முகப்பு »  நலவாழ்வு »  உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்!!

உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்!!

ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும். உடல் எடை தானாக குறைந்து மெல்லிய உடற்கட்டை பெறுவீர்கள். 

உடல் எடை குறைக்க புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்!!

சிறப்பம்சங்கள்

  1. விரைவில் உடல் எடை குறைக்க இந்த புரதம் நிறைந்த ஸ்நாக்ஸ் சாப்பிடலாம்.
  2. மிகவும் எளிமையாக ஓட்மீலை தயாரிக்கலாம்.
  3. தினமும் ஒரு கைப்பிடி நட்ஸ் சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் நல்லது.

உடல் எடையை குறைக்க ஒரே வழி புரதம் நிறைந்த உணவை அதிகம் உட்கொள்வது தான்.  புரதம் நம் பசியை போக்கி, மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும்.  புரதம் நிறைந்த உணவை சாப்பிடுவதன் மூலம் உடலிலுள்ள கொழுப்பு குறைந்து, தசைகள் வலுவாக இருக்கும்.  இறைச்சி, மீன், பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளில் புரதம் நிறைந்திருக்கிறது.  ஆனால், உடல் எடை குறைக்க இவற்றை மட்டுமே சாப்பிட்டால் சலித்து போய்விடும் என்பதால் சற்றே வித்தியாசமான மற்றும் எளிமையான உணவுகளை பரிந்துரைக்கிறோம். 

sboor648


முட்டை:

முட்டையில் புரதம் அதிகமாக இருக்கிறது என்பதால் தான் தசை வளர்ச்சிக்கு தினசரி முட்டை சாப்பிடும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.  இதில் இரும்பு சத்து, அமினோ அமிலம் மற்றும் ஆண்டிஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கிறது.  வேகவைத்த முட்டையை பேன் கேக் அல்லது ஸ்மூத்தியில் சேர்த்து சாப்பிடலாம்.  எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய எளிமையான புரதம் நிறைந்த உணவு முட்டை. 

காட்டேஜ் சீஸ் அல்லது டோஃபு:

உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காட்டேஜ் சீஸ்ஸை ஸ்நாக்ஸ் போல சாப்பிடலாம்.  குறிப்பாக பகல் நேரத்தில் நீங்கள் எப்போதெல்லாம் பசியாக உணர்கிறீர்களோ அப்போதெல்லாம் ஒரு ஸ்லைஸ் சீஸ் சாப்பிடலாம்.  சோயாபீன்ஸில் இருந்து தயாரிக்கப்படுவதுதான் டோஃபு.  இது இருதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.  அதேபோல், காட்டேஜ் சீஸில் கால்சியம் மற்றும் மினரல் இருப்பதால் எலும்புகள் உறுதியாகும். 

யோகர்ட்:

ப்ளைன் மற்றும் க்ரீன் யோகர்டில் கால்சியம், புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.  தற்போது செயற்கை இனிப்பு சேர்க்கப்பட்ட யோகர்ட் கிடைக்கிறது.  அதனை தவிர்த்துவிட்டு இனிப்பு சேர்க்கப்படாத யோகர்டை வாங்கி சாப்பிடலாம்.  ப்ளைன் யோகர்டில் பெர்ரீஸ் அல்லது வேறு பழங்கள் மற்றும் ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பு.  பழங்களை கொண்டு ஸ்மூத்தி செய்து அதில் யோகர்ட் சேர்த்தும் சாப்பிடலாம்.  ருசியாக இருக்கும். 

ஓட்மீல்:

ஓட்மீலில் நார்ச்சத்து, புரதம் மற்றும் கார்போஹைட்ரேட் நிறைந்திருக்கிறது.  இதனை மிகவும் எளிமையாக தயார் செய்யலாம்.  இதில் பழங்கள் மற்றும் நட்ஸ் சேர்த்து கொண்டால் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ரெடி.  ஆனால் இதில் சர்க்கரை சேர்க்க கூடாது. 

நட்ஸ் அல்லது நட் பட்டர்:

பாதாம், வால்நட், முந்திரி மற்றும் பிஸ்தா போன்ற ட்ரை ஃப்ரூட்ஸில் புரதம் மற்றும் உடலுக்கு தேவையான ஆரோக்கிய கொழுப்புகள் அடங்கியிருக்கிறது.  ஒரு கைப்பிடி நிறைய ட்ரை ஃப்ரூட்ஸை தினமும் சாப்பிட்டு வரலாம் அல்லது நட் பட்டர் சாப்பிடலாம்.  நட் பட்டரை ஸ்மூத்தி அல்லது டோஸ்டுடன் சேர்த்து சாப்பிடலாம். 

இப்படியான ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்களை தினசரி சாப்பிட்டு வந்தாலே போதும். உடல் எடை தானாக குறைந்து மெல்லிய உடற்கட்டை பெறுவீர்கள். 

கருத்து

நல வாழ்வுக்கான ஆரோக்யக் குறிப்புகள், நிபுணர்களின் ஆலோசனைகள், உணவுக் கட்டுப்பாட்டு போன்றவை பற்றிய செய்திகளை தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamil பின் தொடருங்கள்.

................... விளம்பரம் ...................

................... விளம்பரம் ...................

 

................... விளம்பரம் ...................

-------------------------------- விளம்பரம் -----------------------------------
Listen to the latest songs, only on JioSaavn.com