முகப்பு »  நலவாழ்வு »  ஆயுளை அதிகரிக்கும் குக்கிங் ஆயில் எதுவென தெரிந்து கொள்வோமா…?

ஆயுளை அதிகரிக்கும் குக்கிங் ஆயில் எதுவென தெரிந்து கொள்வோமா…?

உலகளவில் நெய்யை ஆரோக்கியத்திற்கு ஏற்ற நல்ல கொழுப்பாக அங்கீகரித்துள்ளனர். அதில் ஷார்ட் செய்ன் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் நம்முடைய உடல் இதை எளிதாக ஏற்றுக்கொள்கிறது.

ஆயுளை அதிகரிக்கும் குக்கிங் ஆயில் எதுவென தெரிந்து கொள்வோமா…?

சிறப்பம்சங்கள்

  1. சமையலில் எண்ணெய் இல்லாமல் எந்தவொரு உணவும் முழுமை பெறுவதில்லை.
  2. நெய்யை ஆரோக்கியத்திற்கு ஏற்ற நல்ல கொழுப்பாக அங்கீகரித்துள்ளனர்.
  3. ஒரு முறை சூடு செய்த எண்ணெய்யை மறுமுறை உணவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்

சமையலில் எண்ணெய் இல்லாமல் எந்தவொரு உணவும் முழுமை பெறுவதில்லை.  இட்லிக்கு பொடி தொட்டு சாப்பிடுவது முதல் கேக் செய்வது, பொறியல், அவியல், என எது செய்வதாக இருந்தாலும் சமையல் எண்ணெய் இல்லாமல் எதையும் செய்ய முடியாது. இப்படி நம் உணவின் அனைத்திலும் கலந்திருக்கும் எண்ணெய்யை நாம்தான் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும்.  இன்றைய காலத்தில் வெண்ணெய், ஆலிவ் எண்ணெய், நிலக்கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சோயாபீன் எண்ணெய் என விதவிதமான எண்ணெய்கள் கிடைக்கின்றன.  

டெல்லியை சேர்ந்த ஊட்டச்சத்து நிபுணரான பூஜா மல்ஹோத்ராவிடம் இது குறித்து கேட்ட போது, “அனைத்து கொழுப்பு மற்றும் எண்ணெய் வகைகளும் ஒரே சமமான கலோரிகளையே கொண்டுள்ளன. ஆனால், ஒவ்வொரு எண்ணெய்யும் ஒவ்வொரு விதமான ஃபேட்டி ஆஸிட்டை கொண்டுள்ளன. ஃபேட்டி ஆஸிட் அளவை பொறுத்துதான் அந்த எண்ணெய் ஆரோக்கியமானதா இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்” என்கிறார்.  

சில ஆரோக்கியமான எண்ணெய் வகைகள் என்னென்ன என்பதை பார்ப்போமா… 


1. நெய்

உலகளவில் நெய்யை ஆரோக்கியத்திற்கு ஏற்ற நல்ல கொழுப்பாக அங்கீகரித்துள்ளனர். அதில் ஷார்ட்-செய்ன் கொழுப்பு அமிலங்கள் இருப்பதால் நம்முடைய உடல் இதை எளிதாக ஏற்றுக்கொள்கிறது. உடலின் க்ளைசெமிக் இண்டெக்ஸ், ஒபிசிட்டி, இன்சுலின் சுரப்பு குறைபாடு ஆகியவற்றை சரிசெய்கிறது. அதிகமாக சூடு செய்தாலும் அதில் ஆண்டிஆக்ஸிடின் அளவு குறையாமல் உள்ளது. மேலும், நெய் இதயத்திற்கு ஏற்ற நல்ல கொழுப்புச் சத்தை மட்டுமே கொடுக்கிறது. 

0o98jqv8

Ghee is now recognized as super fat.
Photo Credit: iStock

2. கடுகு எண்ணெய் 

கடுகு எண்ணெய்யில் மிக முக்கியமான ‘மோனோஸாட்டர்டு' கொழுப்பு அமிலங்கள் உள்ளது. இது உடலின் நல்ல கொழுப்பின் அளவை அதிகப்படுத்துகிறது. கடுகு எண்ணெய்யில் வறுத்து சாப்பிட்டாலும் அது எளிதில் ஜீரணமடைந்து விடும். 

