முகப்பு »  செய்தி »  ஸ்பான்சர்டு: கண்புரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஸ்பான்சர்டு: கண்புரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

கண்புரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

ஸ்பான்சர்டு:  கண்புரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை

தெளிவாக இருக்கும் கண் திரை மீது, அடர்த்தியான மற்றும் மந்தாரமான வகையில் உருவாகும் பகுதியே கண்புரை. பெரும்பான்மையான கண்புரைகள், பல ஆண்டுகளாக சிறுகச் சிறுக உருவாகும். கண்புரையுள்ள நபர், தங்கள் அன்றாட பணிகளையே செய்ய சிரமப்படுவார்கள். 

கண்புரைக்கான அறிகுறிகள் மற்றும் அதற்கான சிகிச்சைகள் பற்றி கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘தி ஐ ஃபவுண்டேஷனின்' தலைவர் மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை நிபுணர் மருத்துவர் டி.ராமமூர்த்தி கூறுவதாவது, நம் அனைவரின் கண்களிலும் இயற்கையாக ஒரு லென்ஸ் உள்ளது. இந்த லென்ஸ் வயதினாலையோ, வேறு காரணங்களிலாலையோ வெளித்து போவதனால், வெளிச்சம் கண்ணுக்குள் போவதில் ஒரு குறைபாடு ஏற்படுகிறது. இதனை நாம் படலம், புரை அல்லது கேட்டரேக்ட் என்கிறோம். 


கண்புரைக்கான அறிகுறிகள்: 

படலம் அல்லது புரை ஏற்பட்டால் அதனால் பார்வையில் ஒரு குறைபாடு ஏற்படுகிறது. அதனால், தினசரி வேலைகளான வாகனம் ஓட்டுவது, படிப்பது, கணிணி பார்ப்பது போன்றவற்றை மேற்கொள்வதில் குறைபாடு ஏற்படுகிறது. 

கண்புரை சிகிச்சை: 

படலம் அல்லது புரை ஏற்பட்டால் அதனை மருந்துகளாலோ, சொட்டு மருந்துகளாலோ சரி செய்ய முடியாது. அதற்கு அறுவை சிகிச்சையே ஒரு முறையாகும். சாதாரணமாக அறுவை சிகிச்சையை ஃபேகோ எமுல்ஸிஃபிகேஷன் என்ற அல்ட்ரா சவுண்ட் சக்தி மூலம் இந்த கண்புரையை சிறு துண்டுகளாக்கி சிறு துவாரம் மூலம் வெளியே எடுத்துவிடுகிறோம். இப்போது கணிணியின் உதவி கொண்டு, லேசர் சிகிச்சையால் மேலும் துள்ளியமாக, நுண்ணியமாக, பாதுகாப்பாக செய்ய முடிகிறது. 

இன்ட்ராஒக்யுலர் லென்ஸ் வகைகள்;

அறுவை சிகிச்சையின் போது, இந்த இயற்கை லென்ஸை நாம் எடுத்துவிடுவதால், கண்ணுக்குள் செயற்கை லென்ஸை பொருத்த வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இந்த செயற்கை லென்ஸ் சாதாரணமாக மோனோஃபோகல் லென்ஸ் என்று ஒரே ஒரு சக்தி தான் கொண்டிருக்கும். அப்போது, படிப்பது, செல்போன் பார்ப்பது, கணிணியில் பணிபுரிவது போன்ற கிட்டப்பார்வை வேலைகளுக்கு கண்ணாடி போட வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. 

இப்போது மல்டிஃபோகல் லென்ஸ் என்று ஒரே லென்ஸில் பல சக்திகள் இருப்பதால், கண்ணாடியே வெளியில் போடாமல் அறுவை சிகிச்சைக்கு பின்னால் நம்மால் செயல்பட முடிகிறது. 

இதற்கும் மேலாக எக்ஸ்டென்டு ரேஞ்ச் ஆஃப் விஷன் லென்ஸூகள் தற்போது கிடைக்கிறது. இந்த லென்ஸூகளால் வெவ்வேறு தூரத்தில் கண்ணாடியின் அவசியம் இல்லாமல் பார்வை தரத்தில் முன்னேற்றம் ஏற்படுவதால், கண்புரை அறுவை சிகிச்சைக்கு பின் ஒருவருக்கு வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவிலான தரமான பார்வையை அவருக்கு கொடுக்க முடிகிறது. 

முடிவு;


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

படலம் அல்லது கண்புரை என்பது ஒருவருக்கு வயதினால், இயற்கையாக ஏற்படுவதாகும். இது ஒரு வியாதி என்று நாம் கருதக்கூடாது. எப்போது இதனால், ஒருவரின் பார்வையில் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போது அவர் நல்ல முறையில் அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. அறுவை சிகிச்சையில் ஏற்படும் முன்னேற்றங்களாலும், உள்ளே வைக்கும் லென்ஸில் ஏற்படும் முன்னேற்றத்தினாலும், இந்த சிகிச்சைக்கு பின்னர் ஒருவருக்கு உடனடியாக நல்ல பார்வையை கொடுக்க முடிகிறது. 

இந்த சிகிச்சையின்போது, ஊசி தேவையில்லை, கட்டு தேவையில்லை. இந்த சிகிச்சைக்கு பின் ஒருவர் வீட்டின் உள்ளேயும், வெளியேயும் தினசரி எதையெல்லாம் செய்வாரோ, அவற்றையெல்லாம் செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

-------------------------------- விளம்பரம் -----------------------------------