முகப்பு »  Women's Health »  இந்த ஹெர்பல் டீ மாதவிடாய் கால வலிகளை குறைக்கும்

இந்த ஹெர்பல் டீ மாதவிடாய் கால வலிகளை குறைக்கும்

பெருஞ்சீரகத்தில் அழற்சியை குறைக்கும் தன்மை உள்ளது

இந்த ஹெர்பல் டீ மாதவிடாய் கால வலிகளை குறைக்கும்

பீரியட்ஸ் தினங்களில் பெண்களுக்கு வயிற்று வலியுடன் அவதிப்படுவதை பார்க்கலாம். இந்த வலி உலகமெங்கும் உள்ள பெண்கள் அனுபவிக்கிறார்கள். கருப்பையின் உள்புறச் சதைகள் வீக்கம் காரணமாகவே இந்த வலி ஏற்படுகிறது. பெருஞ்சீரகம் இதற்கு நல்ல வலி நிவாரணியாக செயல்படும். இது  ஒரு  பாரம்பரிய வைத்திய முறை. 

மாதவிடாய் கால வலிகளுக்கு பெருஞ்சீரகம் எப்படி உதவுகிறது

பெருஞ்சீரகத்தில் அழற்சியை குறைக்கும் தன்மை உள்ளது. டிகே பப்ளீஸ்ஷிங் ஹவுஸ் வெளியிட்ட ‘ஹீலிங் புட்ஸ்' புத்தகத்தில் பெருஞ்சீரகத் தண்ணீர் பெண்களின் ஹார்மோன் சுரப்பை ஒழுங்குப் படுத்துகிறது எனக் குறிப்பிட்டுள்ளது. பெருஞ்சீரகத்தை இனிப்புகளிலும், மவுத் ஃபிரஷ்னராகவே பயன்படுத்துவது வழக்கம். பெருஞ்சீரகத்தை தண்ணீரில் ஊறவைத்து அந்த தண்ணீரையே குடித்து வந்தால் உடலில் உள்ள கசடுகள் வெளியேறிவிடும். இதை டீ-டாக்ஸ் பானமாக கருதி குடிக்கலாம்.


டாக்டர். பரத் பி அகர்வால் எழுதிய ‘ஹீலிங் ஸ்பைஸஸ்' என்ற புத்தகத்தில் பெருஞ்சீரகத்தில்  வெலாட்டைல் ஆயில் (volatile oil) உள்ளது இதிலுள்ள பைட்டோகெமிக்கல்கள் (phytochemicals) இந்த கெமிக்கல் மாதவிடாயின் போது வரும் வலியை நீக்குகிறது.  “எஸ்ட்ரோஜன் போன்ற கலவைகள் தாவரங்களில் அதிகமாகவுள்ளது. இது மாதம் ஒரு முறை பெண்களுக்கு ஏற்படும் வலிக்கு நண்பனைப் போல் துணையாக உள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பெருஞ்சீரக டீ செய்முறை  பெருஞ்சீரக டீ அஜீரணக் கோளாறுக்கு மிகவும் ஏற்றது. இதைக் குடித்து வந்தால் மாதவிடாய் நேரத்தின் வலி குறையும். வல்லுநர்கள் பலரும் இந்த நீர் உடல் எடையையும்  குறைப்பதாக தெரிவித்துள்ளனர். இதை எளிமையாக வீட்டிலே தயாரிக்க முடியும். 

 தேவையான பொருட்கள் 

1 டேபுள்ஸ்பூன் பெருஞ்சீரகம் 

1 கப் தண்ணீர் டீ 

செய்யும் முறை

  1. கொதிக்கும் தண்ணீரில் பெருஞ்சீரகத்தை போட்டு கொதிக்க வைக்கக் கூடாது.  
  2. டீபாத்திர  வடிகட்டியில்  பெருஞ்சீரகத்தை வைக்கவும். 
  3. அதன் மீது ஒரு கப் நீரை கொதிக்கவைத்து ஊற்றவும். 
  4. 5 நிமிடம் வைத்திருக்கவும். 
  5. அதன்பின் அதை வடிகட்டி சூடாகக் குடிக்கலாம்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.
 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------