3. ஆலிவ் ஆயில் 

உலகின் பல நாடுகளும் ஆலிவ் ஆயிலை பயன்படுத்துவதைப் பார்க்கலாம். இதில் உள்ள 'ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட்டிற்கு' இது மிகவும் பெயர் பெற்றது. ஆனால் இது இந்தியர்களுக்கான ஏற்ற எண்ணெய் வகை அல்ல. மத்திய தரைக்கடல் பகுதியை சேர்ந்த நாட்டினரின் சுற்றுச்சூழலுக்கும் வாழ்வியலுக்கும் மட்டுமே ஏற்றது. ஆனால் இந்தியா மற்ற நாடுகளைப் பார்த்து கார்பன் காப்பி எடுப்பது போல் இறக்குமதி செய்து ஆலிவ் ஆய்லை பயன்படுத்துகிறது. 

4. வெஜிடபிள் ஆயில் 

நாம் விதவிதமான வெஜிடபிள் ஆயில்களை பெற்றுள்ளோம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான எண்ணெய் பயன்படுத்துவதை பார்க்க முடியும்.  நீங்கள் கடற்கரைக்கு அருகில் இருந்தால் தேங்காய் எண்ணெய்யை தேர்ந்தெடுக்கலாம். தேங்காய் எண்ணெய் தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை ஊக்குவிப்பதோடு, மட்டுமல்லாமல் சர்க்கரை நோயாளிகளுக்கும் ஏற்றது தேங்காய் எண்ணெய். 

5. ரைஸ் பிரான் ஆயில் 

ரைஸ் பிரான் ஆயில் கூட நம்ம நாட்டின் சூழலுக்கு ஏற்ற ஆரோக்கியமான எண்ணெய்தான். இதில் ‘மோனோஸாடர்ட்' கொழுப்பு அமிலங்கள் மற்றும் ‘பாலி அன்ஸாடர்ட்' அமிலங்களும் இருக்கிறது. இதனால் ரைஸ் பிரான் ஆயில் உடலுக்கு நல்லது.

lgg2q57o

ஊட்டச்சத்து நிபுணர் பூஜா மல்ஹோத்ரா, “அனைத்து கொழுப்புகளிலும் ஆரோக்கியமற்றது ட்ரான்ஸ் ஃபேட் வகைகள் தான். நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யில்  ட்ரான்ஸ் ஃபேட் வகைகள் அதிகமாக இருந்தால் அதைப் பயன்படுத்துவதை தவிருங்கள். பொதுவாக இவை பேக்கரிகளில் பயன்படுத்துகிறார்கள். ட்ரான்ஸ் ஃபேட் என்பவைகளில் நம்மூரில் உள்ள வனஸ்பதி, டால்டா இவையெல்லாம் அடங்கும்.  

மேலும் ஊட்டச்சத்து நிபுணர் ‘சாட்டர்ட் ஃபேட்டி ஆஸிட்' கொண்ட உணவுகளை தவிர்க்கச் சொல்கிறார். பேக்கிரி பொருட்கள், க்ரீம், பேக் செய்யப்பட்ட உணவுகள், பாப்கார்ன்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது. பாதாம் பருப்பு, வால்நட்ஸ், பிஸ்தா, ஃப்ரஷான மீன் வகைகள், ஃப்ளக்ஸ் சீட்ஸ் மற்றும் சியா சீட்ஸ், ஆகியவற்றிலும் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகள் உள்ளன. 

1ffs8o38
Photo Credit: iStock

முடிவாக ஊட்டச்சத்து நிபுணர், “ஒரு முறை சூடு செய்த எண்ணெய்யை மறுமுறை உணவில் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தெருவோரக் கடைகளில் விற்கப்படும் சமோசா, கட்லட் மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடாமல் இருப்பது நல்லது. சிறு கடைகளில் ஒருமுறை பயன்படுத்திய எண்ணெய்யை மறுமுறை பயன்படுத்துவதால் அதில் உள்ள நல்ல கொழுப்புகள் உடையத் தொடங்குகின்றன. வறுத்த உணவுகளை சாப்பிட விரும்பினால் அதை வீட்டிலே செய்து சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது." என்று தெரிவித்தார்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com