முகப்பு »  நீரிழிவு »  கேரட் ஜூஸ் குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்படுமா?

கேரட் ஜூஸ் குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்படுமா?

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கேரட் எப்படி உதவுகிறது என்பதை பார்ப்போம்

கேரட் ஜூஸ் குடித்தால் நீரிழிவு நோய் கட்டுப்படுமா?

கேரட் பீட்டா கெரட்டின் மற்றும் லைக்கோபீன் நிறைந்துள்ளது. இவை கண்ணில் பார்வை குறைபாடு ஏற்படாமல் பார்த்து கொள்ளும். கேரட்டில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானத்தை தூண்டி உடல் எடையை சீராக வைத்திருக்க உதவும். கேரட்டில் சிலிக்கான் நிறைந்திருப்பதால் சருமம், தலைமுடி மற்றும் நகங்களின் ஆரோக்கியம் மேம்படும். இவை மட்டுமின்றி உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைப்பதிலும் கேரட்டிற்கு பெரிய பங்கு உண்டு. நீரிழிவு நோயை கட்டுப்படுத்த கேரட் எப்படி உதவுகிறது என்பதை பார்ப்போம்.

நீரிழிவு நோயை தடுக்க

கேரட்டில் க்ளைசமிக் இண்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. நீரிழிவு நோய் உள்ளவர்கள் க்ளைசமிக் இண்டெக்ஸ் குறைவாக உள்ள உணவை உட்கொள்வதே சிறந்தது. இதில் இயற்கையாக இருக்கும் இனிப்பு சுவையினால் உடலுக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது. நார்ச்சத்து மிகுந்து இருப்பதால் சர்க்கரை அளவு சீராக இருக்கும். நார்ச்சத்து ஜீரணமாக நீண்ட நேரம் எடுக்கும் என்பதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும். கேரட்டில் மிக குறைவான கலோரிகளே உள்ளது. 100 கிராம் கேரட்டில் 41 கலோரிகள் உள்ளன. கலோரிகள் குறைவான உணவே நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கேரட்டில் இருக்க கூடிய பீட்டா கரோட்டினை வைட்டமின் ஏ சத்தாக மாற்றிவிடுகிறது. இதனால் டைப் 2 நீரிழிவு நோய் அபாயம் வராமல் தடுக்கும்.


carrots

உணவு பழக்கங்களில் கட்டுப்பாட்டை கடைபிடித்தால் மட்டுமே சர்க்கரை நோயை சீராக வைத்திருக்க முடியும். கேரட்டில் ஜூஸ், அல்வா போன்றவற்றை செய்து சாப்பிட ஆரோக்கியமாக இருக்கும். கேரட்டை அப்படியே வெட்டி சாப்பிடலாம் அல்லது சூப் செய்து குடிக்கலாம். இதில் இருக்கக்கூடிய நார்ச்சத்து முழுமையாக கிடைத்துவிடும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------