முகப்பு »  Women's Health »  கூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்!!

கூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்!!

இந்த ஹேர் மாஸ்க் கொண்டு உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேருங்கள்.  அடர்த்தியான மற்றும் பட்டு போன்ற கூந்தலுடன் அழகாக ஜொலித்திடுங்கள். 

கூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. கூந்தலுக்கு தேவையான ஆரோக்கியம் கிடைக்காவிட்டால் கூந்தல் உடையும்.
  2. யோகர்ட்டில் கால்சியம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
  3. தேன் கூந்தலை மிருதுவாக வைக்கும்.

கூந்தல் உடைவதை தவிர்க்க இவற்றை சாப்பிடலாம்!!

நீளமான, அடர்த்தியான மற்றும் வழுவழுப்பான கூந்தலே எல்லோரும் விரும்புவது.  ஒருவரின் அழகை வெளிக்காட்டுவதில் கூந்தலுக்கு முக்கிய பங்கு உண்டு.  ஆனால் தற்போதைய சுழலில், நிறைய பேருக்கு கூந்தல் உதிர்வு, இளநரை, முடி உடைதல் போன்ற பிரச்னைகள் இருக்கிறது.  இதனை சரிசெய்ய நீங்கள் நிச்சயம் மெனக்கெட வேண்டும்.  உங்கள் கூந்தலை ஆரோக்கியமாக வைத்திருக்க சில ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  குறிப்பாக கூந்தல் உடைவதை தவிர்க்க சில எளிய குறிப்புகள் உங்களுக்காக…

8rsvq3n8

முட்டை ஹேர் மாஸ்க்:

முட்டையில் புரதம் மற்றும் உடலுக்கு தேவையான கொழுப்புகள் இருப்பதால், கூந்தலுக்கு வலு சேர்க்கிறது.  மேலும் முட்டையை தலைக்கு தலைக்கு மாஸ்க் போட்டால், கூந்தல் மிருதுவாகவும், அடர்த்தியாகவும் வளர செய்யும்.  முட்டையுடன் தயிர் அல்லது ஏதேனும் எண்ணெய் சேர்த்து தலைக்கு தடவி வரலாம்.

தேங்காய் எண்ணெய்:

அழகிற்கு மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் தேங்காய் எண்ணெய் மிகவும் நல்லது.  தேங்காய் எண்ணெய் கூந்தலில் நேச்சுரல் கண்டிஷனராக செயல்பட்டு முடி உடைதலை தடுக்கிறது.

யோகர்ட்:

யோகர்டில் கால்சியம், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கிறது.  யோகர்டில் முட்டை அல்லது எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து தலைக்கு மாஸ்க் போல அப்ளை செய்யவும்.  இதனை தொடர்ச்சியாக செய்து வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும்.

வாழைப்பழம்:

வாழைப்பழம் கூந்தலுக்கு சிறந்த கண்டிஷனராக செயல்படும்.  இதில் பொட்டாசியம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் இருப்பதால் கூந்தல் உடைவதை தடுத்து நல்ல வளர்ச்சியை தரும். வாழைப்பழத்தை நன்கு மசித்து அத்துடன் தேன், எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் சேர்த்து கூந்தலுக்கு ஹேர் மாஸ்க் போடலாம்.  இந்த ஹேர் மாஸ்க் கூந்தலை மாய்சுரைஸ் செய்யும். 

பால்:

பாலில் புரதம் அதிகம் இருப்பதால், கூந்தலை மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் வைத்திருக்கும்.  வெதுவெதுப்பான பாலை கூந்தலுக்கு தடவி சிறிது நேரம் கழித்து கூந்தலை அலசி விடவும்.  பாதாம் பால், சோயா பால் அல்லது தேங்காய் பாலும் பயன்படுத்தலாம்.  இதனால் வறண்ட கூந்தல் மிருதுவாகவும் பொலிவாகவும் இருக்கும்.

தேன்:

தேன் உங்கள் சருமத்தையும் கூந்தலுக்கும் சிறந்த மாய்சுரைசராக செயல்படும்.  தேனில் பால், எலுமிச்சை சாறு மற்றும் ஏதேனும் எண்ணெய் சேர்த்து கூந்தலுக்கு தடவி வரலாம்.

இந்த ஹேர் மாஸ்க் கொண்டு உங்கள் கூந்தலுக்கு ஆரோக்கியம் சேருங்கள்.  அடர்த்தியான மற்றும் பட்டு போன்ற கூந்தலுடன் அழகாக ஜொலித்திடுங்கள். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------