முகப்பு »  நலவாழ்வு »  ஆரோக்கியமான Vs ஆரோக்கியமற்ற கொழுப்புகள்! நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!

ஆரோக்கியமான Vs ஆரோக்கியமற்ற கொழுப்புகள்! நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!

மற்ற ஊட்டச்சத்துகளைப் போலவே கொழுப்புசத்தும் உடலுக்குத் தேவை. ஆனால், எல்லா கொழுப்புசத்துகளும் ஆரோக்கயமானவை அல்ல.

ஆரோக்கியமான Vs ஆரோக்கியமற்ற கொழுப்புகள்! நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை!!

மூளை செயல்பாடுகளுக்கும், ஆற்றல் மூலத்திற்கும் கொழுப்புகள் உதவுகிறது

சிறப்பம்சங்கள்

  1. Fats are an essential macronutrient for good health
  2. Nuts and seeds can provide you with healthy fats
  3. Ghee is a source of good fat that must be a part of your diet

நமது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் பெரும்பாலும் நாம் உணவில் இருந்தே பெறுகிறோம். அவற்றில் கொழுப்பு சத்தும் ஒன்றாகும். கொழுப்பு சத்துகள் நமது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது, விட்டமின்களை கிரகித்து இதயத்திற்கும், மூளைக்கும் நன்மை பயக்க உதவுகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் பொதுவாக நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், கொழுப்பின் மறு உருவம் ஒன்று உள்ளது. ஆம். உணவுப்பொருட்களில் ஊட்டச்சத்து பட்டியலில் நாம் காணும் அனைத்து கொழுப்பு சத்தும் ஆரோக்கியமானது அல்ல. 

இருவகையான கொழுப்பு சத்துகள் உள்ளதாக கூறப்படுகிறது. ஒன்று நிறைவுற்ற கொழுப்புகள், மற்றொன்று நிறைவுறா கொழுப்புகள். இந்த இரு கொழுப்பு சத்துகளைப் பற்றியும், இரண்டிற்கும் உள்ள வித்தியாசங்களைப் பற்றியும் இங்குக் காணலாம்.

ஆரோக்கியமான கொழுப்புகள்:

பொதுவாக மோனோ அன்சாட்ச்ருரேட் கொழுப்புகள் அல்லது பாலிஅனசாட்ச்ருரேட் கொழுப்புகள் தான் 'ஆரோக்கியமான கொழுப்பு'களாக அறியப்படுகிறது.  இதுவே உடலில் கெட்ட கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தி, நல்ல கொலஸ்ட்ராலை அதிகப்படுித்துகிறது. மேலும், கார்டியோவாஸ்குலர் உள்ளிட்ட நோய் அபாயங்களைக் குறைக்க உதவுகிறது. மேலும், எடை குறைப்புக்கும் உதவுகிறது.

மீன்கள், ஆளிவிதைகள், கொழுப்பு நிறைந்த மீன், தரையில் ஆளி விதை, வெண்ணெய், கனோலா, ஆலிவ், வேர்க்கடலை எண்ணெய் கொட்டைகள் மற்றும் PUFAs அதிகமுள்ள விதைகள் போன்றவற்றில் உள்ள கொழுப்புகள் ஆரோக்கியமானவை ஆகும். மேலும், MUFAs ஆனது சில கொட்டைகள், வெண்ணெய், ஆலிவ், திரவ தாவர அடிப்படையிலான சமையல் எண்ணெய்கள் (திராட்சை விதை, எள், சூரியகாந்தி, காய்கறி) மற்றும் சில விதைகள் மற்றும் விலங்குகளின் கொழுப்புகளிலும் காணப்படுகிறது.

 


mi0i4lu

அவோகேடோவில் நல்ல கொழுப்பு சத்துகள் உள்ளன
Photo Credit: iStock

ஆரோக்கியமற்ற கொழுப்புகள்:


Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

ஆரோக்கியமற்ற கொழுப்புகள் என்பது செயற்கையாக உருவாக்கப்படும் கொழுப்புகள் ஆகும். அதாவது, வெஜிடேபிள் எண்ணெய்களில் ஹைட்ரஜன் மூலக்கூறுகள் திணக்கப்படுவதால் ஏற்படும் கொழுப்புகள் ஆரோக்கியமற்றவை..இதற்கு Trans Fats என்று பெயர். 

பொதுவாக உறைந்த நிலையிலான உணவுகளில் Trans Fats காணப்படும். பீட்சா முதல் டோனட்ஸ், குக்கீஸ், கிராக்கர்ஸ், கேக் வகைகளில் காணப்படும் கொழுப்புகள் ஆரோக்கியமற்றவை ஆகும். 

Disclaimer: The opinions expressed within this article are the personal opinions of the author. NDTV is not responsible for the accuracy, completeness, suitability, or validity of any information on this article. All information is provided on an as-is basis. The information, facts or opinions appearing in the article do not reflect the views of NDTV and NDTV does not assume any responsibility or liability for the same.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------