முகப்பு »  செய்தி »  என்ன சமைக்க வேண்டும் என்பதில் குழப்பமா? இதோ உங்களுக்கான ரெசிபி ஐடியாஸ்!

என்ன சமைக்க வேண்டும் என்பதில் குழப்பமா? இதோ உங்களுக்கான ரெசிபி ஐடியாஸ்!

நாள் முழுவதும் வீட்டில் தங்கியிருப்பது என்பது உங்கள் உணவை நீங்கள் வீட்டிலேயே உட்கொள்கிறீர்கள் என்பதாகும், அதாவது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவுகளுக்கு உங்களுக்குக் கூடுதல் யோசனைகள் தேவை.

என்ன சமைக்க வேண்டும் என்பதில் குழப்பமா? இதோ உங்களுக்கான ரெசிபி ஐடியாஸ்!

போஹா, பருப்பு சாதம், இட்லி உள்ளிட்ட 13 உணவுகளை தயாரிக்க அரிசியைப் பயன்படுத்தலாம்.

சிறப்பம்சங்கள்

  1. அரிசி, கோதுமை மற்றும் பயறு வகைகளை வைத்து உங்கள் உணவை சிறப்பாக்கலாம்
  2. மூன்றையும் பலவகையான உணவு தயாரிக்க பயன்படுத்தலாம்
  3. அவை சத்தானவை, மலிவானவை மற்றும் சமைக்க எளிதானவை

 லாக்டவுன் நாட்களில் என்ன சமைப்பது என்று குழப்பம் ஏற்படக் கூடும். நாள் முழுவதும் வீட்டில் தங்கியிருப்பது என்பது உங்கள் உணவை நீங்கள் வீட்டிலேயே உட்கொள்கிறீர்கள் என்பதாகும், அதாவது ஒவ்வொரு நாளும் வெவ்வேறு உணவுகளுக்கு உங்களுக்குக் கூடுதல் யோசனைகள் தேவை. உங்கள் அனைவரையும் மீட்க வருகிறார் பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர். சமீபத்திய ஐஜிடிவியில், அரிசி மற்றும் கோதுமை போன்ற சில எளிய இந்திய உணவுகளுடன் தயாரிக்கக்கூடிய பல்வேறு வகையான உணவுகளைப் பற்றிப் பேசியுள்ளார். “இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலம் நமது கலாச்சாரத்தை மதிப்பாய்வு செய்ய, வெளியிட மற்றும் புதுப்பிக்கப் பயன்படுத்தப்பட வேண்டும். இந்த முழு காலமும் நாம் எவ்வாறு நம் வாழ்க்கையை வாழ்கிறோம் என்பதை மறுபரிசீலனை செய்யப் பயன்படுத்தப்பட வேண்டும்,” என்று திவேகர் வீடியோவில் கூறுகிறார்.

தனிமைப்படுத்தலில் உணவுத் திட்டம்: ஒரு சில இந்திய உணவுகளுடன் பல்வேறு வகையான ஆரோக்கியமான உணவை நீங்கள் எவ்வாறு செய்யலாம்

அரிசி


இந்தியாவில் மக்களின் உணவில் அரிசி ஒரு முக்கிய பகுதியாகும். உங்கள் உணவைத் தயாரிக்க அரிசியைப் பயன்படுத்துவதற்கான வழிகள் பின்வருமாறு.

அரிசி இவற்றை எல்லாம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தலாம்:

1. பருப்பு சாதம்
2. தயிர்ச் சாதம்
3. அரிசி ரோட்டி (அரிசி ஆட்டாவுடன்)
4. இனிப்பு சாதம்(வெல்லம் சேர்த்துச் செய்யலாம்)
5. இட்லி
6. தோசை
7. போஹா (தயிர் அல்லது பால் சேர்த்துச் சாப்பிடலாம்)
8. மர்முரா (பஃப் செய்யப்பட்ட சாதம்) (சேவ் பூரி, ஜால் முரி, அல்லது அதனுடன் நெய் கல் உப்பு சேர்த்து வறுக்கவும்)
9. புலாவ் (பலவகையான காய்கறிகளுடன் தயார் செய்யுங்கள்)
10. கீர்
11. அரிசி சூப்
12. அரிசியை இந்திய சூப்பர்ஃபுட் என்று எளிதில் கருதலாம், இது இந்தக் கடினமான காலங்களில் உங்களுக்கு உதவக்கூடும். இது மலிவானது, சத்தானது, கொழுப்பு இல்லாதது, பல வழிகளில் சமைக்கப்படலாம் மற்றும் சமைக்க எளிதானது.

கோதுமை

பெரும்பாலான இந்திய வீடுகளில் பொதுவாகக் காணப்படும் கோதுமை ஒரு பிரதான உணவு. இந்த தானியத்தைப் பின்வருவனவற்றிற்குப் பயன்படுத்தலாம்

1. ரோட்டி
2. பராந்தா (அஜ்வைன், காலிஃபிளவர், பட்டாணி, வெங்காயம், உருளைக்கிழங்கு, முள்ளங்கி, கேரட் சேர்த்துச் செய்யக் கூடியது)
3. ஷக்கர் / நாமக் பாரா
4. பூரி
5. மத்ரி
6. ஹல்வா
7. டாலியா

பருப்பு

பருப்புகள் குறிப்பிடப்படாமல் இந்திய உணவை வெறுமனே முழுமையடையாது. உங்கள் உணவுக்குப் பயறு வகைகளைப் பயன்படுத்தக்கூடிய பல வழிகள் பின்வருமாறு:

1. மூங் தால்
2. சென்னா தால்
3. டூர் பருப்பு
4. பருப்பு சூப் (மீதமுள்ள பருப்புடன்)
5. மூங் தால் தோசை
6. சீலா
7. தால் ஹல்வா
8. தால் பார்பி
9. தால் லட்டு
10. டால் சட்னி
11. தால் பராந்தா

k4q3nugg

ராகி

இந்த தானியங்கள் அனைத்தையும் ரோட்டி, கீர், ஹல்வா, தோசை, லட்டு தயாரிக்க பயன்படுத்தலாம்.

இப்போது மேற்கூறிய அனைத்து உணவுகளையும் உணவு யோசனைகளையும் தயாரிப்பதற்கு, உங்களுக்கு சில பொதுவான பொருட்கள் தேவை:

1. மசாலா பொருட்கள் (அவை அனைத்தும் உங்கள் குடும்பத்தில் பாரம்பரியமாகப் பயன்படுத்தப்படுபவை)

2. உப்பு

3. எண்ணெய்

4. நெய்

5. சர்க்கரை

இந்த தனிமைப்படுத்தப்பட்ட காலகட்டத்தில் இந்த உணவுகள், உணவு மற்றும் பொருட்கள் அனைத்தும் உங்கள் உணவை மிகவும் மாறுபட்டதாக மாற்றும். "உங்கள் கலாச்சாரம், நடைமுறை பயன்பாடு மற்றும் படைப்பாற்றல் ஆகியவற்றின் படி இந்த பொருட்களுடன் எத்தனை உணவுகளை நீங்கள் தயாரிக்கலாம் என்று பாருங்கள்" என்று திவேகர் கூறுகிறார், இதற்காக ஒரு சுவாரஸ்யமான சமன்பாட்டை அவர் கூறியதாவது:

லாக்டவுனின் போது முழு குடும்பத்திற்கும் இந்திய உணவு ஆல்ரவுண்டர்கள் (எக்ஸ்) கலாச்சாரம், நடைமுறை பயன்பாடு, படைப்பாற்றல் = ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com