உங்கள் உடல்நலம் மற்றும் எடை இழப்புக்கு முக்கியமான (macronutrients) நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகும். உணவுக் குழுக்களைக் குறைப்பதற்குப் பதிலாக, ஊட்டமளிக்கும் மற்றும் சீரான உணவை உட்கொள்வதில் கவனம் செலுத்த வேண்டும்.

unpctepo

Include all food groups in your diet for a healthy detox
Photo Credit: iStock

Also read: 5 Tips To Make Intermittent Fasting Work For You

கட்டுக்கதை 4 : டிடாக்ஸ் என்றால் எடை இழப்பு

உடல் எடையை குறைப்பது உங்கள் உடல் கட்டுக்கோப்பை மீண்டும் பாதையில் திரும்புவதற்கான ஒரு முறையாகும். ஆனால், டிடாக்ஸ் என்பது உடல் எடையை மட்டும் குறைப்பதைக் குறிக்காது. இது உங்களுக்கு தூக்கத்தை கொடுத்து, மீண்டும் மீண்டும் வரும் அசிடிட்டி, வீக்கம், வாயு, தலைவலி ஆகியற்றை நீக்கி, மற்றும் உடலில் நீரேற்றம் செய்ய உதகிறது.

எனவே, தீபாவளி பலகாரங்களை விறுப்பப்படி சாப்பிட்டு முடித்திருக்கும் இந்த வேளையில், குற்ற உணர்வை நிறுத்திவிட்டு சரியான உணவை எடுத்துக் கொண்டு, புத்துணர்ச்சியூட்டும் பயிற்சிக்காக ஜிம்மிற்குச் சென்று உடலை Detox செய்ய வேண்டிய நேரம் இது.
 


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

(Nmami Agarwal is nutritionist at Nmami Life)

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------