முகப்பு »  செய்தி »  உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் தர்பூசணி... ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட வேண்டும்!

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் தர்பூசணி... ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட வேண்டும்!

ஆரோக்கியமான வாழ்க்கை முறை உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்கவும் திறம்படவும் கட்டுப்படுத்த உதவும். ஆரோக்கியமான ரத்த அழுத்த எண்களைப் பராமரிப்பதில் டயட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது.

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் தர்பூசணி... ஒரு நாளில் எவ்வளவு சாப்பிட வேண்டும்!

உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்கள் பல்வேறு பழங்களில் உள்ளன.

சிறப்பம்சங்கள்

  1. சரியான உணவு மூலம் உயர் ரத்த அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்த முடியும்
  2. தர்பூசணியில் அதிகபட்ச நீர்சத்து உள்ளது
  3. தர்பூசணி எடை குறைக்க உதவுகிறது

உயர் ரத்த அழுத்தம் நீங்கள் நினைப்பதை விட ஆபத்தானது. இது உங்கள் ஆரோக்கியத்தை பல்வேறு வழிகளில் குறிப்பாக உங்கள் இதயத்தைப் பாதிக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தாமல் விடக்கூடாது. ரத்த அழுத்த எண்களைக் கட்டுப்படுத்த பல்வேறு உத்திகள் உங்களுக்கு உதவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்கவும் திறம்படவும் கட்டுப்படுத்த உதவும். ஆரோக்கியமான ரத்த அழுத்த எண்களைப் பராமரிப்பதில் டயட்டும் முக்கிய பங்கு வகிக்கிறது. கோடைக் காலம் உங்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பல வகையான பழங்களை வழங்குகிறது. தர்பூசணி ஒரு பிரகாசமான சிவப்பு நிற பழமாகும், இது கோடைக்காலத்தில் நீங்கள் உட்கொள்ளலாம். இந்த பழம் உங்கள் ரத்த அழுத்தத்திற்கும் நல்லது. உயர் ரத்த அழுத்தத்திற்கு தர்பூசணியின் நன்மைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

உயர் ரத்த அழுத்தம்: உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த தர்பூசணி எவ்வாறு உதவும்

உயர் ரத்த அழுத்தத்தை எதிர்த்துப் போராட தர்பூசணி ஒரு சுவையான மற்றும் ஆரோக்கியமான விருந்தாக இருக்கும். இதில் அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது. இது வீக்கத்தைக் குறைத்து ஆக்ஸிடெண்ட் அழுத்தத்தைக் குறைக்க உதவும்.


கொலம்பியா ஆசியா மருத்துவமனையின் தலைமை டயட்டீஷன் பவித்ரா என் ராஜ்,  “தர்பூசணி ஒரு குக்குர்பிடேசி குடும்பத்தைச் சொந்தமாகக் கொண்டது. இதில் 92% அதிக நீர் உள்ளடக்கம் உள்ளது மற்றும் நல்ல அளவு லைகோபீன், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பொட்டாசியம், அமினோ அமிலம், ஆக்ஸிடெண்ட்ஸ் மற்றும் குறைவான சோடியம் மற்றும் கலோரிகள் கொண்டது (ஒரு சர்விங் 40 கிலோகலோரி),” என்று விளக்கினார்.

mu9n9rrg

மேலும் அவர், “தர்பூசணியில் எல் சிட்ரூலைன் என்ற அமினோ அமிலமும் நிறைந்துள்ளது, இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது, இதன் விளைவாகக் குறைந்த ரத்த அழுத்தம் மற்றும் இருதய ஆரோக்கியம் மேம்படும். நைட்ரிக் ஆக்சைடு ஒரு வாயுவை உற்பத்தி செய்ய சிட்ரூலைன் உதவுகிறது, இது ரத்த நாளங்களைத் தளர்த்துகிறது மற்றும் தமனிகளில் நெகிழ்வுத்தன்மையை ஊக்குவிக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது மற்றும் தர்பூசணியின் லைகோபீன் உள்ளடக்கம் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்கிறது,” என்றார்.


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

எப்படி மற்றும் எப்போது தர்பூசணியை சாப்பிட வேண்டும்?

தர்பூசணி இயற்கையில் சற்று அமிலத்தன்மை கொண்டது, எனவே வெறும் வயிற்றில் சாப்பிடுவதையும், நள்ளிரவில் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று பவித்ரா என் ராஜ் கூறுகிறார். ஒருவர் ஒரு நாளைக்கு இரண்டு கப் அளவு சாப்பிடுவது சிறந்தது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------