முகப்பு »  நலவாழ்வு »  தீபாவளி இனிப்பு சப்பிடலாமா? உங்களுக்காக ருஜுதா திவ்கர் சொல்லும் பதில்!!

தீபாவளி இனிப்பு சப்பிடலாமா? உங்களுக்காக ருஜுதா திவ்கர் சொல்லும் பதில்!!

2018 தீபாவளியில் கவலையின்றி மனம் நிறையுமளவுக்கு இனிப்புகளை உண்டு மகிழுங்கள்! அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

தீபாவளி இனிப்பு சப்பிடலாமா? உங்களுக்காக ருஜுதா திவ்கர் சொல்லும் பதில்!!

பண்டிகை என்றாலெ அனைவருக்கும் புத்துனர்ச்சி தான். நம்முடைய கவலை மற்றும் துக்கங்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டு உறவினர், நன்பர்களுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடும் நேரம் இது. அதுவும் தீபாவளி என்றால் பட்டாசு மற்றும் பலகாரங்கள் தான் அனைவரின் மனதிலும் வரக்கூடிய விஷயம். இனிப்பு பலகாரங்கள் தீபாவளிக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் அது நம் மகிழ்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை எப்படி மேம்படுத்தும் என்பதையும் நியுட்ரீஷனிஸ்ட் ருஜுதா திவ்கர் சொல்கிறார்.

தீபாவளி இனிப்புக்களை சப்பிடலாமா?

ருஜுதா திவ்கர்-ஐ பொறுத்தவறையிலும் தீபாவளி இனிப்புக்கள் முற்றிலும் ஆரோக்கியமானது தான். வீட்டில் செய்யப்பட்ட லட்டு, அல்வா மற்றும் பர்ஃபி தீபாவளிக்கு சிறப்பு சேர்க்கும் பண்டங்கள். இவற்றை உண்டு மகிழ்வதோடு மட்டும் நிருத்திக் கொள்ளாமல் வீட்டிலேயே இதை எப்படி செய்வது என்பதை தெரிந்துக்கொண்டும் அதை அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுத்தும் வருவது நல்லது.


சாக்லேட் தொழிலில் இருக்கும் இருண்ட பக்கத்தை அனைவரின் பார்வைக்கும் கொண்டு வரும் வகையில், சாக்லேட் தொழிளில் தான் அதிகமான அளவில் குழந்தை தொழிளாலிகள் பயன்படுத்தப்படுக்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். மேலும், அவர் தீபாவளியை நமக்கு நன்மை அளிக்கும் இயற்க்கையான இனிப்புக்களை வீட்டிலேயே தயார் செய்து நம் பாரம்பரீய முறைப்படி இந்த தீபாவளியை கொண்டாடி மகிழுங்கள் என்று கூறுகிறார்.

dk7485uo

கடைகளில் வாங்கும் இனிப்புக்களை சாப்பிடலாமா?

கடைகளில் இருந்து லட்டு, ஷக்கர்பாரே போன்ற பல இனிப்புகளை சாப்பிடலாம். தீபாவளி இனிப்புகளை மதிய உணவின் ஒரு பகுதியாக சாப்பிடுவது உண்டு, அவை தாளி எனும் உணவின் முக்கிய பங்காகும். தீபாவளியை நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் மாறாமல் கொண்டாடி மகிழ வேண்டும்.

தீபாவளி இனிப்புகளில் இருக்கும் சர்க்கரையின் அளவு

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடுமோ என்ற பயத்தினாலேயே தீபாவளியன்றுக்கூட இனிப்புக்கள் சாப்பிடாமல் இருந்துவிடுகின்றனர். இவ்வாறானவர்களுக்கு ருஜுதா "வீட்டில் செய்யும் மிட்டாய் மற்றும் இனிப்புகளில் க்ளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாகவே இருப்பதால், சர்க்கரை நோய் உள்ளவர்களும் எந்த பயமுமின்றி தீபாவளிக்கு இனிப்புகளை சாப்பிட்டு மகிழலாம்" என்று கூறுகிறார்.

தீபாவளி அன்றே இனிப்புகளை சாப்பிட்டுவிட வேண்டுமென்று உணவின் அளவை குறைத்து கொள்வது அல்லது சாப்பிடாமலேயே எருந்துவிட வேண்டாம். வீட்டில் செய்யும் இந்த இனிப்பு பண்டங்களை 3 அல்லது 4 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். ஆகவே, இந்த வருடம் தீபாவளியை இனிப்பு பொங்க கொண்டாடுங்கள்.

இந்த 2018 தீபாவளியில் கவலையின்றி மனம் நிறையுமளவுக்கு இனிப்புகளை உண்டு மகிழுங்கள்! அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்!

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------