முகப்பு »  செய்தி »  அதிக வெப்பநிலை கொரோனா வைரஸ் வராமல் தடுக்குமா? வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்

அதிக வெப்பநிலை கொரோனா வைரஸ் வராமல் தடுக்குமா? வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்

இந்த வைரஸ் வறண்ட மேற்பரப்பில் 8-10 நாட்கள் ஆக்டிவாக இருக்க முடியும் என்பதையும், அது மனித உடலில் 37 டிகிரி செல்சியஸில் உயிர்வாழும் என்றார்.

அதிக வெப்பநிலை கொரோனா வைரஸ் வராமல் தடுக்குமா? வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்

கொரோனா வைரஸ் சூரிய ஒளி, அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகிய மூன்று விஷயங்களுக்கு உணர்திறன் கொண்டதாக அறியப்படுகிறது.

கொரோனா வைரஸ்: கோவிட்-19 இப்போது உலகில் 110 நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில், அதைக் குணப்படுத்த இன்னும் எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதிகரித்த வெப்பநிலை வைரஸைக் கொல்லக்கூடும் என்றும் கோடைக் காலம் துவங்குவது வைரஸ் பரவுவதில் முறிவுக்கு வழிவகுக்கும் என்றும் ஒரு கருத்து உள்ளது. இருப்பினும், கோவிட் -19ல் கோடைக்கால வெப்பநிலையின் தாக்கம் குறித்து, விஞ்ஞானிகளிடம் திட்டவட்டமான பதில் இல்லை என்று நவி மும்பையின் அப்போலோ மருத்துவமனை, தொற்று நோய்களின் ஆலோசகர் டாக்டர் லக்ஷ்மன் ஜெசானி கூறுகிறார்.

கொரோனா வைரஸ்: COVID-19 வெப்பநிலையின் தாக்கம் என்ன?

மேலும் அவர், “இந்த வைரஸ் வறண்ட மேற்பரப்பில் 8-10 நாட்கள் ஆக்டிவாக இருக்க முடியும் என்பதையும், அது மனித உடலில் 37 டிகிரி செல்சியஸில் உயிர்வாழும். அதே வேளையில், அவை எல்லா வைரஸ்களையும் போலவே வெப்ப லேபிளாகவும், வெப்பத்திற்கு உட்படுத்தப்படும்போது செயலிழக்கப்படுகின்றன அல்லது அழிக்கப்படுகின்றன. இருப்பினும், COVID-19ஐ செயலிழக்கச் சரியான வெப்பநிலை இன்னும் அறியப்படவில்லை.” என்றார்.


உலகெங்கிலும், சூரிய ஒளியும் வெப்பமும் வைரஸின் வளர்ச்சியையும், நீண்ட ஆயுளையும் குறைக்க முடியுமா என்பது குறித்து வெவ்வேறு வல்லுநர்கள் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும், சரியான சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பது, வைரஸ் பரவுவதைத் தடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை அவர்கள் அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும், கொரோனா வைரஸ் சூரிய ஒளி, அதிக வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் ஆகிய மூன்று விஷயங்களுக்கு உணர்திறன் கொண்டதாக அறியப்படுகிறது. சூரிய ஒளி ஒரு வைரஸின் வளர்ச்சியைப் பாதிக்கிறது, வெப்பம் அதைச் செயலிழக்கச் செய்கிறது.

இந்த விஷயத்தில் வல்லுநர்கள் விவாதிக்கும்போது, ​​கோடைக்காலம் இன்னும் ஒரு மாதமே உள்ளது, அதுவரை பரவுவதைத் தடுக்க எளிய நடவடிக்கைகளை மேற்கொள்வது விவேகமானதாக இருக்கும் என்கின்றனர்.

  • நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்கவும்
  • உங்கள் கண்கள், மூக்கு அல்லது வாயைத் தொடுவதைக் குறைக்க வேண்டும்
  • உடல்நிலை சரியில்லை என்றால், வீட்டில் இருக்கவும்
  • டிஷ்யூவை வைத்து தும்பு வேண்டும், பின்னர் அதைக் குப்பையில் எறிய வேண்டும்
  • கையில் டிஷ்யூ இல்லையென்றால், உங்கள் உள்ளங்கை வளைவில் தும்மவும்
  • கிருமி நாசினிகளைப் பயன்படுத்தவும்
  • அவ்வப்போது குறைந்தது 20 விநாடிகள் சோப்புடன் கைகளைக் கழுவ வேண்டும்

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com
ghlhe4k8

உலக சுகாதார அமைப்பின் கருத்தில் கூட, கொரோனா வைரஸ் பதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வெப்பநிலை உதவுக்கூடும் என்று நாம் நம்பக்கூடாது என்று கூறப்பட்டுள்ளது என்றார்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------