முகப்பு »  நலவாழ்வு »  முகத்தின் எண்ணெய்த்தன்மையை போக்க, வீட்டிலேயே செய்யக்கூடிய 5 ஃபேஸ் மாஸ்க்ஸ்!

முகத்தின் எண்ணெய்த்தன்மையை போக்க, வீட்டிலேயே செய்யக்கூடிய 5 ஃபேஸ் மாஸ்க்ஸ்!

வீட்டிலேயே செய்ய கூடிய ஃபேஸ்மாஸ்க்குகளை பயன்படுத்தி வந்தால், இயற்கை முறையில் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையினை நீக்கலாம்

முகத்தின் எண்ணெய்த்தன்மையை போக்க, வீட்டிலேயே செய்யக்கூடிய 5 ஃபேஸ் மாஸ்க்ஸ்!

சிறப்பம்சங்கள்

  1. நம் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மை, அதிக அழுக்குகளை உள் இழுக்கும்
  2. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம், இயற்கை சுத்திகரிப்பாக பயன்படுகிறது
  3. முல்தானி மிட்டி வெள்ளரி மாஸ்க்கை வாரம் இரண்டு முறை பயன்படுத்தலாம்
நம் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையின் இருப்பினால், முகப்பரு போன்ற பிரச்சனைகள் அதிகம் ஏற்படும். மேலும், பளிச்சிடும் சருமத்தை இழக்க நேரிடும். சருமத்தில் உள்ள எண்ணெய்த்தன்மை, அதிக அழுக்குகளை உள் இழுக்கும். எனவே, எண்ணெய் தன்மையை நீக்குவது அவசியமான அழகு குறிப்புகளில் ஒன்றாகும். வீட்டிலேயே செய்ய கூடிய ஃபேஸ்மாஸ்க்குகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், இயற்கை முறையில் முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையினை நீக்கலாம்.
 
acne

எண்ணெய் தன்மையை போக்க, நம் வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய 5 ஃபேஸ்மாஸ்க்குகள் இதோ:

1. எலுமிச்சை, தயிர் ஃபேஸ்மாஸ்க்

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலங்கள், முகத்தில் ஏற்படும் எண்ணெய் சுரப்பிகளை குறைக்க உதவும். தயிரில் உள்ள லாக்டிக் அமிலங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை இயற்கையான முறையில் சுத்தம் செய்ய உதவும். மேலும், இறந்த உயிரணுக்களையும், முகத்தில் உள்ள எண்ணெய் தன்மையையும் நீக்க உதவும்.

இரண்டு ஸ்பூன் தயிர், எலுமிச்சை சாறு சேர்த்து கலக்க வேண்டும். பிறகு, முதத்தில் தேய்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு பரவ விடவேண்டும். பிறகு, சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். இதன் மூலம், முகத்தில் ஏற்படும் பருக்கள் குறையும். வாரம் ஒரு முறை இதை செய்து வந்தால் , எண்ணெய் தன்மை அற்ற முக சருமத்தை பெறலாம்.

lemon

2. முல்தாணிமிட்டி மற்றும் வெள்ளரி ஃபேஸ்பேக்

முகத்தில் உள்ள அழுக்குகளை போக்கவும், அதிக எண்ணெய் தன்மையினை நீக்கவும், முகப்பரு வரமால் தடுக்கவும் முல்தானிமிட்டி உதவுகிறது. வைட்டமின் சி நிறைந்த வெள்ளரி, முக சருமத்தில் உள்ள செபம், இறந்த உயிரணுக்களை நீக்குகிறது.

தண்ணீரில் ஊற வைக்கப்பட்ட இரண்டு ஸ்பூன் முல்தானிமிட்டியை எடுத்து கொள்ள வேண்டும். இதில், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு, இரண்டு ஸ்பூன் வெள்ளரி ஜூஸ் ஆகியவற்றை சேர்த்து கலக்கவும். பின், முகத்தில் தேய்த்து 15 முதல் 20 நிமிடங்கள் வைக்கவும். இந்த ஃபேஸ்மாஸ்க் அணிவதன் மூலம் எண்ணெய் தன்மையையும், முக சருமத்தில் உள்ள அழுக்குகளையும் நீக்க முடியும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இந்த மாஸ்க்கை பயன்படுத்தினால், முக சருமத்தில் மாற்றங்கள் தெரியும்.
 


cucumber

3. ஆரஞ்சு பீல்மாஸ்க்

பளிச்சிடும் சருமத்திற்கு ஆரஞ்சு தோல் உதவுகிறது. காய்ந்த ஆரஞ்சு தோல்களை பொடியாக்கி மாஸ்க் செய்யலாம்.

ஆரஞ்சு தோல் பொடியை தண்ணீரில் சேர்த்து, அதனுடன் தயிர், பால் சேர்த்து கலக்கவும். முகத்திற்கு தேய்த்து சிறிது நேரத்திற்கு பிறகு கழுவவும். இந்த மாஸ்க் பயன்படுத்துவதால், பளிச்சிடும் சருமத்தை பெறலாம்.

4. முட்டை வெள்ளை கரு ஃபேஸ்மாஸ்க்

சருமத்தில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய முட்டையின் வெள்ளை கரு உதவி செய்கிறது. முட்டையின் வெள்ளை கருவுடன் தயிர் சேர்த்து கலக்கி முகத்தில் தேய்த்து கொள்ளவும். முகம் காய்ந்தவுடன், சுத்தமான நீரில் கழுவவும். வாரம் ஒரு முறை இந்த மாஸ்க் பயன்படுத்தலாம்

இந்த மாஸ்க் தயாரிக்கப்படும்போது கிடைக்கும் முட்டையின் மஞ்சள் கருவை தலைமுடிக்கு பயன்படுத்தி கொள்ளலாம்.

5. ஓட்ஸ் மற்றும் அவகாடோ பழ மாஸ்க்

முக சருமத்தில் உள்ள எண்ணெய் தன்மையை நீக்க, ஓட்ஸ் உதவுகின்றது. அவகாடோவில் அதிக கொழுப்பு சத்து உள்ளது.

avocado

ஓட்ஸ் மற்றும் அவகாடோவை தண்ணீரில் ஊற வைக்கவும். பின்னர், ஊற வைத்த ஓட்ஸ் அவகாடோவைஅரைத்து இரண்டையும் சேர்த்து கலக்கவும். இந்த ஃபேஸ்மாஸ்க்கை முகத்தில் தேய்த்து 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைக்கவும். பின்னர் சுத்தமான நீரில் கழுவவும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------