முகப்பு »  நலவாழ்வு »  உலகச் சிறுநீரக தினம்: சிறுநீரகக் கற்களுக்கான டயட்டில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!

உலகச் சிறுநீரக தினம்: சிறுநீரகக் கற்களுக்கான டயட்டில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!

உலக சிறுநீரக தினம் 2020: நீங்கள் எவ்வளவு நீரேற்றமாக இருக்கிறீர்களோ, சிறுநீரக கற்கள் மற்றும் பிற சிறுநீரக நோய்கள் உருவாகும் ஆபத்து குறையும் என்று சொல்லப்படுகிறது.

உலகச் சிறுநீரக தினம்: சிறுநீரகக் கற்களுக்கான டயட்டில் எதையெல்லாம் தவிர்க்க வேண்டும்!

உலக சிறுநீரக தினம் 2020: அதிக உப்பு உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

சிறப்பம்சங்கள்

  1. உலக சிறுநீரக நாள் மார்ச் 12ம் தேதிஅனுசரிக்கப்படுகிறது
  2. சிறுநீரக கற்கள் உங்கள் முதுகு, பக்கவாட்டில் கடுமையான வலியை ஏற்படுத்தும்
  3. சிறுநீரக கற்களின் அபாயத்தை குறைக்க போதுமான தண்ணீர் குடிக்கவும்

உலக சிறுநீரக தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 12ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. ஒட்டுமொத்த உடல்நலனுக்கும், ஆரோக்கியமான சிறுநீரகங்களின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதை இந்த நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், வெவ்வேறு சிறுநீரக நோய்கள் மற்றும் அவற்றை எவ்வாறு தடுப்பது என்பது பற்றிய தகவல்களையும் பரப்ப முயற்சி செய்யப்படுகிறது. சிறுநீரக கற்கள் மிகவும் கொடிய வலியை ஏற்படுத்தும் நிலை. இந்த கற்கள் சிறுநீரகங்களுக்குள் உருவாகும் கடினமான தேக்கம். இந்தச் சிறுநீரக கற்கள் விலா எலும்புக்குப் பக்கவாட்டிலும், மேல் பகுதி மற்றும் அடிப்பகுதிகளில் அதிகப்படியான வலியை ஏற்படுத்தும். சிறுநீரக கற்களின் பிற அறிகுறிகளில் சிறுநீர் கழிக்கும் போது வலி ஏற்படுதல், குமட்டல், வாந்தி, காய்ச்சல், குளிர், வழக்கமாகக் கழிக்கும் சிறுநீர் அளவை விட அதிகமாகச் சிறுநீர் கழித்தல் மற்றும் சிறுநீர் கழிக்க வேண்டிய கட்டாயம் ஆகியவையும் அடங்கும். சரியான டயட்டை பின்பற்றினால், சிறுநீரக கற்கள் பிரச்னையைக் குணமாக்கலாம். சிறுநீரகத்தை ஆரோக்கியத்தை வைத்திருக்க அதிகப்படியான குடிநீர் குடிக்க வலியுறுத்தப்படுகிறது. நீங்கள் எவ்வளவு நீரேற்றமாக இருக்கிறீர்களோ, சிறுநீரக கற்கள் மற்றும் பிற சிறுநீரக நோய்கள் உருவாகும் ஆபத்து குறையும் என்று சொல்லப்படுகிறது. சிறுநீரக கற்கள் இருக்கும் போது, உணவில் அடிப்படையாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்துத் தெரிந்துகொள்ளத் தொடர்ந்து படிக்கவும்.

உலக சிறுநீரக தினம் 2020: சிறுநீரக கற்கள் இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் அல்லது செய்யக்கூடாது

1. என்ன சாப்பிட வேண்டும்


உங்கள் உணவில் அதிக சிட்ரஸைச் சேர்க்கவும்: சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, திராட்சை, கிவி, எலுமிச்சை அல்லது அன்னாசிப் பழம் போன்ற பழங்கள் சிறுநீரக கற்கள் வளர்வதைத் தடுக்க உதவும். நீங்கள் இதைப் பழங்களாகவோ அல்லது ஜூஸாகவோ உட்கொள்ளலாம்.q0hqtu9

 உங்கள் உணவில் அதிக கால்சியம் சேர்க்கவும்: சிறந்த அளவிலான கால்சியம் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கவும் உதவும். உங்கள் உணவில் அதிகப்படியான பால் சார்ந்த பொருட்கள் அல்லது கால்சியம் நிறைந்த பருப்பு வகைகள், அடர் பச்சைக் காய்கறிகள், நட்ஸ் மற்றும் விதைகளைச் சேர்க்கவும். கால்சியம் உடலில் சேர்வதற்கு, உணவில் வைட்டமின் டி சேர்க்கலாம்.

தாவரம் சார்ந்த புரதத்தை உணவில் சேர்க்கவும்: உங்கள் உணவில் தாவரம் சார்ந்த புரதத்தை மிதமாகச் சேர்க்க அறிவுறுத்தப்படுகிறது. அதேசமயம், விலங்கு சார்ந்த புரதத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 

0hebftv8

2.எதைத் தவிர்க்க வேண்டும்

குறைவான உப்பு: அதிக சோடியம் உணவு சிறுநீரக கற்களை உருவாக்கும் அபாயத்தைக் கணிசமாக அதிகரிக்கும். பெரும்பாலான பதப்படுத்தப்பட்ட உணவுகளில் உப்பு மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். அதிக உப்பு உட்கொள்வதைத் தவிர்க்கவும்.

மாமிசப் புரதம்: பலர் புரத தேவைகளுக்கு விலங்கு சார்ந்த உணவுகளைச் சார்ந்து இருக்கிறார்கள். விலங்குகளை அடிப்படையாகக் கொண்ட புரதத்தை அதிகமாகச் சேர்ப்பது சிறுநீரில் உள்ள ரசாயனங்களின் அளவைக் குறைத்து, இது சிறுநீரக கல் உருவாவதை அதிகரிக்கிறது. அதனால், விலங்குகள் சார்ந்த புரதத்தை அளவோடு சாப்பிட அறிவுறுத்தப்படுகிறது.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com