முகப்பு »  பாலியல் சுகாதாரம »  மன அழுத்தத்திற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்புண்டு!!!

மன அழுத்தத்திற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்புண்டு!!!

புகைப்பழக்கம், மதுபழக்கம் ஆகியவற்றை கைவிடுங்கள்.  அது உங்களுக்கு மனநல பாதிப்பை உண்டாக்கும்.

மன அழுத்தத்திற்கும் மலட்டுத்தன்மைக்கும் தொடர்புண்டு!!!

சிறப்பம்சங்கள்

  1. தினசரி ஆழ்ந்த உறக்கம் வேண்டும்.
  2. ஆரோக்கியமான உடலுறவுக்கு ஆழ்ந்த உறக்கம் அவசியம்.
  3. மன அழுத்தம் மலட்டுத்தன்மையை உண்டாக்கும் தன்மை கொண்டது.

தற்போதைய வாழ்வியல் முறை காரணமாக இங்கு நிறைய பேருக்கு மலட்டுத்தன்மை ஏற்பட்டிருக்கிறது.  பாதுகாப்பற்ற உடலுறவு கொண்ட பின்னரும் கருத்தரிக்காமல் இருப்பதையே மலட்டுத்தன்மை என்கின்றனர்.  நீங்கள் உங்கள் இணையருடன் உடலுறவு கொண்ட பின்பும் கருத்தரிக்காவிட்டால் அதற்கு பல காரணங்கள் இருக்கலாம்.  ஆனால் அதில் முக்கிய காரணமாக மன அழுத்தம் தான் இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள்.  அதிகபடியான மன அழுத்தம் மலட்டுத்தன்மையை உண்டாக்குகிறது. 

புகைப்பழக்கம், மது, போதை வஸ்துகளுக்கு அடிமையாகியிருத்தல் ஆகியவை ஒரு மனிதனுக்கு மன அழுத்தத்தை அதிகரித்து மனநோயாளியாக்குகிறது.  வேலை மற்றும் சுய வாழ்க்கையை சமமாக சமாளிக்க தெரியாத ஒருவருக்கு மன அழுத்தம் உண்டாகிறது.  இரவு நீண்ட நேரம் வேலை பார்த்து பின் மீண்டும் அதிகாலையிலேயே எழுந்து வேலைக்கு ஓடுவதால் தூக்கம் சரியாக இல்லாமல் இருக்கும்.  இதனால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.  இந்த பரபரப்பான வாழ்க்கை முறை காரணமாக உணவு பழக்கமும் சீராக இருப்பதில்லை.  இதன்விளைவாக உடல் பருமன்  மற்றும் மலட்டுத்தன்மை ஏற்படும். 


f7d246r

மன அழுத்தத்தினால் ஒருவர் சாப்பிடுவதை தவிர்த்தும் விடுவர்.  சில அதிகபடியாக சாப்பிடவும் செய்வர்.  இதன் காரணமாக ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் உடல் பருமன் ஏற்படும்.  தொடர்ச்சியாக ஆண்கள் துரித உணவுகளை சாப்பிடும்போது விந்தணுவின் தரம் குறைந்துவிடும்.  மன அழுத்தம் மற்றும் கோபம் இரண்டுமே ஒருவரின் தாம்பத்ய வாழ்க்கையை சிறப்பானதாக வைக்காது. 

மன அழுத்தத்தை குறைத்து மலட்டுத்தன்மையை சரிசெய்ய என்ன செய்யலாம்:

  1. தினசரி குறைந்தபட்சம் 6 மணி நேர தூக்கம் மிகவும் அத்தியாவசியம். 
  2. குடும்பத்துடன் அல்லது தூங்க போகும் முன் செல்போன் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
  3. உங்கள் இணையருடன் ஆரோக்கியமான உடலுறவு கொள்ளுதல் நல்லது.  தொடர்ச்சியாக உடலுறவு வைத்து கொள்வது உங்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக செயல்படுவதோடு உங்கள் இணையருடன் நெருக்கத்தையும் அதிகரிக்கிறது. 
  4. புகைப்பழக்கம், மதுபழக்கம் ஆகியவற்றை கைவிடுங்கள்.  அது உங்களுக்கு மனநல பாதிப்பை உண்டாக்கும்.
  5. வேலை மற்றும் சொந்த வாழ்க்கை இரண்டையும் சரியாக கையாளுங்கள்.  இப்படியான ஆரோக்கியமான வாழ்க்கை முறை உங்களுக்கு ஆரோக்கியமான கரு வளர்ச்சியை உண்டாக்கும்.

மன அழுத்தத்தை குறைக்க நண்பர்கள் மற்றும் குடும்பத்துடன் நிறைய நேரம் செலவழியுங்கள்.  உங்களுக்கு பிடித்தமான உணவுகளை சமைத்து சாப்பிடலாம்.  படம் பார்ப்பது அல்லது ஏதேனும் சுற்றுலா செல்வது என உங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளுங்கள்

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------