முகப்பு »  நலவாழ்வு »  நீரிழிவு டயட்: நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா?

நீரிழிவு டயட்: நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா?

நீரிழிவு நோயாளிகள் பழங்களை மிதமாகச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். சில பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானவை என்றாலும், சிலவற்றைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.

நீரிழிவு டயட்: நீரிழிவு பிரச்னை உள்ளவர்கள் அன்னாசிப்பழம் சாப்பிடலாமா?

நீரிழிவு உணவு: நீரிழிவு நோயாளிகள் பழங்களை மிதமாக சாப்பிட வேண்டும்.

சிறப்பம்சங்கள்

  1. அன்னாசிப்பழம் எடை குறைக்க உதவும்
  2. அன்னாசிப்பழம் சாப்பிடுவது செரிமானத்தை அதிகரிக்க உதவும்
  3. அன்னாசி பழச்சாறு இருமல் மருந்தாக பயன்படுத்தப்படலாம்

நீரிழிவு என்பது ஒரு நீண்டகால நிலை, இதற்கு நிலையான கவனிப்பு தேவைப்படுகிறது. ரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்துவதில் ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறை முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு உணவில், ரத்த சர்க்கரை அளவை எதிர்மறையாகப் பாதிக்காத உணவுகள் இருக்க வேண்டும் மற்றும் அவை இயற்கையாகவே கட்டுப்படுத்த உதவும். அதில் பழங்கள் மிகவும் ஆரோக்கியமானவை. பலவிதமான ஊட்டச்சத்துக்களைப் பெறத் தினமும் பழங்களைச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் பழங்களில் இயற்கையாகவே சர்க்கரை உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகள் பழங்களை மிதமாகச் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். சில பழங்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமானவை என்றாலும், சிலவற்றைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அன்னாசி என்பது பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு இனிமையான பழமாகும். நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடுவது பாதுகாப்பானதா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

cmtn010g

நீரிழிவு உணவு: நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானதா?


அன்னாசிப்பழத்தில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இதில் புரோமேலின் எனப்படும் என்சைம்கள் உள்ளன, இது செரிமானத்தை அதிகரிக்க உதவும். அன்னாசிப்பழம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கவும் வீக்கத்தை அடக்கவும் உதவும். ஆக்ஸிடேடிவ் அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவும் ஆன்டிஆக்ஸிடண்ட்கள் இதில் உள்ளன.

அன்னாசிப்பழம் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடும், ஆனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது இல்லை. அன்னாசிப்பழம் ஒரு ஜிஐ கொண்ட பழம். குறைந்த ஜிஐ (கிளைசெமிக் இன்டெக்ஸ்) கொண்ட உணவுகள் நீரிழிவு நோயாளிகளுக்குச் சிறந்ததாகக் கருதப்படுகின்றன. கார்ப்ஸ் உயர் இரத்த சர்க்கரை அளவுக்குப் பங்களிக்கும். பெரும்பாலான நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரைகளில் பெரிய ஏற்ற இறக்கங்களைத் தவிர்ப்பதற்காக உணவுக்கு உட்கொள்ளும் கார்ப் எண்ணிக்கையை எண்ணுகிறார்கள். இருப்பினும், அன்னாசிப்பழத்தில் குறைந்த அளவு கார்ப்ஸ் உள்ளது.

34cifrl8
Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் தலைமை டயட்டீசியன் பவித்ரா என் ராஜ் கூறுகையில், “100 ஜிஎம் பழங்களைக் காலை 10 மணி அளவில் உட்கொள்ளலாம் மற்றும் 5-6 துண்டுகள் கொண்ட பிற பழங்களுடன் சேர்த்துச் சாப்பிடலாம்,” என்றார்.

நீரிழிவு நோயாளிகள் அன்னாசிப்பழத்தை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். ஆனால் நீங்கள் அன்னாசிப்பழம் சாப்பிட விரும்பினால் குறைந்த ஜிஐ மதிப்பெண் கொண்ட உணவுகளுடன் சேர்த்துச் சாப்பிடலாம். அன்னாசிப்பழத்தில் அதிக சர்க்கரை இருப்பதால் அதை ஜூஸாக குடிக்க வேண்டாம். நீரிழிவு நோயாளிகள் ஜூஸ் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும், ஒரு கிளாஸ் ஜூஸ் தயாரிக்க உங்களுக்கு அதிக பழம் தேவை, அதாவது அதிக சர்க்கரை சேர்க்கப்படுகிறது என்பதைக் குறிக்கிறது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------