முகப்பு »  ஊட்டசத்து »  இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிடலாமா…?

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிடலாமா…?

Hypertension: உருளைக்கிழங்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள ஒரு காய்கறி. உருளைக்கிழங்கில் விட்டமின் சி, ஃபைபர், பொட்டாசியம், பி வைட்டமின், காப்பர், ட்ரைடோபன், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் உருளைக் கிழங்கை சாப்பிடலாமா…?

16ம் நூற்றாண்டுக்கு முன்பு வரை இந்திய உணவு முறைகளில் உருளைக்கிழங்கு என்ற ஒன்று இல்லவே இல்லை என்பது தெரியுமா… போர்த்துக்கீசியர்களின் வருகைக்குப் பின்னரே இந்தியாவில் உருளைக்கிழங்கு பயிரிடப்பட்டது. உருளைக்கிழங்கு ஒருவித வித்தியாசமான வெர்ஸடைல் காய்கறி வகைகளுள் ஒன்று. உருளைக்கிழங்கை குழம்பாகவோ அல்லது க்ரேவியாகவோ செய்து அரிசி சாதத்துடன் சாப்பிடலாம். தெருவோர உணவுகளில் சிப்ஸாக அல்லது எண்ணெய்யில் வறுத்து பரோட்டாவுடன் வைத்து சாப்பிடக் கிடைக்கும். உருளைக் கிழங்கு கார்போஹைட்ரேட் அதிகமுள்ள ஒரு காய்கறி. உருளைக்கிழங்கில் விட்டமின் சி, ஃபைபர், பொட்டாசியம், பி விட்டமின், காப்பர், ட்ரைடோபன், மக்னீசியம் ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன. இதில் இயற்கையாக உள்ள அல்கலைன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை டி-டாக்ஸ் செய்து விடும். உருளைக்கிழங்கு என்று நினைத்தாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது எண்ணெய்யில் பொறித்த ஸ்நாக்ஸ் வகைகள் மட்டுமே. ஆனால், உருளைக்கிழங்கை சரியான வகையில் செய்து சாப்பிட்டால் அதிலுள்ள ஆரோக்கியமான விஷயங்கள் யாவும் இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது.   

இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உருளைக் கிழங்குகள் உதவுமா? 

டிகே பப்ளிஷிங் வெளியிட்ட ஹீலிங் ஃபுட்ஸ் (Healing Foods) என்ற புத்தகத்தில் “உருளைக்கிழங்கில் அதிகளவில்  க்ளோரோஜெனிக் (chlorogenic acid) மற்றும் அன்தோசையானின் ( anthocyanins)என்ற வேதிப்பொருட்கள் அதிகளவில் உள்ளது. இந்த வேதிப்பொருட்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கக் கூடியது.” எனக் கூறப்பட்டுள்ளது. உடலுக்குத் தேவையான பொட்டாசியத்தை பெற உருளைக்கிழங்கு வகை உணவுகளில் எடுத்துக் கொள்ளலாம். 


இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் ஷில்பா அரோராவிடம் கேட்ட பொழுது, “உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பொட்டாசியம் அதிகமுள்ள உணவுப்பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.  உருளைக்கிழங்கு, பீட்ரூட், கேரட் ஆரஞ்சு, மற்றும் வாழைப்பழம் ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும் என்று தெரிவிக்கிறார்.”  

பொட்டாசியம் உடலில் உள்ள அதிகப்படியான சோடியத்தை சிறுநீர் மூலமாக வெளியேற்றுகிறது. அதிகப்படியான சோடியம் இரத்த குழாயின் சுவர்களில் படிவதை தடுக்கிறது. நூறுகிராம் உருளைக்கிழங்கில் 421மி.கி பொட்டாசியம் உள்ளது. 

rm1i96k8

உருளைக்கிழங்கை எப்படி சாப்பிட வேண்டும்..?

உருளைக்கிழங்கினை எண்ணெய்யில் வறுத்து சாப்பிடுவதால் அதில் ட்ரான்ஸ் ஃபேட் அதிகரிக்கிறது. மாற்றாக  உருளைக்கிழங்கை தோல் நீக்கி அதை துருவி சாறு எடுத்து அதைச் சாப்பிடலாம். அல்லது தோலுடன் வேகவைத்து அல்லது க்ரிலில் செய்தோ சுட்டோ சாப்பிடலாம். 

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.


 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------