முகப்பு »  நலவாழ்வு »  உடல் வாயுப் பிரச்சனைகளுக்கான எளிமையான வீட்டு சிகிச்சைகள்

உடல் வாயுப் பிரச்சனைகளுக்கான எளிமையான வீட்டு சிகிச்சைகள்

உடலில் இருந்து வாயு வெளியேறினால், உடல் சரியான செயற்பாட்டில் உள்ளது என்பது உண்மை

உடல் வாயுப் பிரச்சனைகளுக்கான எளிமையான வீட்டு சிகிச்சைகள்

Simple home remedies to cure gas and bloating

சிறப்பம்சங்கள்

  1. வயிற்று வாயுப் பிரச்சனையால் வலி இருக்கும்
  2. அஜீரண பிரச்சனைகளுக்கு கொத்தமல்லி சரியான சிகிச்சையாக அமையும்
  3. வாயு வெளியேறினால், உடல் சரியான செயற்பாட்டில் உள்ளது

உடலில் இருந்து வாயு வெளியேறுவது சாதரண உடல் செயல்பாடாகும். எனவே, வாயு வெளியேறும் போது வெட்கப்படவோ, மறைக்கவோ எதுவும் இல்லை. வயிற்று விக்கம், வாயுப் பிரச்சனைகள் இருந்தால், உடல் செயல்பாடு சரியாக இல்லை என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்தப் பிரச்சனைகளுக்கு சில வீட்டு சிகிச்சைகள் உள்ளன.

கொத்தமல்லி

சூடான தண்ணீரில் காயவைத்த கொத்தமல்லி இலைகளை சேர்த்து குடித்தால், அஜீரணப் பிரச்சனைகளகளுக்கு, நல்ல மருந்தாக அமையும். வறுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகளில் மோரில் சேர்த்து குடித்தால், சுவையாகவும் உடல் வாயுப் பிரச்சனைகளுக்கும் தீர்வாகும்.
 

gas and bloating

Photo Credit: iStock


சமோமைல் தேநீர்

சமோமைல் தேயிலை பையினை 15 நிமிடங்களுக்கு சுடு தண்ணீரில் விடவேண்டும். பிறகு, தேயிலை பையினை எடுத்தவுடன், சிறிது எலுமிச்சை, தேன் கலந்து குடிக்கவும். உடலில் உள்ள அமில சுத்திகரிப்பு மற்றும் அஜீரணக் கோளாறுகள் மறையும். வயிற்றுப் பிரச்சனைகள் இருக்கும் போது, பாலில் கலந்து குடிப்பதை தவிர்க்கவும்
 

gas and bloating

Photo Credit: iStock

பெருஞ்சீர்கம்

வீட்டு சிகிச்சைகளில் அமில சுத்திகரிப்பு, வாயு, நெஞ்செரிச்சல், வயிறு வீக்கம் ஆகிய பிரச்சனைகள் தீர சீரகம் உதவும். கொதிக்க வைத்த சீரகத்தை மோரில் கலந்து, அல்லது சுடு தண்ணீரில் காய்ந்த சீரகத்தை கலந்து குடிக்க வேண்டும்

பூசணிக்காய்

உடலில் உள்ள வாயு பிரச்சனைகள் வராமல் இருக்க, பூசணிக்காய் உதவும். எனவே, உணவு வகைகளில் அவ்வப்போது பூசணிக்காய் எடுத்து கொள்வதனால், உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதாகும்.  வேகவைத்த பூசணியை சாப்பிடலாம்.

தண்ணீர்

தினமும் 8 டம்ளர் தண்ணீர் குடிப்பதனால், உடல் வாயு மலச்சிக்கல் பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம். அதிகாம தண்ணீர் குடித்தாலும் அது வயிற்று வீக்கம் உருவாக்கும்.  தண்ணீர் குடிப்பதான், உடல் பிரச்சனைகள் வரும்முன் காக்க முடியும்.

இலவங்கப்பட்டை

வயிற்று வாயூ மட்டும்  வயிற்று வலிக்கு இலவங்கப்பட்டை சரியான தீர்வு அளிக்கும். இலவங்க தேநீர் அல்லது ஒரு டம்ளர் பாலில், தேன், இலவங்கப்பட்டை சேர்த்து குடித்தால், வாயு பிரச்சனைகள் நீங்கும்.

 
gas and bloating

Promoted
Listen to the latest songs, only on JioSaavn.com

Photo Credit: iStock

வாயு வெளியேற்றம், சிரிப்பதற்கோ அல்லது மறைப்பதற்கான செயல் இல்லை. உடலில் இருந்து வாயு வெளியேறினால், உடல் சரியான செயற்பாட்டில் உள்ளது என்பது உண்மை.

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------