முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட பலவற்றுக்கு உதவும் பப்பாளி!

உடல் எடை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட பலவற்றுக்கு உதவும் பப்பாளி!

உணவருந்திய பிறகு, கூடுதலாக ஒரு திருப்திக்கு பப்பாளி சாப்பிடலாம்

உடல் எடை, செரிமானக் கோளாறு உள்ளிட்ட பலவற்றுக்கு உதவும் பப்பாளி!

நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், எடை குறைக்க பப்பாளி உதவும்

சிறப்பம்சங்கள்

  1. People with type 2 diabetes can benefit by including papayas in diet
  2. The fruit can be included in weight loss diet
  3. Papaya can reduce effects of ageing on skin

பப்பாளி என்பது ஆரோக்கியமான பழங்களில் ஒன்றாகும். இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொண்டால் உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த உதவும். நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறீர்கள் என்றால் தினமும் பப்பாளி சாப்பிடலாம்.  அதை உங்கள் உணவில் சேர்க்கலாம்.

பப்பாளியை சிறிது தயிருடன் காலை உணவுக்கு சாப்பிடலாம். மற்ற பழங்களுடன் சேர்த்தும் சாப்பிடலாம். உணவருந்திய பிறகு, கூடுதலாக ஒரு திருப்திக்கு பப்பாளி சாப்பிடலாம்.

ஒரு சிறிய பப்பாளியில் (சுமார் 150 கிராம்) சுமார் 3 கிராம் ஃபைபர், 15 கிராம் கார்ப்ஸ், 1 கிராம் புரதம் உள்ளன. பரிந்துரைக்கப்பட்ட தினசரி உட்கொள்ளலில் 157% (ஆர்.டி.ஐ)  வைட்டமின் சி , வைட்டமின் ஏ  33%, 14 வைட்டமின் பி 9 அல்லது ஃபோலேட் 14%, மற்றும் பொட்டாசியம் 11% உள்ளது.

பப்பாளியின் சில நன்மைகள்:

1. எடை குறைப்பு: நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், எடை குறைக்க பப்பாளி உதவும். பழத்தில் கலோரிகளும் குறைவாக இருப்பதால், உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் பப்பாளி சாப்பிடலாம்.

2. செரிமானம்: பப்பாளிகளில் உள்ள நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்கவும், செரிமான மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. பப்பாயின் என்ற செரிமான நொதி இதில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

3. டைப் 2 நீரிழிவு நோய்:  டைப் 2 சர்க்கரை நோய் உள்ளவர்கள் நார்ச்சத்து உள்ள உணவை உட்கொள்வதன் மூலம் பயனடையலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்தவகையில், பப்பாளி சாப்பிட்டு வந்தால் இரத்த குளுக்கோஸ், லிப்பிட் மற்றும் இன்சுலின் அளவு மேம்பட உதவுகிறது. பப்பாளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன, அவை வயதானவர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.

g75t634

இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்க பப்பாளி உதவுகிறது
Photo Credit: iStock


Also read: 5 Diabetes-Friendly Snacks That Can Help You Beat Hunger Pangs

4. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்: பப்பாளியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உங்கள் இதயத்தைப் பாதுகாக்கும். அதிக பப்பாளியைச் சேர்ப்பது உங்கள் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

5. கண் ஆரோக்கியம்: ஜீயாக்ஸந்தின் என்பது பப்பாளியில் உள்ள ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும், இது கண் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உதவுகிறது.  தீங்கு விளைவிக்கும் நீல ஒளி கதிர்களிடம் இருந்து பாதுகாக்கிறது.

6. சரும வெடிப்பிலிருந்து பாதுகாக்கிறது: வைட்டமின் சி மற்றும் லைகோபீன் ஆகியவை தோல் வெடிப்பைப்  பாதுகாக்கும். மேலும், தோல் சுருக்கம், தொய்வு மற்றும் பிற தோல் சேதங்களை குறைக்கும்.

Disclaimer: This content including advice provides generic information only. It is in no way a substitute for qualified medical opinion. Always consult a specialist or your own doctor for more information. NDTV does not claim responsibility for this information.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------