முகப்பு »  ஊட்டசத்து »  இந்த வருட டயட் ப்ளானில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்!

இந்த வருட டயட் ப்ளானில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்!

உடல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம்

இந்த வருட டயட் ப்ளானில் இவற்றை சேர்த்து கொள்ளுங்கள்!

உடல் ஆரோக்கியத்திற்கு நீங்கள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவை சாப்பிடுவது அவசியம்.  நீங்கள் சாப்பிடக்கூடிய உணவை பொருத்து தான் உங்கள் உடலிக்கு நேர்த்தியான வடிவம் கிடைக்கும்.  உடல் உபாதைகள் ஏற்படாமல் இருக்க தினசரி காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.  இந்த 2019 ஆம் ஆண்டின் டயட் ப்ளானில் நிச்சயம் நீங்கள் தவற விடக்கூடாத சில உணவுகளை இங்கே பரிந்துரைக்கிறோம். 

முட்டை:

முட்டையில் புரதம், வைட்டமின் பி2, பி12 இருக்கிறது.  தினசரி முட்டையை உணவில் சேர்த்து கொள்வதால் இரத்த சிவப்பு அணுக்கள் அதிகரிப்பதோடு உடலுக்கு தேவையான ஆற்றலும் கிடைத்துவிடுகிறது.  முட்டையின் மஞ்சள் கருவில் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் இருக்கிறது என்பதால் உணவில் தவறாமல் சேர்த்து கொள்ளவும். 


cb1157f

 

ஓட்ஸ்:

நார்ச்சத்து நிறைந்த ஓட்ஸை காலை உணவாக சாப்பிடலாம்.  இது பசியை போக்கி, இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்கிறது.  ஓட்ஸை ஸ்கிம்டு மில்க் அல்லது யோகர்டுடன் சேர்த்து சாப்பிடலாம். 

பருப்புகள்:

நார்ச்சத்து, புரதம் மற்றும் ஃபோலேட் நிறைந்த பருப்புகளை தினசரி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது.  பீன்ஸ், மொச்சை பயிறு, கொண்டைக்கடலை ஆகியவற்றை சாதத்துடன் சேர்த்து சாப்பிட உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைத்துவிடுகின்றன. 

பழங்கள்:

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பழங்களுக்கு நிகர் பழங்கள் தான்.  இவற்றில் நார்ச்சத்து, வைட்டமின் சி, ஃபோலேட், தாதுக்கள், ஆண்டிஆக்ஸிடண்ட், பொட்டாசியம் நிறைந்திருக்கிறது.  பழங்களில் சோடியம், கொழுப்பு போன்றவை கிடையாது.  உடல் எடை குறைக்க பழங்களை நீங்கள் அதிகம் சாப்பிட வேண்டும்.  இவை உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து ஆரோக்கியத்தையும் பொலிவையும் தருகிறது. 

காய்கறிகள்:

காய்கறிகளில் ஃபோலேட், வைட்டமின் ஏ, கே, பி6, நார்ச்சத்து, ஆண்டிஆக்ஸிடண்ட், பீட்டா கெரட்டின் போன்றவை இருக்கிறது.  நாட்பட்ட நோய்களை குணப்படுத்த காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டும்.  உடல் எடை குறைக்க காய்கறிகள் தான் பெஸ்ட். 

p3ug2ue

 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------