முகப்பு »  பல் »  வலியில்லாத பல் மருத்துவம்!

வலியில்லாத பல் மருத்துவம்!

ஆட்டிஸம், டவுன் சிண்ட்ரோம், ஏ.டி.ஹெச்.டி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது என்பதையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும்.

வலியில்லாத பல் மருத்துவம்!

மருத்துவமனை, சிகிச்சை, மாத்திரைகள் என்று சொல்லும்போதே அதோடு சேர்த்து ஊசியும், வலியும் அவை ஏற்படுத்தும் அச்சமும் நமக்குள் பரவிவிடும். அதுவும் பல்லில் பிரச்னை என்றால்  சொல்லவே தேவையில்லை. அந்தப் பயம் பலமடங்கு அதிகரித்துவிடும். சிறியவர் முதல் வயதான பெரியவர்கள் வரை இதற்கு விதிவிலக்கே இல்லை. 

ஆனால், காலம் மாறிவிட்டது. நாம் பயப்படுவதுபோல், நிலைமை இப்போது இல்லை. வலியில்லா மருத்துவம்(painless treatment) என்பது மருத்துவத்துறையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளது. வலியில்லா பல் மருத்துவம் (painless dentistry) மிக அதிக முன்னேற்றத்தை அடைந்து, 0% வலி என்பதை இலக்காக வைத்து வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிறார்கள் பல் மருத்துவர்கள். விளக்கமாகக் கேட்டோம்.  

5kldedbo


ட்ரீட்மென்ட் என்றாலே, நீடில் பியர் (needle fear) என்று சொல்லக்கூடிய ஊசி, வலி பற்றிய பயம்தான் சிகிச்சை தேவைப்படும் நோயளிகளை மனரீதியாக சிகிச்சை எடுத்துக்கொள்வதை ஒத்திப்போட வைக்கும். அது பல பிரச்னைகளை உருவாக்கி நோயை முற்ற வைத்துவிடும். மற்ற சிகிச்சைகளைவிட பல் பிரச்னைகள் தொடர்பான சிகிச்சையில் சர்வ சாதரணமாக நடக்கக்கூடியது. ஆனால், தற்போது அப்படிப்பட்ட பயமே சிகிச்சை பெறுபவர்களுக்குத் தேவையில்லை. காரணம், விஞ்ஞானம், தொழில்நுட்பம் அந்தப் பயத்துக்கான காரணங்களை முற்றிலும் இல்லாமல் செய்துவிட்டது. ஊசி உண்டு... ஆனால், ஊசி இருப்பதே சிகிச்சை பெறுபவருக்குத் தெரியாது; அதுபோல், அது வலியை கடுகளவிலும் ஏற்படுத்தாது. 
குறிப்பாக எல்லா பல் மருத்துவமனைகளிலும் தற்போது,  'லோக்கல் அனஸ்தீசியா ஸ்பிரே', இன்சுலின் சிரின்ஜ் என்பவை பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இதைப் பயன்படுத்தும்போது, சிகிச்சை கொடுக்க வேண்டிய இடத்தைச் சுற்றிலும் ஒருவித மதமதப்பு வந்துவிடும். அதனால், அங்கு கொடுக்கப்படும் சிகிச்சை எதுவாக இருந்தாலும், சிகிச்சை எடுப்பவருக்கு எந்த வலியும் இருக்காது. இதையெல்லாம் தாண்டியும் தற்போது பல் மருத்துவத்தில் வலியற்ற மருத்துவ உபகரணங்கள் வந்துவிட்டன. 

வேன்ட் மெஷின்(wand injection system) அதில் மிக முக்கியமான தொழில்நுட்ப உபகரணமாகத் திகழ்கிறது. இதைப் பயன்படுத்தும்போது டாக்டர் ஊசி மூலம் மருந்து கொடுக்கத் தேவையில்லை. இந்த மெஷினே ஊசி மருந்தை சிகிச்சை பெறுபவருக்குக் கொடுத்துவிடுகிறது. இதில், அந்த உபகரணத்தை சிகிச்சை கொடுக்கவேண்டிய இடத்தில் சரியாகப் பொருத்துவது மட்டும்தான் இங்கு டாக்டருக்கு வேலை! இதில் பெரிய நன்மை என்னவென்றால், குழந்தைகளுக்கு இதன்மூலம் எளிதாக மருந்தை செலுத்த முடியும். ஏனென்றால், இதில் ஊசி இருப்பதே சிகிச்சை பெறுபவருக்குத் தெரியாது. வலியை சிறிதும் நாம் உணராத வகையில் இந்த மெஷின் மருந்ததைச் செலுத்துகிறது.

மற்றொன்று டென்டல் வைப் டெக்னாலஜி(dental vibe injection system). இது அதிர்வுகள் மூலம் வலியைக் கட்டுப்படுத்தும் மற்றொரு அதிசயம். இந்த உபகரணத்தைப் பயன்படுத்தும்போது, லேசான அதிர்வுகள் உருவாகும். அந்த அதிர்வுகள் மூளைக்குச் சென்று, வலியை ஏற்படுத்துவதற்கு காரணமான தூண்டுதல்களை 'பிளாக்' செய்கிறது. அதனால், எந்தவிதமான வலியும் ஏற்படுவதில்லை. இந்த இடத்தில் இதன் மூலம் பக்க விளைவுகள் எதாவது ஏற்படுமா? என்ற சந்தேகம் வருவது இயல்பு. ஆனால், இந்த உபகரணங்கள் அனைத்தும் பக்கவிளைவுகள் அற்றது என்பதே   இதன் சிறப்பு. 


இவை அனைத்துத் தரப்பினருக்கும் மிகப்பயனுள்ளதாக இருக்கும் நேரத்தில், குழந்தைகள்... குறிப்பாக ஆட்டிஸம், டவுன் சிண்ட்ரோம், ஏ.டி.ஹெச்.டி-யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சிகிச்சையளிக்க பெரிதும் உதவியாகவும், பயனுள்ளதாகவும் இருக்கிறது என்பதையும் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். வயது வந்த இளம் பருவத்தினரில், ஆன்சைட்டி டிஸ்-ஆர்டர்ஸ் என்ற பாதிப்பு உள்ளவர்கள் அதிக பதட்டம் உடையவர்களாக இருப்பார்கள். அவர்கள் பக்கத்திலேயே ஊசியையோ.. வேறு உபகரணங்களையோ எடுத்துக்கொண்டு போக முடியாது. லேசாக வலித்தாலும் சிகிச்சையை தொடர அனுமதிக்கமாட்டார்கள். அதனால் அவர்களைப்போன்றவர்களுக்கு சிகிச்சை அளிப்பது  டாக்டர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும். அதுவும் பல் மருத்துவம் போன்ற நீண்டநேர சிகிச்சையை அவர்களைப்போன்ற நோயாளிகளுக்குக் கொடுப்பது மிகமிக கடினமானது. ஆனால், தற்போது உள்ள இதுபோன்ற டெக்னாலஜிகள் சிகிச்சை பெறும் இவர்களைப்போன்ற குழந்தைகளுக்கும், அவர்களுடைய பெற்றோர்களுக்கும், டாக்டர்களாகிய எங்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக உள்ளது என்று தெரிவிக்கிறார் பல் மருத்துவர் ஜீனத் அமீத்தா பர்வீன். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------