முகப்பு »  செய்தி »  வஜ்ராசனா: செரிமானப் பிரச்சினைகள் நீங்க இந்த ஆசனாவை செய்து பாருங்கள்!

வஜ்ராசனா: செரிமானப் பிரச்சினைகள் நீங்க இந்த ஆசனாவை செய்து பாருங்கள்!

வஜ்ராசனத்தின் நிலை என்னவென்றால், இது உங்கள் உடலின் கீழ் பகுதிக்கு - தொடைகள் மற்றும் கால்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. உங்கள் இடுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் வயிற்று இரத்த ஓட்டம் காரணமாகக் குடல் இயக்கம் மற்றும் செரிமானம் சிறப்பாகிறது.

வஜ்ராசனா: செரிமானப் பிரச்சினைகள் நீங்க இந்த ஆசனாவை செய்து பாருங்கள்!

வஜ்ராசனா நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் கல்லீரல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

சிறப்பம்சங்கள்

 1. வஜ்ராசனா உங்கள் கால் தசைகளை மசாஜ் செய்கிறது
 2. முழங்கால்/கணுக்கால் காயம் இருந்தால், ஆசனத்தை இதைச் செய்வதைத் தவிர்க்கவும்
 3. சியாட்டிகாவின் நிலைமைகளைப் போக்க வஜ்ராசனா உதவுகிறது

வஜ்ராசனா என்பது முழங்காலில் செய்யப்பட்டும் போஸ், இந்தப் பெயர் சமஸ்கிருத மொழியிலிருந்து பெறப்பட்டது. இதற்கு வைரம் அல்லது இடி என்று பொருள்படும். ஆசனா என்றால் போஸ், இந்த வைர போஸ், அடமிண்டைன் போஸ் என்றும் அழைக்கப்படும். வஜ்ராசனா வஜ்ரா நாடியைச் செயல்படுத்துகிறது, இது நல்ல செரிமானத்தை ஊக்குவிக்கிறது மற்றும் கல்லீரல் செயல்பாடுகளுக்கு உதவுகிறது. அதன் பல நன்மைகளில், இது சியாட்டிகா, நரம்பு பிரச்சினைகள் மற்றும் அஜீரணத்தின் நிலைமைகளை அகற்ற உதவுகிறது. வஜ்ராசனத்தின் நிலை என்னவென்றால், இது உங்கள் உடலின் கீழ் பகுதிக்கு - தொடைகள் மற்றும் கால்களுக்கு இரத்த ஓட்டத்தைத் தடுக்கிறது. உங்கள் இடுப்பு பகுதிக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் வயிற்று இரத்த ஓட்டம் காரணமாகக் குடல் இயக்கம் மற்றும் செரிமானம் சிறப்பாகிறது.

முழு உணவு உண்டபிறகு செய்யக்கூடிய ஒரே போஸ் இதுதான். உண்மையில், அது சாப்பிட்டவுடன் செய்யப்பட வேண்டும். ஏதேனும் கால் அல்லது முழங்கால் காயம் இருந்தால், அதைச் செய்வதைத் தவிர்க்கவும்.

வஜ்ராசனா: நன்மைகள் மற்றும் செய்முறை 


வஜ்ராசனா செய்யும் முறை:

 • முதலில் நேராக நின்று ஆசனத்தைத் தொடங்குங்கள்
 • முன்னோக்கிச் சாய்ந்து மெதுவாக உங்கள் பாயில் முழங்கால்களை வையுங்கள்
 • உங்கள் இடுப்பை உங்கள் குதிகால் மீது வைத்து, உங்கள் கால்விரல்களை வெளிப்புறமாக நீட்டுங்கள்
 • இங்கே, உங்கள் தொடைகள் உங்கள் முட்டிக்குக் கீழ் பின் தசையை அழுத்த வேண்டும்
 • உங்கள் குதிகாலை ஒன்றோடு ஒன்றைப் பக்கமாக வைத்திருங்கள்
 • கால் விரல்களை ஒன்றின் மீது இன்னொன்றை வைக்க வேண்டாம்
 • உங்கள் உள்ளங்கைகளை உங்கள் முழங்கால்களின் மீது மேல்நோக்கி வைக்கவும்
 • நிமிர்ந்து உட்கார்ந்து, நேராகப் பார்க்கவும்
 • சிறிது நேரம் இந்த ஆசனாவை தொடருங்கள்.
7478mcg

சுவாச முறை - மென்மையாக உள்ளிழுத்துச் சுவாசிக்கவும்


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

நன்மைகள்:

 • இந்த ஆசனம் செரிமானத்திற்கு உதவுகிறது. இந்த ஆசனம் மட்டுமே, உணவு சாப்பிட்டபின் செய்யக் கூடியது.
 • முழங்காலுக்கு கீழ் இருக்கும் பின்னங்காலுக்கு மசாஜ் அளிக்கும்.
 • ஆசனா கால், கணுக்கால் மற்றும் முழங்கால் ஆகியவற்றைப் பலப்படுத்துகிறது.
 • கணுக்கால் வளைந்துகொடுக்கும்
 • முழங்காலைப் பலப்படுத்தும்
 • தியானம் மற்றும் பிராணயாமாவுக்கு நல்ல போஸ் இது.
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------