முகப்பு »  செய்தி »  முலாம்பழம்: இந்தப் பழத்தின் 5 ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

முலாம்பழம்: இந்தப் பழத்தின் 5 ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

முலாம்பழம் ஒரு இனிப்பு சுவை கொண்ட கோடைக்கால பழமாகும். இந்த பழத்தில் பல ஊட்டச்சத்துக்களுடன் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது.

முலாம்பழம்: இந்தப் பழத்தின் 5 ஆரோக்கிய நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்!

செரிமான பிரச்சினைகளை எதிர்த்துப் போராட முலாம்பழம் உதவும்.

சிறப்பம்சங்கள்

  1. மலச்சிக்கலை வெல்ல முலாம்பழம் உதவும்
  2. இந்த பழங்களில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது
  3. நீங்கள் முலாம்பழம் கொண்டு புத்துணர்ச்சியூட்டும் பானங்களையும் தயாரிக்கலாம்

முலாம்பழம் ஒரு இனிப்பு சுவை கொண்ட கோடைக்கால பழமாகும். இந்த பழத்தில் பல ஊட்டச்சத்துக்களுடன் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. கோடைக்காலத்தில் நம் உடலுக்குச் சரியான நீரேற்றம் தேவைப்படுகிறது. குடிநீர் மட்டுமல்ல, பல பழங்களில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது, இது நீரிழப்பைத் தடுக்கவும் உதவும். முலாம்பழம் ஒரு புத்துணர்ச்சியூட்டும் பழம் மற்றும் பலருக்கு அதன் சாத்தியமான நன்மைகள் பற்றித் தெரியாது. கோடை காலத்தில், வெவ்வேறு ஊட்டச்சத்துக்களைப் பெற நீங்கள் தினமும் ஃபிரஷ் பழங்களை உட்கொள்ள வேண்டும். இந்த பழங்களின் அதிக நீர் உள்ளடக்கம் நீரிழப்பை வெல்ல உதவும். நீங்கள் தவறவிடக்கூடாத முலாம்பழத்தின் சில குறிப்பிடத்தக்க ஆரோக்கிய நன்மைகள் இங்கே.

1. உங்கள் இரத்த அழுத்தத்திற்கு நல்லது

முலாம்பழத்தில் பொட்டாசியம் உள்ளது, இது உங்கள் இரத்த அழுத்த எண்களுக்கு நன்மை பயக்கும். முலாம்பழத்தில் உள்ள அதிக நார்ச்சத்து மற்றும் நீர் உள்ளடக்கம் கட்டுப்படுத்தப்பட்ட இரத்த அழுத்த எண்களுக்கும் பங்களிக்கின்றன. நீங்கள் இந்தப் பழத்தைத் துண்டுகளாக வெட்டி இதை ஒரு மாலை சிற்றுண்டாக அல்லது நாளின் எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம்.


s246rnt

2. செரிமானத்துக்கு உதவும்

முலாம்பழத்தின் நீர் மற்றும் நார்ச்சத்து உங்கள் செரிமான அமைப்புக்கு நல்லது. இது மலச்சிக்கலைத் தடுக்கவும் உதவும். முலாம்பழம் சாப்பிடுவது குடல் இயக்கத்தைச் சீராக்க உதவுகிறது மற்றும் உங்கள் வயிற்றில் குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

3. நீரேற்றத்துக்கு உதவும்

முலாம்பழத்தில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. நீரிழப்பைத் தடுக்க நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் மற்றும் தண்ணீரில் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். தர்பூசணி, மாம்பழம், கிவி, பெர்ரி மற்றும் முலாம்பழம் உள்ளிட்ட பல வகையான பழங்களை நீங்கள் உட்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் ஃபிரஷ் பழங்களைச் சாப்பிடலாம்.

g4l1u1m8

4. சரும ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

முலாம்பழம் உங்கள் சருமத்திற்கும் நல்லது. அதிக அளவு ஆண்டிஆக்ஸிடண்ட் சருமத்தைச் சுத்திகரிக்க உதவும். இது சருமத்துக்கு நன்மை பயக்கும் கொலாஜன் நிறைந்துள்ளது. இதை உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் சருமத்திற்கு நன்மை பயக்கும். ஃபேஸ் பேக்குகளை தயாரிக்கவும் இது பயன்படுகிறது.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

5. பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது

உங்கள் உணவில் முலாம்பழம்  சேர்ப்பது உங்களுக்குப் பலவிதமான ஊட்டச்சத்துக்களை வழங்கும். இந்த கோடை பழத்தில் மிகக் குறைந்த கலோரிகள் உள்ளன மற்றும் ஃபைபர், வைட்டமின் ஏ, ஃபோலேட், பொட்டாசியம், புரதம் மற்றும் வைட்டமின் சி ஆகியவை நிறைந்துள்ளன.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------