முகப்பு »  நலவாழ்வு »  சிறுநீரக கல் பிரச்சனையை ஏற்படுத்தக் கூடிய உணவுகள்!

சிறுநீரக கல் பிரச்சனையை ஏற்படுத்தக் கூடிய உணவுகள்!

சிறுநீரக கல் ஏற்படுத்தக்கூடிய உணவுகளில் சிலவற்றைப் பற்றி இங்குக் காணலாம்

சிறுநீரக கல் பிரச்சனையை ஏற்படுத்தக் கூடிய உணவுகள்!

தினமும் நிறைய தண்ணீர் குடித்து வந்தாலே சிறுநீரகக் கல் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்

சிறப்பம்சங்கள்

  1. Kidney stones need medical treatment on time
  2. Drinking enough water can keep your kidneys in good shape
  3. Several medical conditions can also lead to kidney stones

சிறுநீரக கற்கள் கடுமையான வலியை ஏற்படுத்தக்கடியதாகும். இந்த கற்கள் சிறுநீரகங்கள் அல்லது சிறுநீர் பாதையில் உருவாகின்றன. இது கீழ் முதுகின் ஒரு பக்கத்தில் கடுமையான வலியை ஏற்படுத்தும். நம் உடலில் சிறுநீரக கற்கள் படிவதற்குப் பல காரணங்கள் உள்ளன. போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது, அதிக உப்பு மற்றும் சுகாதாரமற்ற உணவுகளை சாப்பிடுவது போன்றவை சிறுநீரக கற்களுக்கு வழிவகுக்கும். சிறுநீரக கற்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் நீங்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள் இங்கு காணலாம்.

1. அதிகப்படியான உப்பு நிறைந்த உணவுகள்:
அதிகப்படியான உப்பு உள்ள உணவுப்பொருட்களை உட்கொண்டால் சிறுநீரக கல் உருவாவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது. உப்பு சிறுநீரில் கால்சியம் உருவாவதை ஊக்குவிக்கிறது. எனவே, உப்பு நிறைந்த உணவுகளை நீங்கள் தவிர்க்க வேண்டும். மேலும், உணவுகளில் கூடுதல் உப்பு சேர்ப்பதைத் தவிர்க்கவும்.

2. மாமிச புரதம்
சிலவகையான புரதங்கள் குறிப்பாக மாமிச புரதங்கள், உங்கள் உடலில் யூரிக் ஆசிட் உற்பத்தியை அதிகரிக்கும். எனவே, அதற்குப் பதிலாக சியா விதைகள், குயினோவா, டோஃபு, பாலாடைக்கட்டி மற்றும் கொட்டைகள் போன்ற தாவர அடிப்படையிலான புரோட்டீன்களைத் தேர்வு செய்யலாம்.

3.ஆக்சலேட் கொண்ட உணவுகள்
ஆக்சலேட்டை மிதமாக உட்கொள்ளுங்கள். ஆக்சலேட் அதிகம் உள்ள உணவுகள் சிறுநீரக கற்களை உருவாக்குவதற்கு வழிவகுக்கும். ஆனால் உங்கள் ஆக்சலேட் இல்லாத உணவுகளை எடுக்கும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்.

4. குளிர்பானம்
கார்பனேற்றப்பட்ட பானங்கள் கேடுவிளைக்கும் பல சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. இவற்றில் குறைந்த  ஊட்டச்சத்து அல்லது ஊட்டச்சத்துக்களே இல்லாத சர்க்கரை சேர்க்கப்படுகின்றன. இது சிறுநீரகக் கல் உருவாகுவதற்கு வழிவகுக்கும்.

உங்கள் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க போதுமான தண்ணீர் குடிப்பதே நல்ல தீர்வாகும். போதுமான அளவு நீர் உட்கொள்வது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றச் செய்கிறது. இதன் மூலம் சிறுநீரக கற்களின் அபாயங்களை கணிசமாகக் குறைக்கவும் உதவுகிறது

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------