முகப்பு »  Travel and Health »  அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்.? உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...

அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்.? உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...

எடை இழப்பு உதவிக்குறிப்புகள் : அடிக்கடி பயணத்தின்போது பின்பற்ற வேண்டிய உணவு மற்றும் உடற்பயிற்சிகள் குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகர் மற்றும் கெய்லா இட்சைன்ஸ் கூறும் உதவிக்குறிப்புகளைப் பற்றி இங்கு பார்க்கலாம்.

அடிக்கடி பயணம் செய்பவரா நீங்கள்.? உங்கள் ஆரோக்கியம் மற்றும் எடையை பராமரிக்க 8 டிப்ஸ் இதோ...

Weight loss tips: Keep yourself well-hydrated throughout your trips

சிறப்பம்சங்கள்

  1. தூங்கும் முன் 5 நிமிடங்கள் சுப்த பத்த கோனாசனத்தைச் செய்யுங்கள்.
  2. விமான பயணத்துக்கு முன், தேநீர் அல்லது காபியைத் தவிர்க்கவும்.
  3. இரவு உணவுக்கு கிச்சடி அல்லது பருப்பு சாதம் ஆர்டர் செய்யவும்.

நீங்கள் அடிக்கடி பயணிக்கும் நபராக இருந்தால், உங்கள் உடல்நலத் தேவைகளை கவனித்துக்கொள்ள வேண்டும் என சொல்வது சுலபமாக இருந்தாலும், செய்வது கடிணமாக இருக்கம். உடற்பயிற்சி செய்ய நேரம் இல்லாமல் போவது, உங்கள் உணவைக் கட்டுப்படுத்த முடியாமல் போவது, அடிக்கடி பயணம் செய்வது ஆகியவை, உண்மையில் உங்கள் ஆரோக்கியத்தையும் எடையும் பாதிக்கும். சமீபத்திய இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்றில் ருஜுதா திவேகர், அடிக்கடி பயணிப்பவர்களுக்கான சில உதவிக்குறிப்புகளை பகிர்ந்துள்ளார்.

அடிக்கடி பயணிப்பவர்களின் ஆரோக்கியத்தையும் எடையும் பராமரிக்க சில உதவிக்குறிப்புகள் :

1. உங்கள் பயணம் முழுவதும் உங்களை நன்கு நீரேற்றமாக (well-hydrated) வைத்திருங்கள். நீங்கள் எங்கு சென்றாலும், எல்லா நேரங்களிலும் அவசியமாக ஒரு பாட்டில் தண்ணீர் வைத்திருக்க வேண்டும்.


spgpriho

நிறைய தண்ணீர் குடித்து உங்களை நன்கு நீரேற்றமாக (hydrated) வைத்திருங்கள்.
Photo Credit: iStock

2. உங்கள் விமான பயணத்துக்கு முன், தேநீர் அல்லது காபியைத் தவிர்க்கவும். போர்டிங் மற்றும் போஸ்ட் லேண்டிங் செய்வதற்கு முன் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் இதைப் பின்பற்ற வேண்டும். இது, சாலைப் பயணங்களுக்கு பொருந்தாது.

3. நீங்கள் தங்குவதற்கு, ​​உடற்பயிற்சி மையம் அல்லது யோகா பாய்களை வழங்கும் ஹோட்டலைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது. அதுவே, நீங்கள் சிறிய நகரங்களுக்குச் செல்கிறீர்கள் என்றால் உங்கள் சொந்த யோகா பாய்களை எடுத்துச் செல்லுங்கள்.

Also read: Following Keto Diet? Try These 5 Tricks To Get Rid Of Keto Flu

4. படுக்கை நேரத்தில் 5 நிமிடங்கள் சுப்த பத்தகோனாசனத்தில் படுத்துக் கொள்ளுங்கள். மாதவிடாய் வலி மற்றும் (Sciatica) சியாட்டிகா வலி வரை இந்த யோகாசனம் பல்வேறு வகையான ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.

5. நீங்கள் விடுதியில் இருந்து வெளியிடங்களுக்கு செல்லும் ஒவ்வொரு முறையும், முன்கூட்டியே இரவு உணவிற்கு கிச்சடி, பருப்பு சாதம் / பாஸ்தா அல்லது ரிசொட்டோவை ஆர்டர் செய்யுங்கள். இரவு உணவிற்கு உங்களுக்கு இது தேவைப்படும் என்பதை அவர்களுக்குத் தெரிவித்து, அவர்கள் அதை உங்கள் அறைக்கு அனுப்ப வேண்டிய நேரத்தையும் அவர்களிடம் சொல்லிவிடுங்கள். திரும்பி வந்த பின்னர் அழைப்பு விடுத்து, உணவிற்காக காத்திருக்க வேண்டாம்.

6. முடிந்தால், உணவகத்திலிருந்து அல்லாமல், ஸ்டாஃப் சமையலறையிலிருந்து உணவைக் கேளுங்கள். பணியாளர்கள் சமையலறை உணவு என்பது வீட்டில் சமைத்த உணவு போன்றது.

Also read: 7 Low-Carb Veggies That Can Help You With Quick Weight Loss And How To Include Them In Your Diet

7. வேர்க்கடலை, பாதாம், பாஸ்தா போன்றவை எல்லா நேரங்களிலும் உங்கள் பாக்கெட்டில் இருக்க வேண்டும். உங்கள் வேலைகள் மற்றும் மீட்டிங்கிற்கு இடையில் அவற்றை நீங்கள் சாப்பிடலாம். குக்கீஸ், பிஸ்கட் மற்றும் பேக்கரி உணவுகளை தவிர்த்து விடுங்கள்.

8. உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முயற்சி செய்யுங்கள். 15 நிமிட உடற்பயிற்சி கூட நீங்கள் அடிக்கடி பயணிப்பவராக இருந்தால் உங்கள் ஆரோக்கியத்தையும் எடையும் பராமரிக்க உதவும்.

பிரபல உடற்தகுதி பயிற்சியாளர் Kayla Itsines தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த முழு உடல் பயிற்சி வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது. இந்த வொர்க்கவுட்டைச் செய்வதற்கு உங்களுக்கு ஒரு டம்பல் மற்றும் நாற்காலி தேவை. டம்பல் கிடைக்கவில்லை என்றால் தண்ணீர் பாட்டில் அல்லது வேறு எந்த கனமான பொருளையும் பயன்படுத்தலாம். ஒரு சுற்றுக்கு 7 நிமிடங்களுக்கு ஒரு டைமரை அமைக்க கெய்லா அறிவுறுத்துகிறார். ஒவ்வொரு சுற்றிலும் நீங்கள் எத்தனை லேப்ஸ் செய்ய முடியும் என்பதைப் பாருங்கள்.

Happy travelling y'all!


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

Also read: 5 Weight Loss Friendly Superfoods That Can Keep Blood Sugar Under Control

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------