முகப்பு »  நலவாழ்வு »  மன அழுத்தத்திலிருந்து விடுபட மஞ்சள் உதவுமா?

மன அழுத்தத்திலிருந்து விடுபட மஞ்சள் உதவுமா?

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி எடுத்துக் கொள்ளலாம்

மன அழுத்தத்திலிருந்து விடுபட மஞ்சள் உதவுமா?

சிறப்பம்சங்கள்

  1. மஞ்சளில் உள்ள கர்குமினில் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்
  2. மஞ்சள் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
  3. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி எடுத்துக் கொள்ளலாம்

கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி எடுத்துக் கொள்ளலாம். இந்திய சமையல் அறையில் பெரும்பான்மையாக உபயோகப் படுத்தப்பட்டு வரும் பொருள் மஞ்சள். சளி, இருமளைத் தாண்டி, மன அழுத்ததிற்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது.
 

turmeric

Photo Credit: iStock

எப்படி கட்டுப்படுத்தும்?

மஞ்சளில் உள்ள கர்குமினில் உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.

ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ராவிடம் கேட்ட போது "மஞ்சளில் இருக்கும் கர்குமின் பல பயன்களைத் தரும். எடுத்துக்காட்டாக, எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால், இது மன அழுத்தத்துக்கான நிவாரணியா என்று கேட்டால், அது சம்பந்தப்பட்ட ஆய்வு அறிக்கைகள் இன்னும் பெறப்படவில்லை".

குங்குமப்பூ போன்ற மூலிகைகளுடன் உபயோகப்படுத்தும் போது, இது கூடுதல் பயனுள்ளதாக அமைகிறது. மன அழுத்தத்திற்கு ஒரே மருந்தாக கருத முடியாது. மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் கட்டுப்படுத்த, சில நாட்கள் தேவைப்படும்.
 


turmeric

Photo Credit: iStock

அன்றாடம் அருந்தும் உணவில், மஞ்சள் சேர்ப்பது எளிமையான ஒன்று. நிறத்திற்காக மட்டுமல்லாமல், சுவைக்காகவும் உபயோகப்படுத்தலாம்.

மஞ்சளில் கர்குமின் அளவு குறைவாக இருப்பதால், அதிக அளவு குர்குமின் உள்ள மஞ்சள் தூளை உபயோகப்படுத்துவது அவசியம். இதை ஒரு சிட்டிகை உபயோகப்படுத்தினாலும் பெரிய பயன் அமையும்.
 

depression

Photo Credit: iStock

மஞ்சளும் மிளகும்:

கருமிளகுடன் சேர்த்து பயன்படுத்தினால், இது மேலும் நன்மைகளை அளிக்கும். கருமிளகில் உள்ள பிப்பரின், கர்குமினை உறிஞ்சும். இதை உணவிலும் சேர்க்கலாம்.

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

Photo Credit: iStock

பக்க விளைவுகள் இருக்கிறதா?

வாந்தி, ஒவ்வாமை போன்ற பக்க விளைவுகள் வரலாம். இவற்றை குறைக்க அளவைக் கட்டுப்படுத்தலாம். கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவரின் பரிந்துரையின் படி பயன்படுத்த வேண்டும்.

பித்த குழாய் செயலிழப்பு அல்லது குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் மன அழுத்தத்தை குணப்படுத்துவதற்காக மஞ்சள் அளவைப் பரிசோதிக்க வேண்டும். தேவையெனில் மருத்துவரை அணுகலாம்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------