முகப்பு »  செய்தி »  டயாலிசிஸ்: இது வாழ்க்கையின் முடிவா?

டயாலிசிஸ்: இது வாழ்க்கையின் முடிவா?

டயாலிசிஸ் குறித்து பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த கருத்துகளும், அந்த கருத்துகளுக்கு மருத்துவர் அபிராமி தரும் விளக்கங்கள்.

டயாலிசிஸ்: இது வாழ்க்கையின் முடிவா?

நம் உடலில் உள்ள சிறுநீரகங்கள் வேலை செய்யாத பட்சத்தில், ரத்தத்தில் உள்ள நச்சு பொருட்களை நீக்க செய்யப்படும் சிகிச்சையே டயாலிசிஸ். இதுமட்டுமின்றி உடலில் மருந்துகள் மற்றும் இரசாயனங்கள் தவறுதலாக கலந்துவிட்டால் அதை நீக்கவும் டயாலிசிஸ் பயன்படுகிறது. நுரையீரல் வீக்க சிகிச்சைக்கும் இந்த டயாலிசிஸ் பயன்படுத்தப்படுகிறது. அப்படி இருப்பினும், இந்த டயாலிசிஸ் குறித்து பல கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அந்த கருத்துகளும், அந்த கருத்துகளுக்கு மருத்துவர் அபிராமி தரும் விளக்கங்களை பார்ப்போமா?

மருத்துவர் அபிராமி, சேலம் காவேரி மருத்துவமனையில் சிறுநீரக நோய் நிபுணராக பணியாற்றி வருகிறார்.

கருத்து: டயாலிசிஸை ஒருமுறை செய்தால், வாழ்க்கை முழுவதும் தொடர வேண்டும்.


இல்லை. டயாலிசிஸ் என்பது சிறுநீரகம் செயலிளந்த நேரத்தில் மேற்கொள்ளப்படும் ஒரு சிகிச்சை. சிறுநீரகம் செயலிளந்த நேரத்தில் மட்டுமே இந்த டயாலிசிஸை செய்வதற்கான தேவை இருக்கும். எப்போது, சிறுநீரகம் தன் வேலையை செய்யத் துவங்குகிறதோ, அப்போதே டயாலிசிஸை நிறுத்திக் கொள்ளலாம்.

naej1l9

கருத்து: டயாலிசிஸ் = வாழ்க்கையின் முடிவு

இதுவும் உண்மையில்லை. அமெரிக்காவின் தரவுகளின்படி, ஒரு நோயாளி வயது மற்றும் பாலினத்துடன் பொருந்தியவுடன், ஹீமோடயாலிசிஸ் (HD3) மூலம் 3 ஆண்டுகள் உயிர்வாழும் விகிதம் 92% ஆக உள்ளது. மேலும் சில முறைகளில் உயிர்வாழ்வது என்பது இன்னும் அதிகமாகவே உள்ளது. வீட்டிலேயே ஹீமோடயாலிசிஸ் செய்பவர்கள் சராசரியாக 18.5 ஆண்டுகள் உயிர் வாழ்கிறார்கள் என்கிறது அந்த தரவு. இது குறித்த இந்திய தரவுகளைப் பெறுவது கடினம்.

கருத்து: ஒருமுறை டயாலிசிஸ் செய்தால், வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும்

இதற்கான தீர்வுகளை டலாலிசிஸ் மையங்கள் அளிக்கின்றன. வீட்டிலேயே டயாலிசிஸ் செய்துகொள்வது டயாலிசிஸ் நோயாளிகளுக்கு மீண்டும் வேலைவாய்ப்பைப் பெற வாய்ப்பளிக்கின்றன. வேலை செய்யும் திறன் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவை டயாலிசிஸின் தரம் மற்றும் இரத்த சோகை, எலும்பு நோய் போன்ற இது தொடர்புடைய சுகாதாரப் பிரச்சினைகளை நிர்வகிப்பதைப் பொறுத்தது. ஒரு அளவு அனைவருக்கும் பொருந்தாது. நிச்சயமாக நோயாளியின் சமூக ஆதரவு வாழ்க்கைத் தரத்தில் பெரிய பங்கு வகிக்கிறது.

hm1thn6o

தீவிரமான சிறுநீரக பிரச்னைகளை குணப்படுத்த டயாலிசிஸ் ஒரு சிறந்த தீர்வாக இருந்துள்ளது. அப்படி குணப்படுத்த முடியாவிட்டாலும், டயாலிசிஸ், நோயாளிகள் ஒரு அர்த்தமுள்ள வாழ்க்கையை வாழ உதவுகிறது. ஒரு இயந்திரத்தால் நீண்ட காலத்திற்கு மாற்றக்கூடிய ஒரு முக்கியமான உறுப்பு சிறுநீரகம். எதிர்காலத்தில், ஸ்டெம் செல்கள் மற்றும் உயிர் செயற்கை சிறுநீரகங்களின் முன்னேற்றத்துடன், டயாலிசிஸ் இன்னும் திறன் கொண்டதாக இருக்கும் என்கிறார் சேலம் காவேரி மருத்துவமனையை சேர்ந்த சிறுநீரக நோய் நிபுணர் அபிராமி.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com