முகப்பு »  நலவாழ்வு »  காய்ச்சலா...? கவலைபடாம இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க

காய்ச்சலா...? கவலைபடாம இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க

காய்ச்சல் இன்றைய நாளில் அனைத்து குடும்பங்களிலும் இடையறாது கேட்கும் வார்த்தை இதுதான்

காய்ச்சலா...? கவலைபடாம இந்த வீட்டு வைத்தியத்தை செய்யுங்க

காய்ச்சல் இன்றைய நாளில் அனைத்து குடும்பங்களிலும் இடையறாது கேட்கும் வார்த்தை இதுதான். வீட்டில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு காய்ச்சல் வந்து கொண்டே இருப்பதால் குடும்பமே நோயின் பிடியில் இருப்பது போல் தோன்றத் தொடங்கிவிடும். ஒருவருக்கு காய்ச்சல் என்பது தடாலடியாக வருவதில்லை. காய்ச்சலுக்கு வருவதற்கு முன் சில அறிகுறிகள் கொடுக்கவே செய்கிறது. அந்த அறிகுறிகளை கவனிக்கமலோ அல்லது பொருட்படுத்தாமலோ இருந்தால் மட்டுமே அறிகுறிகள் காய்ச்சலாக மாறுகிறது. காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் சளி, இருமல், தொண்டை வலி, தலைவலி, மூக்கடைப்பு, தும்மல் போன்ற அறிகுறிகள் தோன்றியதும் வீட்டிலே இருக்கும் சில பொருட்களை வைத்து முன்னெச்சரிக்கையாக கை வைத்தியங்களை செய்து கொண்டாலே போதும் காய்ச்சல் வருவதை தடுக்க முடியும். காய்ச்சலைத் தடுக்க சில வீட்டிலே செய்யக்கூடிய மருத்துவமுறைகளை தொகுத்து தருகிறது டாக்டர் தமிழ்.

அதிகமாக தண்ணீர் அருந்துவது

காய்ச்சல் உடலின் நீர்ச்சத்தை குறையச்செய்யும் குறிப்பாக வாந்தியோ அல்லது டைரியாவோ உங்களுக்கு வந்தால் கட்டாயம் உடலில் நீர்ச்சத்து குறையும். அதனால் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக் வேண்டும் அதனால் அதிகமாக தண்ணீர் கொடுப்பது நல்லது. அதனால் சூடான தண்ணீர் கூட அடிக்கடி குடிக்கலாம். ஃப்ரெஷ் ஜுஸ் அல்லது தேன் கலந்து ஹெர்பல் டீ போன்ற எதையாவது தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும். சூடான தண்ணீயில் இஞ்சி நறுக்கி போட்டு கொதிக்க வைத்து இஞ்சி தண்ணீர் குடிப்பதும் நல்லது. காபி, டீயை தவிர்ப்பது நல்லது.


சூப்

காய்ச்சல் நேரத்தில் சோறு, சப்பாத்தி போன்ற திட உணவுகளை சாப்பிடாமல் சூப் போன்ற திரவ உணவுகளை மட்டுமே சாப்பிடுவது நல்லது. சிக்கன் சூப் அல்லது காய்கறி சூப்களை குடிப்பது நல்லது. 'செஸ்டு' பத்திரிக்கை வெளியிட்ட ஆய்வின் முடிவில் சிக்கன் சூப்பில் காய்ச்சலின் அறிகுறைகளை குறைக்கும் தன்மையுடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஓய்வு

காய்ச்சல் நேரத்தில் உடலுக்கு ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம். அன்றாடம் உடற்பயிற்சி செய்பவர்கள் உடற்பயிற்சியை செய்யாமல் இருக்க வேண்டும். வாட்ஸ் அப், ஃபேஸ்புக்களுக்கும் விடுமுறை கொடுத்து விட்டு நன்றாக தூங்கி ஓய்வு எடுக்க வேண்டும்.

ஸ்டீம் (Steam)

காய்ச்சலில் ஒருநாளைக்கு 3 முறை கட்டாயம் ஸ்டீம் செய்யவது அவசியம். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து உங்களுக்கு பிடித்த தைலமோ அல்லது மஞ்சள் பொடி போட்டு ஆவி பிடிக்கலாம். நீராவியினால் உடலில் உள்ள நுரையீரலில் உள்ள வைரஸை அழிப்பதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது. குளிப்பதை சூடான தண்ணியில் குளிப்பது நல்லது. சூடான தண்ணீரில் டவலை நனைத்து உங்கள் உடல் சூடு தாங்கும் அளவில் நெற்றியில் போட்டு படுக்கலாம். அதை முகத்தில் போட்டு சுவாசிக்கு போது அதிலுள்ள நீராவி வைரஸ்களை அழித்து காய்ச்சலை குறைக்கிறது. தலைவலி மற்றும் சைனஸ் பிரச்சனைகளை குறைக்கிறது.

விட்டமின் சி

விட்டமின் சி மாத்திகளை தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அல்லது விட்டமின் சி நிறைந்த பழங்களை சாப்பிடுவதால் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. மேலும் சளி வராமல் தடுக்கவும் உதவுகிறது.

வாய்க்கொப்பளித்தல்

தொண்டை வலிக்கு சிறந்த நிவாரணம் உப்பு தண்ணீரைக் கொண்டு வாய்க் கொப்பளித்தாலே (Gargling) தொண்டை வலி படிப்படியாக குறைந்து விடும்.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------