முகப்பு »  பாலியல் சுகாதாரம »  ஆண்களுக்கு அதிக ஆற்றலைத்தரும் தர்பூசனி விதை…!

ஆண்களுக்கு அதிக ஆற்றலைத்தரும் தர்பூசனி விதை…!

உடலில் ரத்தத்தை அதிக அளவில் பாயச்செய்து ஆண்மையை மேம்படுத்த வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

ஆண்களுக்கு அதிக ஆற்றலைத்தரும் தர்பூசனி விதை…!

போதிய மழை இல்லை, கால நிலை மாற்றத்தால் அதிக வெய்யில் ஏற்பட்டு உடல் வெப்பம் அடைகிறது. இதனால் பல்வேறு நோய் தொற்றுகளும், உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. கால நிலைக்கு ஏற்றவாரே இயற்கை மகத்தான உணவு வகைகளையும் நமக்கு கொடுக்கிறது. இதை முறையாக பயன்படுத்தினாலே இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து நம் உடலை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்கிறது ஆயுர்வேதம்.

அப்படி கொடிய வெய்யில் காலங்களில் எளிதாக கிடைக்கும் தர்பூசனி பழத்தின் ஆச்சர்யமான பல விஷயங்களை நம்மோடு பகிர்ந்துக்கொள்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

“பருவக்காலங்களுக்கு ஏற்றவாறு உணவுப் பழக்கவழக்கங்களையும் மாற்றிக்கொண்டால்தான் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முடியும் என்கிறது ஆய்வு.


அவ்வாறு கோடைக்காலங்களில் மற்றக்காலங்களில் கிடைக்காத  பழங்கள் நமக்கு கிடைக்கும். அவ்வாறு கோடை காலங்களில் எளிமையாகவும் பரவலாகவும் கிடைக்கக்கூடிய ஒன்றுதான் தர்பூசனி பழம்.

இந்த பழம் கோடைகாலத்தில் ஏற்படும் சோர்வு, தண்ணீர் தாகம், சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் போன்றவற்றிற்கு நிவாரணம் தரக்கூடியது. பொதுவாக இப்பழத்தை சாப்பிடுபவர்கள் விதைகளை தூர வீசிவிடுவார்கள். பழச்சாரு மிகச்சிறந்த பானம். இப்பழத்தின் விதை மிகச்சிறந்த மருந்து என்பது நம்மில் பலருக்கு தெரிவதில்லை.

உணவு என்பது சுவையை பொருத்தது, மருந்து என்பது அது செயல்படும் வீரியத்தை பொருத்தது என்பார்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்ம தர்பூசனிப்பழம்.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

தர்பூசனி விதையை காயவைத்து பொடி செய்து இரண்டு வேளை பசும் நெய்யில் கலந்து சாப்பிட்டால் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைபடுதல், சிறுநீர் தடை போன்ற பிரச்னைகள் நீங்கும்.

மேலும் தர்பூசனி விதையில் ஆண்மையை அதிகரிக்கும் citrulline என்கிற வேதிப்பொருள் இருப்பதாலும் உடலில் அர்கினைன் என்ற அமினோ ஆசிட்டாக மாறுவதாலும் இவை நைட்ரிக் ஆக்சைட் வேதிப்பொருளை தேக்கி வைக்கிறது. இதனால் உடலில் ரத்தத்தை அதிக அளவில் பாயச்செய்து ஆண்மையை மேம்படுத்த வழிவகுக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  ஆகையால் தர்பூசனி பழம் சாப்பிடும் போது அதன் விதையையும் உட்கொள்வது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்” என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் பாலமுருகன்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------